ஹிஜாப் பிரச்சினையை கிளப்பிய வார்டில் பாஜக டெபாசிட் இழப்பு!

மதுரை (22 பிப் 2022): மதுரை மேலூரில் வாக்குப்பதிவு நடைபெற்ற தினத்தில் பாஜக பூத் ஏஜெண்ட் ஹிஜாபை கழற்றச் சொன்ன வார்டில் திமுக வெற்றி பெற்றுள்ளது. பாஜக அங்கு டெபாசிட் இழந்தது. மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் அமைக்கப்பட்ட 44 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் மேலூரில் உள்ள சுந்தரேஸ்வர வித்யாலயா பள்ளியில் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில், மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சியின் 8வது வார்டில் திமுக வேட்பாளரான முகமது யாசின் (சேர்மன் வேட்பாளர்)…

மேலும்...

மதுரையில் டெபாசிட் இழந்த திமுக!

மதுரை (22 பிப் 2022): மதுரையில் ஒரு வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளரிடம் திமுக அதிமுக இரு கட்சி வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். தமிழ்நாட்டின் 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 489 பேரூராட்சி ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று (22ஆம் தேதி) வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. அதன்படி, 21 மாநகராட்சி அனைத்திலும் திமுக முன்னிலை வகித்துவருகிறது. 138 நகராட்சியில் திமுக கூட்டணி 128…

மேலும்...

ஹிஜாபை அகற்றச்சொன்ன பாஜகவை சேர்ந்தவர் சிறையிலடைப்பு!

ஹிஜாபை அகற்றச்சொன்ன பாஜகவை சேர்ந்தவர் சிறையிலடைப்பு! மதுரை (20 பிப் 2022): மதுரை மேலூரில் முஸ்லீம் பெண்ணின் ஹிஜாபை அகற்றச் சொன்ன பாஜகவை சேர்ந்தவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சியின் 8 ஆவது வார்டில் உள்ள அல்அமீன் பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்காளர்களிடம் ஹிஜாப்பை அகற்றுமாறு பா.ஜ.க. முகவர் கிரிநந்தன் வலியுறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜ.க. முகவர் கிரிநந்தன் கூறியதற்கு தேர்தல்…

மேலும்...

மதுரை அருகே முஸ்லீம் வாக்காளர்களின் ஹிஜாபை அகற்றக் கூறிய பாஜக பூத் ஏஜெண்ட்!

மதுரை (19 பிப் 2022): மதுரை மாவட்டம் மேலூரில் பாஜக பூத் ஏஜெண்ட் முஸ்லீம் பெண் வாக்காளர்களின் ஹிஜாபை அகற்றக் கூறியதால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலூர் நகராட்சி 8-வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்குச்சாவடியில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. அப்போது வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்கள் அணிந்திருந்த ஹிஜாபை அகற்ற சொல்லி பாஜக பூத் ஏஜெண்ட் கிரிராஜன் என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வாக்குப்பதிவு சிறிது…

மேலும்...

மதுரையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து!

மதுரை (28 ஆக 2021): மதுரையில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. மதுரை நத்தம் சாலையில் சாலையில் புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலம் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் இந்த விபத்தில் இரண்டு கட்டுமான பணியாளர்க்கிறாள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இருப்பினும், விபத்தின் இடுபாடுகலில் இருவரை தவிர வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என்பது குறித்து…

மேலும்...

நள்ளிரவு வரை நன்றாக படித்துக் கொண்டிருந்தாள் – நீட் தேர்வு பயத்தால் மற்றொரு மாணவி தற்கொலை!

மதுரை (12 செப் 2020): நீட் தேர்வு பயத்தால் மதுரையை சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா(19) தற்கொலை செய்துகொண்டுள்ளார். மதுரை ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா. இவரது தந்தை முருகசுந்தரம் எஸ்.ஐ., ஆக உள்ளார். 6வது சிறப்பு பட்டாலியன் குடியிருப்பில் இவர்களது குடும்பம் வசித்து வந்தது. ஜோதி ஸ்ரீ துர்கா, நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்தார். நள்ளிரவு வரை அவர் படித்துக் கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் நாளை நீட்…

மேலும்...

ரிலாக்ஸ் ஆகும் சென்னை – டென்ஷன் ஆகும் மதுரை!

சென்னை (10 ஜூலை 2020): தமிழகத்திலேயே சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து கொண்டிருந்தாலும் மதுரையில் கிடுகிடுவென அதிகரித்துக் கொண்டுள்ளது. சென்னையில் தினமும் 2,000-க்கும் அதிகமாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது அது 1,200 வாக்கில் உள்ளது. அதே நேரத்தில் தென் தமிழகத்தின் முக்கிய நகரமான மதுரையில் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு ஐந்து மடங்கு வரை அதிகரித்துள்ளது. மதுரையில் கடந்த ஜூன் 23 ஆம் தேதி முதல் ஜூலை 9 ஆம்…

மேலும்...

கொரோனா பாதிப்பால் சென்னைக்கு நிகரான மதுரை!

சென்னை (04 ஜூலை 2020): தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்தபடியே உள்ளன. உலகையே புரட்டிப் போட்டுள்ள கொரோனாவால் இந்தியாவும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, சென்னை உள்ளிட்ட தலைநகரங்கள் அதிக அளவில் பாதிப்பை சந்தித்துள்ளன. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடீயாக மதுரை அதிக அளவில் பாதிப்பை சந்தித்துள்ளன. கொரோனா பாதிப்பு துவங்கி 100 நாளை கடந்துவிட்டது. ஆனால் மதுரையில் வைரஸின் பரவல் வேகம் ஜூன் பாதியில் தான்…

மேலும்...

லாக்கப் – விசாரணைக் கைதிகளின் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி – நீதிபதிகள் ஆதங்கம்!

மதுரை (24 ஜூன் 2020): சாத்தான்குளம் தந்தை மகன் லாக்கப் மரணம் தொடர்பான விசாரணையில் லாக்அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தினர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் போலீஸ் கஸ்டடியில் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள்…

மேலும்...

மதுரையிலும் பொதுமுடக்கம் – தமிழக அரசு அறிவிப்பு!

மதுரை (22 ஜூன் 2020): மதுரையில் நாளை நள்ளிரவு முதல் ஜூன் 30 தேதி வரையில் முழு பொது முடக்கம் கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள், பரவை டவுண் பஞ்சாயத்து, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் ஜூன் 23 நள்ளிரவு முதல் ஜூன் 30 வரையில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. சுகாதாரத்துறை வல்லுனர்கள், மருத்துவ…

மேலும்...