வெறுப்பு அரசியல் – மன்மோகன் சிங் உள்ளிட்ட 108 முக்கிய பிரமுகர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்!

புதுடெல்லி (26 ஏப் 2022) : நாட்டில் வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு பிரதமர் மோடியை வலியுறுத்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட 108 முக்கிய பிரமுகர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இதுகுறித்த அந்த கடிதத்தில் “முன்னாள் அரசு ஊழியர்களாகிய நாங்கள், இதுபோன்ற தீவிர வார்த்தைகளை வெளிப்படுத்த விரும்புவதில்லை, ஆனால் நமது நாட்டின் தந்தைகளால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு கட்டிடம் இடிக்கப்பட்டு வருகிறது, இது எங்கள் கோபத்தையும் வேதனையையும் வெளிபடுத்தத் தூண்டுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களான அசாம், குஜராத்,…

மேலும்...

மன்மோகன் சிங் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்!

புதுடெல்லி (01 நவ 2021): உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் காய்ச்சல் மற்றும் சோர்வு காரணமாக மன்மோகன் சிங் கடந்த 13ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மன்மோகன் சிங்குக்கு இருதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் 18 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை…

மேலும்...

மிகவும் மோசமாக இருக்கிறது – மன்மோகன் சிங் கவலை!

புதுடெல்லி (24 ஜூலை 2021): இந்திய பொருளாதார வீழ்ச்சி குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டு மக்கள் அனைவரும் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி தங்களை நோய்த்தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவில் 30 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய தலைமையில் தாராளமயமாக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை இப்போது நான் நினைவு கூறுகிறேன். அப்போது என்னுடைய…

மேலும்...

வீடு திரும்பினார் மன்மோகன் சிங்!

புதுடெல்லி (12 மே 2020): உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று வீடு திரும்பினார். முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், திடீர் உடல் நலக் குறைவால், ஞாயிறு இரவு டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில், மன்மோகனுக்கு பாதிப்பு இல்லையென உறுதியானது. அவரது உடல்நிலை சீரானதை அடுத்து இன்று (மே 12) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

மேலும்...

மனமோகன் சிங் உடல் நிலை அப்டேட்!

புதுடெல்லி (11 மே 2020): முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நெஞ்சு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், டாக்டர் நிதீஷ் நாயர் தலைமையிலான மருத்துவ குழுவினர் தொடர்ந்து அவரை கண்காணித்து வருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இந்த நிலையில், கொரோனா நோய்தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனை…

மேலும்...

BREAKING NEWS: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டாக்டர் மன்மோகன் சிங் நெஞ்சு வலியின் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 87 வயதான மன்மோகன் சிங் இன்று இரவு 8.45 மணியளவில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 2009 ஆம் ஆண்டு இருதய அறுவை சிசிச்சை செய்தது குறிப்பிடத்தக்கது. Delhi: Former Prime Minister Dr Manmohan Singh has been admitted to…

மேலும்...

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் உயர் மட்டக் குழு!

புதுடெல்லி (19 ஏப் 2020): நாட்டின் முக்‍கிய பிரச்சனைகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்‍கை எடுப்பதற்கு ஏதுவாக புதிய உயர்மட்ட ஆலோசனைக்‍ குழுவை காங்கிரஸ் கட்சித் தலைவர் திருமதி சோனியா காந்தி நியமித்துள்ளார். முன்னாள் பிரதமர் டாக்‍டர் மன்மோகன் சிங் தலைமையிலான குழுவில், திரு. ராகுல் காந்தி, திரு. ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, திரு. கே.சி. வேணுகோபால், திரு. ப. சிதம்பரம், திரு. மணிஷ்திவாரி, திரு. ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட 11 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்தக்‍ குழு நாள்தோறும் சந்தித்து,…

மேலும்...

இந்தியா பேராபத்தில் உள்ளது – மன்மோகன் சிங் பரபரப்பு கட்டுரை!

புதுடெல்லி (06 மார்ச் 2020): இந்தியாவில் நடக்கும் இனப்படுகொலைகள், பொருளாதார மந்தநிலை, மற்றும் உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் உள்ளிட்டவைகளால் இந்தியா பேராபத்தில் உள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இந்து பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதாவது: “சமூக ஒற்றுமையின்மை, பொருளாதார மந்தநிலை மற்றும் உலக அளவில் வேகமாக பரவி வரும் தொற்றுநோய் (கொரோனா வைரஸ்) ஆகிய மூன்று பிரச்சனைகளால் இந்தியா உடனடியாக மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளது என்று மன்மோகன் சிங் தி…

மேலும்...

நேருவின் வரலாற்றை அழிக்க முடியாது – மன்கோகன் சிங்!

புதுடெல்லி (22 பிப் 2020): ” நேரு உருவாக்கிய பாரத் மாதாகி ஜே என்ற வாசகம் ஒரு சாராரால் தவறாக பயன்படுத்தப்படுகிறது,” என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். ஜவஹர்லால் நேருவின் படைப்புகள் மற்றும் உரைகள் குறித்த புத்தகத்தை அறிமுகப்படுத்திய கூட்டத்தில் உரையாற்றிய மன்மோகன் சிங், பாஜகவை நேரடியாகவே குற்றம் சாட்டினார். மேலும் அவர் பேசுகையில், “நாடு மிகவும் கொந்தளிப்பான தருணத்தில் ஜவஹர்லால் நேரு இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார். உண்மையில் அவரை நினைத்து பெருமைப் படுகிறேன்….

மேலும்...

ஒன்றும் புரியவில்லை – பட்ஜெட் குறித்து மன்மோகன் சிங் கருத்து!

புதுடெல்லி (02 பிப் 2020): நீண்ட நேரம் பட்ஜெட் வாசித்ததால் ஒன்றும் புரியவில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மல சீதாராமனால் சமர்ப்பிக்கப் பட்டது. இந்நிலையில் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள மன்மோகன் சிங், மிக நீண்ட பட்ஜெட். அதனால் என்னால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. புரிந்து கொள்ள வெக நேரம் தேவைப்படுகிறது என்றார். இதுதவிர காங்கிரஸ் தலைவர்கள் பலரும் மத்திய பட்ஜெட் வெற்று…

மேலும்...