மூன்று கிலோமீட்டர் ஓடிச்சென்று அவசர அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்!

பெங்களூரு (12 செப் 2022): சில மருத்துவர்களின் செயல்கள் மிகவும் மெச்சத்தகுந்ததாக இருக்கும் அப்படி ஒரு மருத்துவர் சாலையில் ஓடிச்சென்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்டுள்ளார். டாக்டர். கோவிந்த் சர்ஜாபுரா சாலை மணிப்பால் மருத்துவமனையில் காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் ஆக உள்ளார். இந்நிலையில் பித்தப்பை நோயால் கடுமையான வலியால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு அவசர அறுவை சிகிச்சை திட்டமிடப்பட்டது. அதன்படி மருத்துவர் கோவிந்த் மருத்துவமனையை நோக்கி அவரசமாக காரில் சென்றார். மருத்துவரின் கார் சர்ஜாபுரா-மரத்தஹள்ளி சாலையில் வந்தபோது போக்குவரத்தில் சிக்கியது. ஆனால் போக்குவரத்து…

மேலும்...

நடிகர் சூர்யாவால் டாக்டரான மாணவி!

சில நாட்களுக்கு முன்பு வெளியான ஜெய்பீம் திரைப்படம் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தையும், சில சர்ச்சைகளைக்கும் உள்ளாகியுள்ளது. அதனை தொடர்ந்து நடிகர் சூர்யா இருளர் இன மக்களின் கல்விக்காக ரூ.1 கோடி நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் என்பதும் குறிப்பிடதக்கது. இதனை திரைப்பட பிரமோஷன் என்றும் கூறுகின்றனர் சிலர், ஆனால் அவரின் சமூக பங்களிப்பு 2006 ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது எனலாம். கல்வியால் மட்டுமே சமூகத்திலும் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை உணர்ந்த நடிகர் சூர்யா…

மேலும்...

அரசு மருத்துவமனை குறித்து அதிர வைக்கும் தகவல் – மருத்துவரின் பரபரப்பு இறுதி நிமிடங்கள்!

இராஜபாளையம் (28 ஜூலை 2020): கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் உயிரிழந்த மருத்துவர் இறப்பதற்கு முன்பு வெளியிட்ட ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில், மருத்துவமனை நடத்தி வந்த மருத்துவர் சாந்திலால், கடந்த 10-ம் தேதி, கொரோனா தொற்று காரணமாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் உயிரிழந்துள்ளார். இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது….

மேலும்...

கொரோனா வைரஸ் பாதிப்பால் குவைத்தில் இந்திய மருத்துவர் மரணம்!

குவைத் (10 மே 2020): குவைத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்திய மருத்துவர் மரணம் அடைந்துள்ளார். பல் மருத்துவரான வாசுதேவ ராவ் (54) கொரோனா வைரஸ் பாதிப்பால் குவைத்தில் உயிரிழந்துள்ளார். இவர் குவைத்தில் 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். குவைத்தில் ஏற்கனவே எகிப்தை சேர்ந்த தாரிக் ஹுசைன் என்ற மருத்துவர் உயிரிழந்த நிலையில் தற்போது குவைத்தில் கொரோனாவினால் உயிரிழந்த இரண்டாவது மருத்துவர் வாசுதேவ ராவ் என்பது குறிப்பிடத்தக்கது. Source: Gulf News

மேலும்...

நோயாளிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட மருத்துவருக்கு ஆயுள் தண்டனை!

லண்டன் (08 பிப் 2020): நோயாளிகளிடம் பாலியல் சில்மிஷங்களில் ஈடுபட்ட இந்திய மருத்துவருக்கு, மூன்று ஆயுள் தண்டனை வழங்கி லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. லண்டனில் மருத்துவம் பயின்று அங்கேயே சிகிச்சை அளித்து வரும் இந்திய மருத்துவர் மனீஷ் நட்வர்லால் ஷா. இவர் மருத்துவமனைக்கு வரும் பெண்களிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபடுவதாக நோயாளிகள் மனீஷ் மீது குற்றம் சுமத்தினர் . மேலும் பெண் நோயாளிகள் வந்தால் அவர்களிடம் மர்ம உறுப்புகளை சோதனை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியும் பயமுறுத்தியும்…

மேலும்...

கொரோனா நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மரணம்!

பீஜிங் (06 பிப் 2020): சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரசால் இதுவரை, 563 பேர் உயிரிழந்துள்ளனர்; 28 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளனர் இந்ந்நிலையில் வுஹான் நகரில் உள்ள மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 10 நாட்களாக, ஓய்வுறக்கமின்றி நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த, சாங்…

மேலும்...

மயக்க மருந்து கொடுக்கும் மருத்துவர் மயக்க ஊசி போட்டு தற்கொலை!

திருச்சி (30 ஜன 2020): திருச்சியில் மருத்துவர் ஒருவர் தனக்குத் தானே விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் தென்னூர் பகுதியில் மிகப் பிரபலமான மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக இருப்பவர் சரவணன். கடந்த 26 ஆம் தேதி சரவணன் மருத்துவமனையில் இரவு பணியில் இருந்தார். அப்போது மருத்துவமனையின் நான்காவது தளத்தில் உள்ள அறைக்குச் சென்று அவர் திடீரென தனது இடது கையில் மயக்க ஊசி அதிக அளவில் போட்டுக்கொண்டார்….

மேலும்...

கின்னஸ் சாதனை விருது பெற்ற கோவை மருத்துவர்!

கோவை (14 ஜன 2020): கோவை மருத்துவர் அரவிந்த் சங்கருக்கு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டது. குழந்தையின்மை சிகிச்சையில் பெரும்பாலும் பெண்களே பங்கேற்கும் நிலையில், முதன்முறையாக குழந்தையின்மை சிகிச்சை குறித்த விழிப்புணர்வை ஆண்களுக்கும் ஏற்படுத்தும் வகையில், “குழந்தையின்மையில் ஆண்களின் பங்கு’ என்ற தலைப்பிலான கருத்தரங்கு கோவை ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையம் சார்பில் நடத்தப்பட்டது. இதில் அதிக அளவிலான ஆண்களைப் பங்கேற்க வைத்ததன் அடிப்படையில் ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையத்தின் முதன்மை மருத்துவர் அரவிந்த் சந்தருக்கு கின்னஸ் சாதனைக்கான விருது…

மேலும்...