உத்திர பிரதேசத்தில் கட்டணம் செலுத்தாத சிறுவன் மீது பள்ளி மேலாளர் கொடூர தாக்குதல் – அதிர்ச்சி வீடியோ!

லக்னோ (13 பிப் 2023): த்தரபிரதேச மாநிலம், மேஜா நகரில் கட்டணம் செலுத்தத் தவறியதாகக் கூறி எட்டு வயது சிறுவனை பள்ளி மேலாளர் அடித்து துன்புறுத்தும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட யோகேஷ் குப்தா அவரை ஒரு தடிமனான குச்சியால் அடிக்கும் போது குழந்தை பெஞ்சில் படுத்திருப்பதைக் வீடியோவில் காணலாம். தற்போது குற்றவாளி 28 வயது யோகேஷ் குப்தா என்ற் பள்ளி மேலாளர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். “இந்த சம்பவம் மூன்று…

மேலும்...

முஸ்லிம் மாணவனை தீவிரவாதிபோல் இருப்பதாக கூறிய ஆசிரியர் பணியிடை நீக்கம்!

பெங்களூரு (28 நவ 2022): கர்நாடக மாநிலத்தில் மாணவனை தீவிரவாதிபோல் இருப்பதாக கூறிய கல்லூரி பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கரநடக மாநிலம் உடுப்பியில் உள்ள மணிபால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் உள்ள ஒரு பேராசிரியர் வகுப்பில் ஒரு மாணவனின் பெயரைக் கேட்டார். முஸ்லீம் பெயரை கூறிய அந்த மாணவனைப் பார்த்து , “ஓ, நீங்கள் அஜ்மல் கசாப் போல இருக்கிறீர்கள்” என்று கூறினார். மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அஜ்மல் கசாப்பை குறிப்பிட்டே…

மேலும்...

பிஞ்சு மனதில் சாதி வெறி – பள்ளி மாணவர்களிடையே நடந்த மோதலில் ஒரு மாணவர் பலி!

திருநெல்வேலி (30 ஏப் 2022): நெல்லையில் பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை அடுத்துள்ள பள்ளக்கால் புதுக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த சில வாரமாக +2 மாணவர்கள், தங்கள் சமூகத்தின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் சாதிக்கயிறு கட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. +2 மாணவர்கள் சிலர், இந்த விவகாரத்தில் ஒருவரை ஒருவர்…

மேலும்...

ரஷ்யா – உக்ரைன் போரில் இந்திய ஒருவர் மாணவர் படுகாயம்!

புதுடெல்லி (04 மார்ச் 2022): ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போரில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்த சில நாட்களில், உக்ரைன் தலைநகரில் இந்திய மாணவர் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ANI இடம் பிரத்தியேகமாகப் பேசிய, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கான (MoS) இணை அமைச்சர் (MoS) ஜெனரல் VK சிங், இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். “கியேவில் வசித்து வந்த இந்திய மாணவர் சுடப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். இதற்கிடையே எல்லோரும் கியேவை விட்டு…

மேலும்...
Neelagiri-Student

இத்தாலியில் மருத்துவம் பயின்று வந்த தமிழக மாணவர், தற்கொலை!

ரோம்  (22 ஆக. 2020): நீலகிரி மாவட்டம், கீழ்க்கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் சதானந்த். ஒரு தேயிலை விவசாயி. இவருடைய இரண்டாவது மகன் பிரதிக்ஷ் வயத 21! இத்தாலியிலுள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்துள்ளார். இவருடைய சகோதரரும் இத்தாலியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கெமிக்கல் இன்ஜினீயராகப் பணியாற்றி வருகிறார். சகோதரர் வசிக்கும் பகுதிக்கும், இவரது அறைக்கும் நீண்ட தொலைவு என்பதால் பிரதிக்ஷ் கல்லூரி அருகில் தனி அறை எடுத்துத் தங்கி, படித்துவந்தார்….

மேலும்...

திறமைக்கு பரிசு – மதுரை மாணவருக்கு ஃபேஸ்புக் நிறுவனம் அளித்த இன்ப அதிர்ச்சி!

மதுரை (31 மே 2020): ஃபேஸ்புக்கில் உள்ள குறையை கண்டுபிடித்து தெரிவித்த மதுரை மாணவருக்கு ஃபேஸ்புக் நிறுவனம் 1000 டாலர் பரிசு வழங்கியுள்ளது. ஆண்ட்ராய்டு போன் அத்தியாவசியமாகிவிட்ட இக்காலகட்டத்தில் அதில் சில அசவுகரியங்கள் உள்ளதையும் மறுக்க முடியாது. தகவல் திருட்டு, ஊடுருவல் போன்றவை ஆண்ட்ராய்டு போன்களில் அதிகரித்துவிட்டன. இந்நிலையில் ஃபேஸ்புக்கில் உள்ள ரைட்ஸ் மேனேஜரில் உள்ள குறையை கண்டுபிடித்து ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு தகவல் அளித்துள்ளார் மதுரை மாணவர் கிஷோர். இவரை பாராட்டிய ஃபேஸ்புக் நிறுவனம் அவருக்கு 1000…

மேலும்...

இந்தியாவில் கேரள மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

திருவனநதபுரம் (30 ஜன 2020): கேரள மாநிலத்தில் சீனாவிலிருந்து வந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதியால் மக்கள் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில். சீனாவில் இந்த வைரசால் 170 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் சீனா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வந்த 800 க்கும் மேற்பட்டோர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நடத்திய சோதனையில் சீனாவின் வுஹானிலிருந்து வந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது….

மேலும்...