பிச்சை எடுத்தால் சிறைத் தண்டனை - கத்தார்

பிச்சை எடுத்தால் சிறைத் தண்டனை – கத்தார்

தோஹா, கத்தார் (15 மார்ச் 2024): கத்தார் நாட்டில் எவராவது பிச்சை எடுப்பதைக் கண்டால் உடனடியாக பொதுமக்கள் புகார் அளிக்குமாறு கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சகம் (MoI) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கத்தார் நாட்டில் பிச்சை எடுப்பது சட்டப்படி குற்றமாகும். கத்தாரில் வசிக்கும் அடித்தட்டு மக்கள் உட்பட அனைவருக்கும் அடிப்படை வாழ்க்கைக்கான தேவைகள் அனைத்தும் உரிய முறையில் கிடைத்திட கத்தார் அரசு வழி செய்துள்ளது. இருப்பினும், கத்தாருக்கு வருகை தரும் வெளிநாட்டினர் சிலர் பிச்சைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்….

மேலும்...

ரமலான் காலத்தில் மதீனா ரவுளாவிற்கு செல்ல நேர மாற்றம்!

மதீனா (23 மார்ச் 2023): ரமலான் மாதத்தில் மதீனாவின் ரவுதா ஷெரீப்புக்கான நுழைவு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ரவுளாவிற்கு செல்ல அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எனினும், மஸ்ஜித் நபவி அலுவலகம், நபிகள் நாயகத்தின் மசூதியில் தொழுவதற்கு, எந்த அனுமதியும் தேவையில்லை என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். ரமலானில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், ரமலான் 1 முதல் 19 வரையிலான நாட்களில், அதிகாலை 2.30 முதல் சுப்ஹு தொழுகை வரையிலும், முற்பகல் 11.30 முதல்…

மேலும்...

மாணவர்கள் ரமலான் நோன்பு இருக்க பள்ளி ஆசிரியர்கள் தடை – தமிழகத்திலுமா இப்படி?

கிருஷ்ணகிரி (08 ஏப் 2022): மாணவர்கள் ரமலான் நோன்பு இருக்க ஆசிரியர்கள் தடை விதித்ததால் பெற்றோர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே கொரல்தந்தம் கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்தநிலையில் ரமலான் நோன்பு தற்போது கடைபிடிக்கப் பட்டு வருவதால் மாணவர்கள் நோன்பு இருந்து வருகின்றனர். இதற்கு தடை விதித்த பள்ளி தலைமை ஆசிரியை கலாவதி, நோன்பு இருப்பதை தவிர்க்க கேட்டுக்கொண்டுள்ளார். மேலும்…

மேலும்...

அமெரிக்க நகரங்களில் ஒலிக்கும் தொழுகைக்கான அழைப்பு (பாங்கு)

வாஷிங்டன் (26 ஏப் 2020): அமெரிக்காவில் தொழுகைக்கான அழைப்பு (பாங்கு) பல இடங்களில் ஒலிக்கிறது. அமெரிக்காவில் ஒலிப்பெருக்கி மூலம் பாங்கு சொல்ல பல இடங்களில் கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் இவ்வருட புனித ரமலான் மாதத்திற்காக அக் கட்டுப்பாடுகள் நீக்கப் பட்டுள்ளன. அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் நகரின் மேயர் ஜேக்கப் பிரே, நகரின் அனைத்து பகுதிகளிலும் ரமலான் மாதத்தின் அனைத்து தினங்களிலும் ஐந்து வேளைக்கும் ஒலிப் பெருக்கி மூலம் பாங்கு அழைப்புக்கு அனுமதி அளித்துள்ளார். அமெரிக்கா கொரோனாவால் அதிக…

மேலும்...

அதிகாலை பாங்கு அழைப்பு என்னை ஏதோ செய்தது – இஸ்லாத்தை தழுவிய பெண் நெகிழ்ச்சி!

துபாய் (25 ஏப் 2020): “இஸ்லாம் என்னை ஏதோ செய்தது. நான் கிறிஸ்தவராக இருந்தபோது இல்லாத நிம்மதி இப்போது உள்ளது. இஸ்லாத்தை ஏற்றதை மிகவும் பெருமையாகவும் உணர்வுப் பூர்வமாகவும் நினைக்கிறேன்” என்கிறார் ஹதீஜா (முன்னாள் ஷெர்லி ரோட்ரிகுஸ்). ஸ்பானிஷ் கியூபனை சேர்ந்த ஹதீஜா கடந்த ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறினார். துபாய் வந்த பிறகு அவர் இஸ்லாம் குறித்து தெரிந்து கொண்டதாகவும், அதுகுறித்த அனுபவத்தையும் அவர் பகிர்ந்து கொள்கிறார். “நான் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தேன். சிறு வயதில்…

மேலும்...

மசூதிகளில் நோன்பு கஞ்சி விநியோகிக்க அனுமதிக்க வேண்டும் – காதர் மொய்தீன் கோரிக்கை!

சென்னை (18 ஏப் 2020): மசூதிகளில் ரமலான் நோன்பு கஞ்சி விநியோகிக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவளித்து வருகின்றோம்.முஸ்லிம்கள் இஸ்லாமிய ஹிஜ்ரி மாதம் ரமலான் மாதம் முழுவதும் 30 நாட்களும் 14 மணி நேரம் உண்ணாமல்,…

மேலும்...