மத்திய பிரதேசத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஊரடங்கு உத்தரவு!

கார்கோன் (01 மே 2022): ரம்ஜான் பண்டிகை மற்றும் இந்து திருவிழாக்களையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்க மத்திய பிரதேசம் மாநிலம் கார்கோன் மாவட்டத்தில் மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது “ஈத் தொழுகை வீட்டில் செய்யப்பட வேண்டும். மேலும், அட்சய திரிதியா மற்றும் பரசுராமர் ஜெயந்தியில் எந்த நிகழ்ச்சியும் மாவட்டத்தில் ஏற்பாடு செய்ய அனுமதிக்கப்படாது, ”என்று கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் (கார்கோன்) சுமர் சிங் முஜல்தா கூறினார். கடந்த ஏப்ரல் 10…

மேலும்...

ரம்ஜான் பண்டிகையின்போது விசமிகளின் சூழ்ச்சிக்கு பலியாகிவிடாதீர் – முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை!

புதுடெல்லி (28 ஏப் 2022): ரம்ஜான் பண்டிகை தினத்தின்போது விசமிகளின் சூழ்ச்சிக்கு பலியாகிவிடாமல் அமைதியான வழியில் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என 14 முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் தலைவர் ஜமியத் உலமா-இ-ஹிந்த் மற்றும் பிற 14 அமைப்புகளின் கையொப்பமிடப்பட்ட ஒரு திறந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: “ரம்ஜான் பண்டிகை தினத்தன்று எல்லா முஸ்லிம்களும் ஈத்காவுக்குச் செல்லும் போதும், வீடு திரும்பும் போதும் அமைதியை கடைபிடிக்கவும்; உங்களை தூண்டிவிட முயற்சிக்கும்…

மேலும்...

ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த பாஜக தலைவர்!

சென்னை (14 மே 2021): நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார். முஸ்லிம்களின் புனித பண்கையான ரம்ஜான் வெறள்ளியன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது. ரம்ஜானை ஒட்டி பல பிரமுகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகை குஷ்புவும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும்...

உற்சாகம் இழந்த பெருநாள் – நாகூர் தர்காவில் கூட்டு பிரார்த்தனை!

நாகூர் (26 மே 2020): லாக்டவுனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தினார்கள். இவ்வருட ரம்ஜான் பண்டிகை உற்சாகம் இழந்ததாகவே காணப்பட்டது. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்வார்கள். நோன்பு நிறைவடைந்த பிறகு, ரமலான் மாத இறுதி நாளில் பிறை தெரியும். பிறை தென்பட்ட மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும். இந்நிலையில், தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை…

மேலும்...

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் முஹம்மது அசாருதீனின் பெருநாள் வாழ்த்து!

ஐதராபாத் (26 மே 2020): முன்னாள் கிரிக்கெட் கேப்டன் முஹம்மது அசாருதீன் தனது ரம்ஜான் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நேற்று இந்தியா முழுவதும் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப் பட்டது. கொரோனா பரவலை தடுக்க நான்காவது கட்ட லாக்டவுன் அமலில் இருப்பதால் ரம்ஜான் நோன்பு காலங்களிலேயே முஸ்லிம்கள் தொழுகையை வீட்டிலேயே தொழுது கொண்டனர். இந்நிலையில் நேற்றைய பெருநாள் கொண்டாட்டமும் வீடுகளிலேயே கொண்டாடப் பட்டது. மேலும் பெருநாள் தொழுகையையும் வீட்டிலேயே தொழுது கொண்டனர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பல…

மேலும்...

நடிகை அதுல்யா ரவியின் புதிய தோற்றம்! (புகைப்படம் இணைப்பு)

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திரை பிரபலங்கள், தொலைக்காட்சி நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி வித்தியாசமான முறையில் வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்தார். அதேபோல நடிகை அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்டோரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

மேலும்...

தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் வித்தியாசமான பெருநாள் வாழ்த்து – வீடியோ!

சென்னை (25 மே 2020): இன்று இந்தியா முழுவதும் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தனது  பெருநாள் வாழ்த்தை ஒரு நடனம் மூலம் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவித்துள்ள திவ்ய தர்ஷினி, உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். EID MUBARAQ to all my…

மேலும்...

மயிலாடுதுறை அருகே மசூதியில் பெருநாள் தொழுகை நடந்ததால் பரபரப்பு!

மயிலாடுதுறை (25 மே 2020): மயிலாடுதுறை அருகே மசூதியில் பெருநாள் தொழுகை நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகமெங்கும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப் பட்டு வருகிறது. 30. நாட்கள் நோன்பிருந்த முஸ்லிம்கள் இன்று ரம்ஜான் பண்டிகையை வீட்டில் இருந்தபடி கொண்டாடி வருகின்றனர். மேலும் வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டிருப்பதால் பெருநாள் தொழுகை வீட்டிலேயே தொழுதுகொண்டனர். இந்நிலையில் மயிலாடுதுறாஇ அருகே வடகரை மசூதியில் 75க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி பெருநாள் தொழுகைநடத்தியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதனை தடுக்காத…

மேலும்...

தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை – வீட்டிலேயே தொழுதுகொள்ள கோரிக்கை!

சென்னை (24 மே 2020): தமிழகம் முழுவதும் நாளை, ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி நேற்று அறிவித்தார். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்வார்கள். நோன்பு நிறைவடைந்த பிறகு, ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். இந்நிலையில், தமிழகம் முழுவதும் நாளை, ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்து உள்ளார். பிறை நேற்று தென்படாததால், திங்கள் கிழமை அன்று,…

மேலும்...

கேரளாவில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஊரடங்கு தளர்வு!

திருவனந்தபுரம் (23 மே 2020): ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் ஊரடங்கு தளர்த்தப் படுகிறது. கொரோனா பரவலைத் தடுக்க கேரளாவில் மற்ற நாட்களில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்க ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கேரளாவில் ரம்ஜான் பண்டிகை அறிவிக்கப் பட்டுள்ளதால், அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும் வகையில் சனிக்கிழமை இரவு 9 மணி வரை ஊரடங்கு தளர்த்தப் படுகிறது. அதேபோல ரம்ஜான் பண்டிகை தினமான ஞாயிற்றுக் கிழமை மட்டும்…

மேலும்...