நாட்டை பாதுகாப்பதே உள்துறை அமைச்சரின் பணி கோவில் திறப்பு விழா அல்ல – அமித்ஷா மீது காங்கிரஸ் பாய்ச்சல்!

அகர்தலா (06 ஜன 2023): அடுத்த ஆண்டு அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படும் என அமித்ஷா கூறியதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதே உள்துறை அமைச்சரின் பணி என்றும், கோயிலை திறப்பது குறித்து கோயில் அதிகாரிகள் பரிசீலிப்பார்கள் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். பாபர் மசூதி – ராமர் கோவில் குறித்த வழக்கில் 2019 நவம்பரில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கியது. சர்ச்சைக்குரிய…

மேலும்...

அயோத்தி ராமர் கோவில் திறப்பு எப்போது தெரியுமா?

லக்னோ (04 ஆக 2021): அயோத்தியில் ராமர் கோவில் வரும் 2023 ஆம் ஆண்டு திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இந்துத்வாவினரால் இடிக்கப்பட்டது. மேலும் அங்கு ராமர் கோவிலை கட்டுவதற்கு ஆர்.எஸ்.எஸ். பாஜக உள்ளிட்ட இந்துத்வாவினர் முழுமூச்சாக இருந்தனர். எனினும் பாபர் மசூதி இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட வேண்டும் என்றும் மசூதி முஸ்லிம்களுக்கே சொந்தம் என்றும் முஸ்லிம்களால் தொடரப்பட்ட வழக்கு உச்ச…

மேலும்...

விஸ்வரூபமெடுக்கும் ராமர் கோவில் நில பேர ஊழல் – மோடி விளக்கமளிக்க சாதுக்கள் கோரிக்கை!

புதுடெல்லி (26 ஜூன் 2021): அயோத்தி ராமர் கோவில் நில பேர ஊழல் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று சாதுக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ராமர் கோயிலுக்காக அயோத்தி நிலத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் ‘ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’அறக்கட்டளை சார்பில் நிலம் வாங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு நிலம் வாங்கியதில் தான் தற்போது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரே நாளிலேயே ரூ.2 கோடி மதிப்பிலான நிலம் ரூ.18 கோடிக்கு கைமாற்றப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டை சிபிஐ…

மேலும்...

அயோத்தியில் ராமர் கோவில் நிலம் பத்திரப் பதிவில் மோசடி!

அயோத்தி (14 ஜூன் 2021): அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கியதில் மோசடியில் ஈடுபட்டதாக ராமர் கோவில் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. கட்டுமான பணிகளை கண்காணிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில், ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையை ஒன்றிய அரசு நியமித்துள்ளது. 15 உறுப்பினர்களை கொண்ட இந்த அறக்கட்டளையில் 12 பேரை ஒன்றிய…

மேலும்...

முஸ்லிம்களுக்கு எதிராக விஷம கோஷங்களை எழுப்பிய இந்துத்வாவினர் கைது!

லக்னோ (15 ஜன 2020): உத்திர பிரதேசத்தில் இந்துத்வாவினர் நடத்திய பேரணியில் முஸ்லிம்களுக்கு எதிராக கோஷமிட்டவர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் ஷிகார்பூர் நகரில் ராமர் கோவில் கட்ட நிதி திரட்டுவதற்காக நடைபெற்ற பேரணியில் முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அதில் குறிப்பிட்ட இருவர் முஸ்லிம்களுக்கு எதிராக விஷமத்தனமான கோஷங்களை எழுப்பியுள்ளனர். “இந்துஸ்தான் இந்துக்களுக்கு சொந்தம்…, முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்” என்கிற வகையில் இந்த கோஷங்கள் இருந்துள்ளன. அந்த வீடியோ கிளிப் சமூக…

மேலும்...

அயோத்தியில் கட்டப்படவுள்ள (பாபர் மசூதி) புதிய மசூதி வரைபடம் வெளியீடு!

லக்னோ (20 டிச 2020): இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளையின் கீழ் கட்டப்படும் புதிய மசூதி (பாபர் மசூதி) வரைபடம் நேற்று வெளியிடப் பட்டது அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம் ஜென்ம பூமி-பாப்ரி மஸ்ஜித் தளத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு கடந்த ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழி வகுத்ததுடன், மாற்றாக ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அயோத்தியின் சோஹவல் தெஹ்ஸில் உள்ள தனிபூர் கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தை…

மேலும்...

குடியரசு தினத்தில் அயோத்தியில் புதிய பாபர் மசூதி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா!

அயோத்தி (18 டிச 2020): 2021 ஜனவரியில் இந்திய குடியரசு தினத்தன்று உத்திர பிரதேசத்தில் புதிய பாபர் மசூதி கட்டுவதற்காக அடிக்கல் நாட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கட்டுமானத்திற்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளையின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம் ஜென்ம பூமி-பாப்ரி மஸ்ஜித் தளத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு கடந்த ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழி வகுத்ததுடன், மாற்றாக ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அயோத்தியின் சோஹவல்…

மேலும்...

ராமர் கோவிலுக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கும் முடிச்சு போடும் யோகி ஆதித்யநாத்!

லக்னோ (18 டிச 2020): அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது பிடிக்காதவர்களே விவசாயிகள் போராட்டத்தை பின்னின்று இயக்குகிறார்கள் என்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். விவசாய சட்டத்திற்கு ஆதரவான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள யோகி ஆதித்யநாத், இதுகுறித்து கூறுகையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை பிடிக்காதவர்கள் விவசாயிகளை உசுப்பேற்றி நாட்டை ஸ்திரமின்மைக்கு உட்படுத்த முயற்சிப்பதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். ‘இந்தியா ஒரு சிறந்த இந்தியாவாக இருக்க விரும்பாத மக்கள் போராட்டத்தின் பின்னால் உள்ளனர். ஆதரவு…

மேலும்...

ராமர் கோவிலைபோல் சீதாவுக்கு கோவில் – லோக் ஜனசக்தி பிரச்சாரம்!

பாட்னா (25 அக் 2020): பிகாரில் சீதா வுக்கு கோவில் கட்டப்படும் என்று லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார். பிகாரில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் பா.ஜ.க.வின் ராம் கோயில் பிரச்சாரத்தைப் போலவே, சீதாவின் பிறப்பிடமாகக் கருதப்படும் பிகாரில் சிறப்பு கோயில் கட்டப்படும் என்று சிராக் பாஸ்வான் கூறினார். சீதா தேவி இல்லாமல் ராமர் முழுமையடைய மாட்டார் என்று தெரிவித்த சிராக், பீகாரில் கட்டப்படும் சீதா கோயிலை அயோத்தியில்…

மேலும்...

அயோத்தியில் இராமர் கோவில் கட்டும் இடம் புத்த மதத்திற்கு சொந்தம் – புத்த பிக்குகள் போராட்டம்!

அயோத்தியா (15 ஜூலை 2020): அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று புத்த பிக்குகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, பாபர் மசூதி இருந்த இடத்தில் தற்போது இராமர் கோவில் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு சமீபத்தில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தபோது, நிலத்தை சமன்செய்ததில் பல்வேறு உடைந்த சிலைகள், சிவப்பு மணற்கல் தூண்கள், உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. இவை புத்தமதத்தின் கலாச்சாரத்திற்கு சொந்தமானது என்று புத்தபிக்குகள் தெரிவித்துள்ளனர். மேலும்…

மேலும்...