நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு! – உத்திர பிரதேசத்தில் பரபரப்பு!

லக்னோ (13 பிப் 2020): உத்திர பிரதேசம் லக்னோ நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 2 வழக்கறிஞர்கள் உள்பட 3 பேர் காயமடைந்துள்ளனர். லக்னோ ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 2 வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 3 பேர் காயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு போலீசார் விரைந்தனர். அப்பகுதியில் இருந்து வெடிக்காத 3 வெடி குண்டுகளைக் கைப்பற்றினர். வெடிகுண்டு வீசப்பட்ட பகுதியில் ஏராளமான வழக்கறிஞர்கள் திரண்டதால்…

மேலும்...

விஸ்வ இந்து மஹாசபா தலைவர் சுட்டுக் கொலை!

லக்னோ (02 பிப் 2020): உத்திர பிரதேசத்தில் விஸ்வ ஹிந்து மகாசபா தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். விஸ்வ ஹிந்து மகாசபா தலைவர் ரஞ்சித் பச்சன் இன்று(ஞாயிற்றுக் கிழமை) காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள், இருவர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில், தலையில், பலத்த காயமடைந்த ரஞ்சித், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஸ்ரீவத்சவா கையில் பலத்த காயமுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி…

மேலும்...

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் அகிலேஷ் யாதவின் மகள்!

லக்னோ (25 ஜன 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் மகளும் கலந்து கொண்டு எதிர்ப்பை தெரிவித்தார். லக்னோ கடிகார கோபுரம் அருகில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு தொடர் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டத்தில் அகிலேஷ் யாதவின் மகள் டினா கலந்து கொண்டார். அவர் அவரது நண்பர்களுடன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஊடகங்களில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் திட்டமிட்டு…

மேலும்...

அமித் ஷாவின் மிரட்டும் அறிவிப்பைத் தொடர்ந்து வலுக்கும் போராட்டம்!

லக்னோ (22 ஜன 2020): குடியுரிமை சட்டத்தை எக்காரணம் கொண்டும் திரும்பப் பெற மாட்டோம் என்ற அமித் ஷாவின் அறிவிப்பை தொடர்ந்து போராட்டம் மேலும் வலுப் பெற்றுள்ளது. முஸ்லிம்களை குறிவைத்து இயற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் பாகுபாடின்றி அனைவரும் போராடி வருகின்றனர். குறிப்பாக டெல்லி ஷாஹீன் பாக், உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்கள் பெரும் அளவில் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் “எக்காரணம் கொண்டும் குடியுரிமை சட்டம் திரும்பப் பெற மாட்டாது”…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் போலீசார் அட்டூழியம் – போராட்டக்காரர்கள் மீது சித்ரவதை – வீடியோ!

லக்னோ (19 ஜன 2020): உத்திர பிரதேசத்தில் போலீசர் போராட்டக்காரர்கள் மீது அத்துமீறி நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதமாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக பெண்கள் கலந்துகொண்டு , கடந்த ஒரு மாதமாகத்…

மேலும்...