இந்து பெண் – முஸ்லிம் இளைஞர் திருமணத்திற்கு விண்ணப்பம் – இந்து அமைப்பினர் எதிர்ப்பு!

பெங்களூரு (22 நவ 2022): நாடகாவின் தட்சிண கன்னடா பகுதில் இங்குள்ள சப்-ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் திருமணத்திற்கு விண்ணப்பித்த கலப்பின ஜோடிக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கலப்பின திருமணங்களுக்கு வழக்கமான நடைமுறையின் ஒரு பகுதியாக திருமணத்திற்கு ஏதேனும் ஆட்சேபனைகள் இருக்கிறதா என பதிவாளர் அலுவலகம் அழைப்பு விடுத்தது. ஆனால் இந்த திருமணத்தை லவ் ஜிஹாத் எனக்க்கூறி இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த எதிர்ப்பை பதிவு செய்ய 30 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. குறிப்பிட்ட இந்து…

மேலும்...

லவ் ஜிஹாத் குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் மீது காவல்துறை வழக்குப் பதிவு!

லக்னோ (21 ஏப் 2022): உத்திர பிரதசத்தில் லவ் ஜிஹாத் குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்திர பிரதேசம் மொராதாபாத்திலிருந்து தப்பிச் சென்ற முஸ்லீம் இளைஞரும், இந்து பெண்ணும் தங்களது திருமணத்தை மொராதாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் பதிவு செய்ய முயன்றபோது இந்து யுவ வாஹினி அமைப்பினர், அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். முன்னதாக இருவரையும் இந்து யுவ வாஹினி அமைப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முஸ்லீம் இளைஞர் மீது…

மேலும்...

லவ் ஜிஹாதுக்கு எந்த ஆதாரமும் இல்லை – நீதிமன்றத்தில் வாங்கி கட்டிக் கொண்ட யோகி அரசு!

அலகாபாத் (07 ஜன 2021): உத்திர பிரதேச அரசின் சர்ச்சைக்குரிய புதிய சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஒரு முஸ்லீமுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று யோகி ஆதித்யநாத் அரசாங்கம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்து வாங்கி கட்டிக் கொண்டது. உத்திர பிரதேசத்தில் லவ்ஜிஹத் மதமாற்ற தடை சட்டம் என்ற பெயரில் முஸ்லிம்களை குறி வைத்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன்படி அக்‌ஷய் குமார் தியாகி என்பர் அளித்த புகாரின் அடிப்படையில் நதீம் எனபவர் முசாபர்நகரில்…

மேலும்...

தவறாக பயன்படுத்தப்படும் சட்டம் – இயற்றப்பட்ட ஒரே மாதத்தில் 35 முஸ்லீம் இளைஞர்கள் கைது!

லக்னோ (28 டிச 2020): உத்தரபிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் (லவ் ஜிஹாத்) தடைச் சட்டம் இயற்றப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு. இந்த மாதத்தில் 35 முஸ்லீம் இளைஞர்கள் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய ஊடக பி.டி.ஐ தெரிவித்துள்ளது. நவம்பர் 27 முதல் சட்டம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து மாநிலத்தில் சுமார் ஒரு டஜன் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டம் நடைமுறைக்கு வந்த மறுநாள் முதலே மாநிலத்தில் கைதுகள் தொடங்கிவிட்டன. பெண் ஒருவரின் தந்தை தனது…

மேலும்...

உத்திர பிரதேசத்தை அடுத்து மத்திய பிரதேசத்திலும் முஸ்லிம்களை குறி வைக்கும் சட்டம்!

புதுடெல்லி (27 டிச 2020): உத்தரபிரதேசத்திற்குப் பிறகு, மத்திய பிரதேச அரசு முஸ்லிம்களை குறி வைத்து மதமாற்ற தடை சட்ட மசோதாவை கொண்டு வந்துள்ளது. சர்ச்சைக்குரிய மதமாற்று தடை சட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து உத்தரபிரதேசத்தில், 35 முஸ்லிம் இளைஞர்கள் ஒரு மாதத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் மாநிலத்தில் டஜன் கணக்கான எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன . சட்டம் நடைமுறைக்கு வந்த மறுநாளே முஸ்லிம்களின் கைதுகள் தொடங்கிவிட்டன. சில சந்தர்ப்பங்களில், ஆதாரங்கள் இல்லா…

மேலும்...

லவ் ஜிஹாத் – மதமாற்ற தடை சட்டத்திற்கு எதிராக நடிகர் சித்தார்த் காட்டம்!

சென்னை (08 டிச 2020): உத்திர பிரதேச அரசின் மத மாற்ற தடை சட்டத்திற்கு எதிராக நடிகர் சித்தார்த் கடுமையாக விமர்சித்துள்ளார். லவ் ஜிஹாத் என்ற வார்த்தையை இந்துத்வாவினர் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.மேலும் உத்திர பிரதேசத்தில் மதமாற்றத்தை தடைசெய்யும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்கு உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் ஒப்புதல் அளித்துள்ளார். கட்டாய மத மாற்றத்திற்கே இந்த சட்டம் என்கிறபோதிலும், தன்னார்வமாக மதம் மாறுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் 60 நாட்களுக்கு முன்பே அனுமதி பெறவேண்டும். அவ்வாறு…

மேலும்...

மதமாற்ற அவசர தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்!

லக்னோ (28 நவ 2020): மதமாற்ற அவசர தடை சட்டத்திற்கு உத்திர பிரதேச ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். உத்திர பிரதேசத்தில் மதமாற்றத்தை தடுக்கும் வகையில் புதிய வரைவு சட்டமசோதா உருவாக்கப்பட்டது. இந்த வரைவு சட்ட மசோதாவுக்கு இந்த வாரத் தொடக்கத்தில் உத்தர பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து கட்டாயமாக மதமாற்றம் செய்தல், நேர்மையற்ற முறையில் குறிப்பாக திருமணத்துக்காக மதம் மாறுதல், லவ் ஜிகாத் ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று…

மேலும்...

லவ் ஜிஹாத் விவகாரம் – யோகி அரசுக்கு அலகாபாத் நீதிமன்றம் குட்டு!

லக்னோ (24 நவ 2020): வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் மனித உரிமையில் அரசு தலையிட முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. லவ் ஜிஹாத் குற்றச்சாட்டுக்கு எதிராக சல்மத் அன்சாரி மற்றும் பிரியங்கா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. இருவேறு மதத்தினர் திருமணம் செய்து கொள்வதை லவ் ஜிஹாத் என்ற பெயரில் திசை திரும்பும் வேலையை பாஜக தலைமையிலான உபி அரசு செய்து வருகிறது. திருமணத்திற்காக மதம் மாறுவதையும் உபி…

மேலும்...

விளம்பரத்தில் லவ் ஜிஹாத் – பொங்கிய இந்துத்வாவினர் – தாங்கிப் பிடிக்கும் சசிதரூர்!

புதுடெல்லி (13 அக் 2020): டைட்டன் நிறுவனத்தின் ஒரு விளம்பரம் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. தனிஷ்க் வெளியிட்டுள்ள விளம்பர வீடியோவில், கர்ப்பிணிப் பெண் வயதான பெண்மணியிடம் கேட்கிறார்: “ஆனால் ஏன் இந்த விழா உங்கள் வீட்டில் நடத்தப்படவில்லை …”. அந்த பெண்மணி பதிலளிக்கிறார்: “ஒவ்வொரு வீட்டிலும் மகள்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது ஒரு பாரம்பரியம் அல்லவா?” என்கிறார் “பெண் ஒருவர் தனது சொந்தக் குழந்தையைப் போலவே தன்னை நேசிக்கும் ஒரு குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார். அவருக்காக மட்டுமே,…

மேலும்...

லவ் ஜிஹாத் என்ற வார்த்தையே இல்லை – மத்திய உள்துறை அமைச்சகம் பதில்!

புதுடெல்லி (05 பிப் 2020): லவ் ஜிகாத் என்ற வார்த்தை, சட்டத்தின் கீழ் இல்லை அதைபோல் துக்டே துக்டே கேங்க் என்பது குறித்து தகவல் எதுவும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. ‘துக்டே துக்டே கேங்க்’ என, எதிர்க்கட்சிகளை, பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் விமர்சித்து வருகின்றனர். இந்த துக்டே துக்டே கேங்க் தொடர்பான தகவல் அளிக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, சமூக ஆர்வலர் ஒருவர், தகவல்…

மேலும்...