இன்றும் அதிகரித்த பெட்ரோல் டீசல் விலை – பொதுமக்கள் கவலை!

சென்னை (25 மார்ச் 2022): பெட்ரோல் டீசல் விலை இன்றும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எப்போதும் இல்லாத வகையில், பெட்ரோல், டீசல் விலை லிட்டர் தலா, 100 ரூபாயை தாண்டி விற்பனையானது. இதனால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். சரக்கு வாகனங்களின் வாடகை கட்டணம் உயர்ந்ததால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில்…

மேலும்...

பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்வு -பொதுமக்கள் அதிர்ச்சி!

சென்னை (23 மார்ச் 2022): பெட்ரோல், டீசல் விலை நேற்று உயர்த்தப்பட்ட நிலையில், இன்றும் மீண்டும் அதிகரித்துள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எப்போதும் இல்லாத வகையில், பெட்ரோல், டீசல் விலை லிட்டர் தலா, 100 ரூபாயை தாண்டி விற்பனையானது. இதனால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். சரக்கு வாகனங்களின் வாடகை கட்டணம் உயர்ந்ததால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்தது. இந்நிலையில், கடந்த 137 நாட்களாக விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யட்டு வந்த பெட்ரோல்,…

மேலும்...

அதிர்ச்சி அடைய வைத்துள்ள சமையல் சிலிண்டர் விலை உயர்வு – இன்று மட்டும் இவ்வளவு விலை உயர்வா?

புதுடெல்லி (01 நவ 2021): வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை ஒரே நாளில் 235 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வணிக ரீதியிலான பயநோட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.265 உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.2000ஐ தாண்டியுள்ளது. சென்னையில் வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.2,133 ஆக இருந்தது. அதேபோல கேரளாவில் சிலிண்டரின் விலை ரூ.1994. அதே சமயம் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையில்…

மேலும்...

சமையல் கியாஸ் விலையும் உயர்வு – வேறு என்ன விலையெல்லாம் அதிகரிக்குமோ ?

புதுடெல்லி (15 பிப் 2021): இன்று சமையல் கியாஸ் விலையை மாற்றி அமைத்து மத்திய பெட்ரோலிய துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் மானியம் கொண்ட சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி ரூ.50 உயர்த்தப்பட்டது. அதன் பிறகு டிசம்பர் 16-ந் தேதி ரூ.50 உயர்த்தப்பட்டது. இதனால் சிலிண்டர் விலை ரூ.710 ஆக இருந்து வந்தது. இந்தநிலையில் இந்த மாத தொடக்கத்தில் ரூ.25 உயர்த்தப்பட்டது. இதனால் சிலிண்டர் விலை ரூ.735 ஆக…

மேலும்...

பெட்ரோல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்வு – பொதுமக்கள் அவதி!

சென்னை (13 பிப் 2021): பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கின்றன. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 5-வது நாளாக உயர்ந்துள்ளது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து 90.70 ரூபாய் எனவும், டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து 83.86 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது….

மேலும்...

வெங்காய விலை கிடுகிடு உயர்வு!

சென்னை (20 அக் 2020): ஆந்திரா, கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால்.அங்கு இருந்து வரும் வெங்காயத்தின் வரவு குறைந்ததால் தமிழகத்தில் வெங்காயம் விலை அதிகரித்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ. 100 முதல் 110 வரை விற்பனையாகிறது. ரூ. 80க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெங்காயத்தின் விலை மேலும் 20 முதல் 30 வரை உயர்ந்துள்ளது. இந்த நிலையில், வெங்காய விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு…

மேலும்...

ஆவின் பால் விலை உயர்வுக்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம்!

சென்னை (14 ஜூலை 2020): “கொரோனா பேரிடரிலும் ஆவின் விற்பனை விலை உயர்வு சர்வாதிகார போக்காகும்.” என்று பால் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “கடந்த வாரம் ஆவின் நிறுவனம் சார்பில் 5வகையான பால் மற்றும் பால் பொருட்களை தமிழக முதல்வர் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார். அதில் மோர், லஸ்ஸி மற்றும் 90நாட்கள் கெட்டுப் போகாத பால் ஏற்கனவே வணிக சந்தையில் விற்பனையில் உள்ளதென்றும், அதனை சிறு மாற்றங்களோடு புதிய பொருட்களாக…

மேலும்...

போற போக்கை பார்த்தால் யாரும் வாகனமே வாங்க மாட்டங்க போல!

சென்னை (16 ஜூன் 2020): பெட்ரொல், டீசல் விலை உயர்வால் பலருக்கு வாகனம் வாங்கும் ஆசையே போய்விடது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயிக்கின்றன. ஆனால், கடந்த மார்ச் 16ம் தேதிக்கு பிறகு விலையை மாற்றி அமைக்கவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 20 டாலருக்கும் கீழ்…

மேலும்...

பதற வைக்கும் விலை உயர்வு!

சென்னை (21 பிப் 2020): தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை அவ்வப்போது உச்சத்தை தொடுவதும், பின்பு சற்று குறைவதுமாக இருக்கும். அந்த வகையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக் கிழமையான இன்று(பிப்.21) சவரனுக்கு ரூ.272 உயர்ந்து, ரூ.32,096-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.34 உயர்ந்து, ரூ.4,012-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 38 நாட்களில் மட்டும் சுமார் 2000 வரை தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது….

மேலும்...

மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பால் விலை உயர்வு!

சென்னை (20 ஜன 2020): தனியார் பால் நிறுவனங்கள் நாளை முதல் பால் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளனர். பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணங்களால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தனியார் பால் கொள்முதல் மற்றும் விற்பனை நிறுவனங்கள் அறிவித்துள்ளது. ஆனால் தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தினாலும் தங்களுக்கு அதில் லாபம் எதுவும் கிடைப்பதில்லை என மாட்டு உரிமையாளர்கள் மற்றும் சில்லரை பால் விற்பன்னர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பால் விலை உயர்வோடு தனியார் பால்…

மேலும்...