டெல்லியை அதிர வைக்கும் விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு!

புதுடெல்லி(26/01/2021): குடியரசு தினமான இன்று டெல்லியில் விவசாயிகள் டிராக்டர்கள் அணிவகுப்பு நடத்தி அதிர வைத்து கொண்டிருக்கின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் நடத்தும் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. குடியரசு தினமான இன்று ஒரு லட்சம் ட்ராக்டர்கள் அணிவகுப்பு நடத்துவோம் என விவசாயிகள் ஏற்கெனவே அறிவித்திருந்தனர். இதனைத் தடுக்க அரசு எல்லா வழிகளிலும் முனைந்தும் எதுவும் கைகூடவில்லை. தற்போது ஆயிரக்கணக்கான ட்ராக்டர்கள் டெல்லி வீதிகளைத் திணறடித்துக் கொண்டிருக்கின்றன. சாரை…

மேலும்...

விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் – உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி(20/01/2021): விவசாய மசோதாக்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகள், தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு உச்ச நீதிமன்றம் அமைத்த குழு முன் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த மூன்று விவசாய மசோதாக்களை முழுவதுமாக கைவிடக் கோரி விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 10 முறை விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடந்தும் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. இந்நிலையில், விவசாய மசோதாக்களுக்குத் தடை கோரி திமுக…

மேலும்...

வேளாண் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் பந்த் – ரெயில் போக்குவரத்து பாதிப்பு!

புதுடெல்லி (25 செப் 2020): மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிராக நாடு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. வேளாண் மசோதாக்களுக்கு எதிராக மூன்று நாட்கள் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக விவசாய சங்கம் (கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி) அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முதல் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் நீடிப்பதால் ரெயில் போக்குவரத்து…

மேலும்...

எட்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் திடீர் இடை நீக்கம்!

புதுடெல்லி (21 செப் 2020): வேளாண் மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்தபோது எதிர்ப்பு தெரிவித்த 8 அவை உறுப்பினர்களை மீதமுள்ள அமர்வுகளில் பங்கேற்க தடை விதித்து அவையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கான உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் மசோதா, விவசாயிகளுக்கான விலை உறுதியளிப்பு மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா, அத்தியாவசிய பொருட்கள் சட்டத் திருத்த மசோதா ஆகியவை மக்களவையில் கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் மூன்று மசோதாக்களும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. வேளாண் துறை…

மேலும்...