டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் கடையில் பயங்கர தீ!

புதுடெல்லி (29 மார்ச் 2020): டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை இரவு 08:45 க்கு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும் யாருக்கும் காயங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது விபத்தா? அல்லது வேறு எதுவும் சதியா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் தாக்குதலால் நாடெங்கும் ஊரடங்கு…

மேலும்...

101 நாள் டெல்லி ஷஹீன் பாக் போராட்டம் முடிவுக்கு வந்தது!

புதுடெல்லி (24 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து டெல்லி ஷஹீன் பாக் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக, டெல்லியில் உள்ள ஷஹீன் பாக் பகுதியில், டிசம்பர், 15ம் தேதி முதல், தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையே ‘கொரோனா’ அச்சுறுத்தல் காரணமாக, பொது இடங்களில் மக்கள் கூடக்கூடாது எனக்கூறி மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து, டில்லி அரசு உத்தரவிட்டது. எனினும், ஷஹீன் பாக் போராட்டம்…

மேலும்...

கோவை ஷஹீன் பாக் போராட்டம் தற்காலிக நிறுத்தம்!

கோவை (12 மார்ச் 2020): கோவை ஷஹீன்பாக் போராட்டம் 5 நாட்களுக்கு தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் டெல்லி ஷஹீன் பாக் போராட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதன் ஸ்டைலில் நாடெங்கும் பெண்கள் முன்னிலையில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கோவை ஆத்துப்பாலம் இஸ்லாம் ஷாஃபி ஜமாத் மசூதி மைதானத்திலும் ஷஹீன்பாக் ஸ்டைலில் கடந்த 23 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போராட்டம் நடைபெறும் பகுதி…

மேலும்...

நேர காலம் பார்த்து நிதானமாக ஆதரவளித்த ஸ்டாலின்!

சென்னை (12 மார்ச் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை, மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் சிஏஏ எதிர்ப்பு தொடர் போராட்டத்திற்கு ஸ்டாலின் நேற்று நேரில் சென்று ஆதரவளித்தார். சென்னை, வண்ணாரப்பேட்டை ஷஹீன் பாக் மற்றும் மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து 27 நாட்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டங்களை பெண்களே முன்னின்று நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு திருமாவளவன், கருணாஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் நேரில் சென்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர். தமிழக சட்டப் பேரவையில் சிஏஏவை…

மேலும்...

டெல்லி இனப்படுகொலையில் கொல்லப்பட்ட 18 நாள் குழந்தையின் தந்தை முதஸ்ஸர் கான்!

புதுடெல்லி (05 மார்ச் 2020): டெல்லி இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களில் 18 நாள் குழந்தையின் தந்தை முதஸ்ஸர்கானும் ஒருவர். தலைநகர் டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு அமைதி வழி போராட்டத்தில் இனப்படுகொலையாளர்கள் புகுந்து போராட்டத்தை வன்முறையாக மாற்றி 46 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். 200 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் படுகொலை செய்யப்பட்டவர்கள் குறித்த பல்வேறு சோக பின்னணிகளும் வெளிவரவத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் டெல்லி ஷிவ் விஹார் பகுதியில் கொலை வெறி பிடித்தவர்களின் இரத்தப் பசிக்கு,…

மேலும்...

300 பேர் என் வீட்டை எரித்தனர் – முன்னாள் ரிசர்வ் படை அதிகாரியின் பதற வைக்கும் தகவல்!

புதுடெல்லி (03 மார்ச் 2020): டெல்லி வன்முறை வெறியாட்டத்தின் போது முன்னாள் CRPF வீரருடைய வீடும் எரிக்கப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) 22 ஆண்டுகளாக பணியாற்றி 2002ஆம் ஆண்டில் தலைமைக் காவலராக ஓய்வு பெற்றவர் அயிஷ் முகமது (58), தற்போது வடகிழக்கு டெல்லியில் ஒரு தற்காலிக நிவாரண முகாமில் தஞ்சம் புகுந்துள்ள அவர் கடந்த வாரம் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து விவரித்தவை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “என் வீட்டிற்கு வன்முறையாளர்கள் 200…

மேலும்...

பற்றி எரிந்த டெல்லியில் முஸ்லிம்களை பற்றிப் பிடித்த மொஹிந்தர் சிங்!

புதுடெல்லி (01 மார்ச் 2020): டெல்லி இனப்படுகொலை சம்பவத்தில் 70 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொலைக் கும்பலிடமிருந்து காப்பாற்றியுள்ளனர் இரண்டு சீக்கியர்கள். தலைநகர் டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு அமைதி வழி போராட்டத்தில் இனப்படுகொலையாளர்கள் புகுந்து போராட்டத்தை வன்முறையாக மாற்றி 42 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக வடகிழக்கு டெல்லியில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் கோகுல்புரி பகுதி அதிகமாக பாதிக்கப்பட்டட்ஜி/ அங்கு வசித்து வந்த 70-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வன்முறையாளர்களுக்குப் பயந்து ஆங்காங்கே பதுங்கியிருந்தனர். இஸ்லாமியர்கள் அதிகம்…

மேலும்...
shaheen-bagh

டெல்லியில் ஷஹீன் பாக் போராட்டக் காரர்களுக்கு இந்துத்வா அமைப்பு மீண்டும் மிரட்டல்!

புதுடெல்லி (01 மார்ச் 2020): டெல்லி ஷஹீன் பாக் போராட்டக் காரர்களை அப்புறப்படுத்த இந்து சேனா இந்துத்வா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. டெல்லியில் குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டம் நடைபெறும் மஜ்பூர், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் இந்துத்துவ தீவிரவாதிகள் புகுந்து கலவரத்தை ஏற்படுத்தினர். இதில் 42 பேர் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு மிக முக்கிய காரணம் பாஜக தலைவர் கபில் மிஸ்ராவின் வெறுப்பூட்டும் பேச்சும், மூன்று நாட்கள் அவகாசத்தில் போராட்டக் காரர்களை அப்புறப்படுத்துவோம்…

மேலும்...

டெல்லி கலவரத்தில் எல்லை பாதுகாப்பு வீரர் முஹம்மது அனீஸ் வீடு எரிப்பு!

புதுடெல்லி (29 பிப் 2020): டெல்லி கலவரத்தில் எல்லை பாதுகாப்பு வீரர் ஜவான் அனீஸ் வீடும் வன்முறையாளர்களால் எரியூட்டப்பட்டுள்ளது. டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும் ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டது. இதில் 41 பேர் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ள்னர்.. பலியானவர்களில் அதிகமானவர்கள் முஸ்லிம்கள். இந்நிலையில் டெல்லி வட கிழக்கு பகுதியில் இருந்த எல்லை பாதுகாப்பு வீரர் (BSF) முஹம்மது அனீஸ் வீடும் எரித்து…

மேலும்...

டெல்லி கலவரத்தில் முஸ்லிம்கள் பாதுகாத்த இந்து கோவில்!

புதுடெல்லி (28 பிப் 2020): டெல்லி கலவர சூழலில் இந்து (சிவா) கோவிலை முஸ்லிம்கள் பாதுகாத்துள்ளனர். டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும் ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டது. இதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் அதிகமானவர்கள் முஸ்லிம்கள். இந்நிலையில் ஒருபுறம் அமைதி வழி போராட்டத்தை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் மத மோதலாக மாற்ற முயற்சிக்க இதுவரை 41 பேரை பலி…

மேலும்...