ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை பரிசோதனையை நிறுத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவு!

புதுடெல்லி (26 மே 2020): ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை பரிசோதனையை நிறுத்த உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை மலேரியா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மாத்திரை தயாரிப்பில் இந்தியா முன்னணி வகிக்கிறது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை அங்கே கொரோனா சிகிச்சைக்கு பலன் தரும் என சொல்லப்பட்டது. ஏப்ரல் மாதம் பிரான்ஸ் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் மருந்துகள் கொரோனா வைரஸ் எண்ணிக்கையை குறைப்பதாக கண்டறியப்பட்டது. இதனால் உலக…

மேலும்...

ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து குறித்து அதிர்ச்சி தரும் ஆய்வு தகவல்கள்!

புதுடெல்லி (25 மே 2020): கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் தற்காலிகமாக வழங்கப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் குறித்து அதிர வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வைரஸ் பரவல் தடுப்பு முயற்சிகளில் மலேரியா மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயினை பயன்படுத்தலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்தது. மேலும், சுகாதாரப் பணியாளர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மருந்தை எடுத்துக்கொள்ளலாம் என ஐ.சி.எம்.ஆர். பரிந்துரைத்தது. இதனையடுத்து உலக…

மேலும்...

கொரோனா ரணகளத்திலும் அமெரிக்காவில் நடக்கும் அரசியல் அக்கப்போர்!

வாஷிங்டன் (21 மே 2020): கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை சாப்பிடுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருப்பது அமெரிக் அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், மலேரியாவுக்கு தரப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா உட்பட பல நாடுகள் இம்மருந்தை பரிந்துரைக்கின்றன. இந்த மாத்திரையை அதிகளவில் உற்பத்தி செய்யும் இந்தியாவை மிரட்டி, லட்சக்கணக்கான மாத்திரைகளை அமெரிக்கா…

மேலும்...

ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து – மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை!

புதுடெல்லி (19 ஏப் 2020): மருத்துவர்கள் பரிந்துரையின்றி ஹைட்ராக்சி குளோரோகுயினை உட்கொள்ளக்கூடாது என்றும், மருந்து கடைகள் விற்பனை செய்யக்கூடாது என்றும் மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு மலேரியாவுக்கு கொடுக்கப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை வழங்கப்படுகிறது. இதை பெரும்பாலான நாடுகள் பரிந்துரைத்து வருகின்றன. எனினும், இந்த மருந்து உட்கொள்வதால் பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மருத்துவர்களின் அறிவுரைப்படியே ஹைட்ராக்‍ஸி க்‍ளோரோகுயின்…

மேலும்...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திடீர் பல்டி!

வாஷிங்டன் (09 ஏப் 2020): இந்தியாவுக்கு மிரடல் விடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திடீரென பாராட்டு தெரிவித்துள்ளார். “மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யவில்லை என்றால், இந்தியா கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்தது. இதனை அடுத்து ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அதிக அளவில் உற்பத்தி செய்து வரும் இந்தியா, அமெரிக்காவுக்கு உதவும் வகையில் அந்த மருந்தின் ஏற்றுமதிக்கு கடந்த மாா்ச் 25-ஆம் தேதி விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டது….

மேலும்...

இந்தியாவின் முடிவில் திடீர் மாற்றம்!

புதுடெல்லி (07 ஏப் 2020): அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்ற மோடி அரசு உலக நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று நோயாளிகளின் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, அந்த மருந்தை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியிடம் அமெரிக்க அதிபா் டிரம்ப் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையைத் தொடர்ந்து, அவ்வாறு இந்தியா மருந்தை அனுப்பாவிட்டால் பின் விளைவுகளை…

மேலும்...