ஓபிஎஸ் சசிகலா இணைந்து அதிமுகவை வழி நடத்த தேவர் சமூகம் கடிதம்!

சென்னை (30 ஜூலை 2022): தேவர் சமூகம் ஒன்று கூடி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வி.கே.சசிகலா இணைந்து அதிமுகவை வழி நடத்திட வேண்டும் என தேவர் அமைப்பினர் கடிதம் எழுதியுள்ளனர். சுமார் 100 தேவர் அமைப்பினர் கைகோர்த்து ஓபிஎஸ், சசிகலா ஆகிய இருவருக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், பாரம்பரியமாக தேவர் சமூகம் ஆதரித்து வந்த அதிமுகவை சசிகலா அணியுடன் மீட்டெடுக்க வேண்டும். அ.தி.மு.க.வுக்கு உயிர் கொடுத்ததே தேவர் சமுதாயம் என்றும், தலைவர்கள் ஒன்றிணைந்து, சிதைந்து போகாமல் கட்சியைக் கைப்பற்ற…

மேலும்...

அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கம் – போஸ்டரால் பரபரப்பு!

மதுரை(28 ஜூன் 2022): அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் நீக்கம் செய்யப்பட்டதாக ஒபிஎஸ் ஆதரவாளர் வெளியிட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் ஓபிஎஸ் க்கும் இபிஎஸ் க்கும் இடையே ஒற்றை தலைமை போட்டி நிலவி வருகிறது. இது அதிமுக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏறப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இபிஎஸ் இன் ஒற்றை தலைமை முயற்சிக்கு எதிராக ஒபிஎஸ் தேர்தல் ஆணையத்தை நடியுள்ளார். இதற்கிடையே ஒபிஎஸ் ஆதரவாளர் வெளியிட்டுள்ள போஸ்டர் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. அதில் எடப்பாடி பழனிச்சாமி, கேபிமுனுசாமி,ஜெயக்குமார்…

மேலும்...

தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் மனு – எடப்பாடி வீட்டில் ஆலோசனை!

சென்னை (24 ஜூன் 2922) : ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழு கூடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராக அதிமுக ஒருங்கிணைப்பாளர். ஓ. பன்னீர்செல்வம் தலைமை தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஜூலை 11ல் நடக்கவுள்ள பொதுக்குழு குறித்து எடப்பாடி பழனிசாமி வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கே.சி.வீரமணி, பா.வளர்மதி, கே.பி.அன்பழகன், பொள்ளாச்சி ஜெயராமன், வைகைச்செல்வன் உள்ளிட்டோரும் ஆலோசனையில் ஈடுபட்டனர். நேற்று (ஜூன் 23) நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்மகன் உசேன் அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும்,…

மேலும்...

எம்ஜிஆர் பெயரில் திருத்தம் – செம கோபத்தில் அதிமுகவினர்!

சென்னை (30 மார்ச் 2022): எம்ஜிஆர் பெயருக்கு முன்னாள் உள்ள புரட்சித்தலைவர் நீக்கப்பட்டதால் அதிமுகவினர் திமுக அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக நிறுவனத் தலைவரும், புரட்சித் தலைவர் என அழைக்கப்படுபவருமான டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, கடந்த அஇஅதிமுக ஆட்சியில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் என பெயர் மாற்ற, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,…

மேலும்...

சட்டத்திற்கு விரோதமான செயலை தடுத்தேன் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை (12 மார்ச் 2022): ஜாமினில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது கள்ள ஓட்டு போட முயற்சித்ததாகக் கூறி திமுக பிரமுகர் ஒருவரை தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்து வந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஜெயக்குமார்…

மேலும்...

தலைமையேற்கிறாரா சசிகலா? – பரபரக்கும் அதிமுக!

தேனி (03 மார்ச் 2022): சசிகலாவை அதிமுகவிற்கு தலைமையேற்க வைக்க வேண்டும் என்று நிர்வாகிகள் தரப்பில் அழுத்தம் வருவதால் அதிமுக தலைமை பரபரப்பில் உள்ளது. அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ் நேற்று தன்னுடைய பண்ணை வீட்டில் தேனி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. அடைந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது இந்தக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரனை மீண்டும்…

மேலும்...

எடப்பாடி பழனிச்சாமி மீது ஓ.பி.எஸ் பாய்ச்சல்!

சென்னை (28 பிப் 2022): என்னை கேட்காமல் எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா பிறந்த நாளின் போது, சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கடந்த 24-ந் தேதி சந்தித்துப் பேசினார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த சந்திப்பிற்கு ஓ.பி.எஸ்சை அழைத்துச் செல்லவில்லை. ஓ.பி.எஸ்சிடம் சொல்ல கூட இல்லை எடப்பாடி. இத்தனைக்கும், ஓ.பி.எஸ். கேட்டும் ஜெயக்குமாரைச் சந்திக்க செல்வது பற்றி மூச்சு விடவில்லை இ.பி.எஸ். இந்த நிலையில், ஜெயக்குமார் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும்…

மேலும்...

வெற்றி பெற்றார் கட்சி மாறினார் – பத்தே நிமிடத்தில் நடந்த பரபரப்பு!

மதுரை (22 பிப் 2022): நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக கூட்டணி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்திலும் முன்னிலை வகித்து வருகிறது. 138 நகராட்சிகளில் திமுக கூட்டணி 131 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பேரூராட்சிகளை பொறுத்தவரையில் திமுக கூட்டணி 394 இடங்களிலும், 17 இடங்களில் அதிமுகவும் முன்னிலை வகிக்கிறது….

மேலும்...

மதுரையில் டெபாசிட் இழந்த திமுக!

மதுரை (22 பிப் 2022): மதுரையில் ஒரு வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளரிடம் திமுக அதிமுக இரு கட்சி வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். தமிழ்நாட்டின் 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 489 பேரூராட்சி ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று (22ஆம் தேதி) வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. அதன்படி, 21 மாநகராட்சி அனைத்திலும் திமுக முன்னிலை வகித்துவருகிறது. 138 நகராட்சியில் திமுக கூட்டணி 128…

மேலும்...

எடப்பாடி பழனிச்சாமி வசிக்கும் வார்டில் திமுக வெற்றி!

சேலம் (22 பிப் 2022): முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வசிக்கும் சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட 23வது வார்டில் திமுக வெற்றி பெற்றுள்ளது அதிமுகவை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் மேற்கு மாவட்டங்களில் திமுக அதிக இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இந்நிலையில் சேலம் மாநகராட்சிக்கு…

மேலும்...