அமித்ஷாவின் கொரோனா ரிசல்ட்? – வெளியான பரபரப்பு தகவல்!

புதுடெல்லி (09 ஆக 2020): மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா நெகட்டிவ் என செய்தி வெளியான நிலையில், இரண்டொரு நாளில் கொரோனா மறு பரிசோதனை செய்வார் என செய்திகள் வெளியாகியுள்ளன.. பாஜக எம்பி மனோஜ் திவாரி, வெளியிட்ட ட்விட்டர் பதிவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்தார் என்றும், பரிசோதனையில் நெகடீவ் என வந்ததாக கூறியிருந்தார். இது பாஜகவினரையும், அவரது குடும்பத்தினரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதற்கிடையே அடுத்த இரண்ரொரு நட்களில் அமித்ஷாவுக்கு கொரோனா…

மேலும்...

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மருத்துவமனையில் அனுமதி!

புதுடெல்லி (02 ஆக 2020): மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது ட்வீட்டர் பதிவில் “கொரோனா வைரஸ் தொடர்பான அறிகுறிகளைப் அறிந்தவுடன், நான் சோதனை செய்து கொண்டபோது அதில் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. தற்போது எனது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப் படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும்...

மோடி, அமித்ஷா நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள் – காங்கிரஸ் மூத்த தலைவர் அஹமது பட்டேல் பரபரப்பு குற்றச்சாட்டு!

புதுடெல்லி (27 ஜூன் 2020): சீனப்படைகளின் இந்திய ஆக்கிரமிப்பு, மற்றும் கொரோனாவை தடுப்பதில் தோல்வி ஆகியவற்றை திசை திருப்பவே மோடி அரசு என்னிடம் அமலாக்கத்துறை விசாரணையை ஏவி விட்டுள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அஹமது பட்டேல் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மோடி மற்றும் அமித்ஷாவின் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்து என்னிடம் விசாரணை மேற்கொண்டனர். என்றும் அஹமது பட்டேல் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம், வதோதராவை மையமாக வைத்து செயல்பட்டு வரும், ‘ஸ்டெர்லிங் பயோடெக்’ என்ற மருந்து…

மேலும்...

அமித் ஷா உடல் நிலை குறித்து அவதூறு பரப்பிய நான்கு இளைஞர்கள் கைது!

அகமதாபாத் (10 மே 2020): மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடல் நிலை குறித்து அவதூறு பரப்பியதாக நான்கு இளைஞர்களை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உடல்நிலை குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக நான்கு முஸ்லிம் இளைஞர்கள் சனிக்கிழமை குஜராத்தின் அகமதாபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஷாவின் உடல்நலம் குறித்து தவறான தகவல்களை பரப்பியதற்காக உள்ளூர் குற்றப்பிரிவு போலீசார் நான்கு பேரை கைது செய்துள்ளதாக சிறப்பு போலீஸ் கமிஷனர்…

மேலும்...

நான் நலமுடன் உள்ளேன் – வதந்திகளுக்கு அமித் ஷா முற்றுபுள்ளி!

புதுடெல்லி (09 மே 2020): தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும், முழு உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பல்வேறு அமைச்சரவைக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட புகைப்படங்களில் அமித் ஷா சோர்வாக இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இவ்வாறான புகைப்படங்களைக் கொண்டு, அமித் ஷா எதிர்ப்பாளர்கள் அவருக்கு நோய் ஏற்பட்டு விட்டதாக உறுதி செய்யப்படாத…

மேலும்...

ஸ்டாலினுக்கு மோடி – அமித்ஷாவிடமிருந்து திடீர் தொலைபேசி அழைப்பு!

சென்னை (05 ஏப் 2020): திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமீத் ஷா ஆகியோர் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளனர். இன்று காலை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தி.மு.க தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். அப்போது பிரதமரின் உடல்நலன் குறித்து தி.மு.க தலைவரும் கேட்டறிந்துள்ளார். பின்னர், ஏப்ரல் 8ம் தேதி நடைபெறும் நாடாளுமன்றக் கட்சிகளின் கூட்டத்துக்கு தி.மு.க-வுக்கு அழைப்பு…

மேலும்...

என்.பி.ஆருக்கு ஆவணங்கள் எதுவும் சமர்பிக்க தேவையில்லை – அமித் ஷா!

புதுடெல்லி (13 மார்ச் 2020): “என்.பி.ஆருக்கு ஆவணங்கள் ஏதும் தேவையில்லை” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் என்பிஆர் கணக்கெடுப்பு தொடங்கவுள்ள நிலையில், இதுகுறித்து நேற்று மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அமித்ஷா, “என்.பி.ஆர். கணக்கெடுப்பு நடத்தப்படும்போது ஆவணங்கள் ஏதும் மக்கள் அளிக்கத் தேவையில்லை. உங்களிடம் எந்த தகவல் இருக்கிறதோ அதை அளித்தால் மட்டும் போதும். தெரியாத கேள்விகளை நீங்கள் விட்டு விடலாம்” என்றார். மேலும்…

மேலும்...

முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை – அசாதுத்தீன் உவைசி சாடல்!

புதுடெல்லி (12 மார்ச் 2020): டெல்லி இனப்படுகொலையிலும் முஸ்லிம்களுக்கு அநீதிதான் கிடைக்கும் என்று அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார். டெல்லி கலவரம் தொடர்பாக மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது உரையை முடித்தவுடன், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி மத்திய அரசை கடுமையாக சாடி பேசினார். பாதிக்கப் பட்ட முஸ்லிம்களுக்கு அரசு என்ன செய்தது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். பிறகு நாடாளுமன்றம் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய உவைசி “டெல்லி வன்முறையால்…

மேலும்...

கோபேக் அமித் ஷா – கொல்கத்தாவை கதறவிட்ட எதிர் கட்சியினர்!

கொல்கத்தா (01 மார்ச் 2020): கொல்கத்தாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கொல்கத்தாவில் சிஏஏ ஆதரவு பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கொகட்த்தா சென்றார். அப்போது கொல்கத்தா விமான நிலையம் அருகே Go Back Amit Shah என்ற பதாகைகளை ஏந்தியபடி இடதுசாரிகள் போராட்டம் நடத்தினர். மேலும் அமித்ஷாவின் வருகைக்கு எதிராக வானில் கறுப்பு பலூன்களை பறக்கவிட்டும் முழக்கங்களை…

மேலும்...

டெல்லி கலவரம் – தலைவர்களின் அமைதி அதிர்ச்சி அளிக்கிறது: சோனியா காந்தி!

புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லி கலவரம் தொடர்பாக பிரதமர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை எதுவும் பேசாமல் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் அமைதி வழியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், போராட்டத்தை ஒடுக்க, நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க முயன்று தோற்றுப் போன பாஜக அரசு வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்நிலையில் திங்கள் அன்று டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும்…

மேலும்...