தமிழக தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!

சென்னை (29 செப் 2020): தமிழகத்தில் இப்போதைக்கு சட்டமன்றத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருக்கின்றன. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு தற்போதைக்கு தேர்தல் நடத்தும் திட்டமில்லை என்று தேர்தல்…

மேலும்...

கேரளா, பஞ்சாபைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம்!

ஜெய்ப்பூர் (25 ஜன 2020): கேரளா, பஞ்சாபைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்த சட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டம் குறித்த மனுக்களுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு நான்கு வாரம் கால அவகாசமும் வழங்கியுள்ளது. மேலும், “அரசு முடிவை கேட்காமல் எந்தவொரு தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது”…

மேலும்...

ஆளுநர் உரை கிழிக்கிற உரைதான் – கொந்தளித்த ஜெ.அன்பழகன்!

சென்னை (07 ஜன 2020): சட்டமன்றக் கூட்டத்தொடரில் திமுக எம்.எல்.ஏ.ஜெ.அன்பழகன் கலந்துகொள்ள தடை விதித்திருக்கிறார் சபாநாயகர் தனபால். இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெ. அன்பழகன்,” சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்தில் திமுக சார்பில் நான் கலந்து கொண்டேன். நான் பேசும்போது திட்டமிட்டு என்னை பேசவிடாமல் அமைச்சர் பெருமக்கள், சபாநாயகர் அத்துனை பேரும் குறுக்கீடு செய்தனர். நான் பேசக்கூடாது எனது கருத்து இந்த அவையிலே இடம்பெறக்கூடாது என்பதில் அனைவரும் அக்கறையோடு இருந்தார்கள். உள்ளாட்சித்…

மேலும்...

உட்கார் என்ற அன்பழகன் – தடை விதித்த சபாநாயகர்!

சென்னை (07 ஜன 2020): உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை திமுக எம்.எல்.ஏ அன்பழகன் ஒருமையில் பேசியதால் இந்த கூட்டத் தொடர் முழுவதும் அன்பழகனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்தின்போது திமுக, அதிமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் போது பேசிய திமுக MLA ஜெ.அன்பழகன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என குற்றம்சாட்டினார். அவரது குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த முதல்வர், சட்டம்…

மேலும்...