உங்களுக்கு என்ன நடக்கிறதென்று தெரியுமா? – சோனியா காந்திக்கு பாஜக பதில்!

புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லி கலவரத்திற்கு, சோனியா காந்தி மத்திய அரசை குறை கூறும் செயல், தரம் தாழ்ந்த அரசியல் என பாஜக தெரிவித்துள்ளது. டெல்லி கலவரம், திட்டமிட்ட சதி என திருமதி. சோனியா தெரிவித்துள்ளது, கண்டனத்துக்‍குரியது என மத்திய அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் கூறினார். சீக்கியர்களின் ரத்தக்கறை படிந்துள்ள காங்கிரஸ், டெல்லி கலவரத்தை வைத்து தரமற்ற அரசியல் செய்வதாக குற்றம்சாட்டினார். அமைதியை உறுதிபடுத்த வேண்டிய தருணத்தில், திருமதி. சோனியாவின் கருத்து, காவல்துறையின் மன…

மேலும்...

டெல்லி கலவரம் – தலைவர்களின் அமைதி அதிர்ச்சி அளிக்கிறது: சோனியா காந்தி!

புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லி கலவரம் தொடர்பாக பிரதமர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை எதுவும் பேசாமல் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் அமைதி வழியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், போராட்டத்தை ஒடுக்க, நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க முயன்று தோற்றுப் போன பாஜக அரசு வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்நிலையில் திங்கள் அன்று டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும்…

மேலும்...

கூட்டணியில் இருந்து கொண்டே பாஜக அரசின் சட்டத்திற்கு எதிராக தீர்மானம்!

பாட்னா (26 பிப் 2020): பிகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) கணக்கெடுப்புக்கு எதிராக, அந்த மாநில சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பிகாா் சட்டப் பேரவை செவ்வாய்க்கிழமை காலை கூடியபோது, சிஏஏ, என்ஆா்சி, என்பிஆா் ஆகியவை குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிா்க்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோா் ஒத்திவைப்பு தீா்மானம் கொண்டுவந்தனா். கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, இந்த விவகாரங்கள் தொடா்பாக விவாதிக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா். அதற்கு சட்டப் பேரவை விவகாரங்கள்…

மேலும்...

பாஜகவில் இணைந்தார் சந்தன கடத்தல் வீரப்பனின் மகள்!

சென்னை (23 பிப் 2020): சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இணைந்துள்ளார். சென்னை வியாசர்பாடியில் கணவருடன் வசித்து வரும் வித்யாராணி நேற்று கிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ், முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார். இந்நிலையில் தமிழர் வாழ்வுரிமை கட்சியில் நிர்வாகியாக உள்ள வீரப்பனின் மனைவி, மகள் பாஜகவில் இணைந்தது குறித்து கருத்து சொல்ல மறுத்துவிட்டர்.

மேலும்...

பாலியல் வன்புணர்வு வழக்கில் பாஜக எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு!

லக்னோ (19 பிப் 2020): உத்திர பிரதேசம் மாநிலம் பாஜக எம்.எல்.ஏ உள்ளிட்ட ஆறு பேர் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்திர பிரதேசம் படேஹி காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். அதில் “என் கணவர் கடந்த 2007 ஆம் ஆண்டு காலமாகிவிட்டார். என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாஜக எம்.எல்.ஏ ரவீந்திரநாத் திரிபாதியின் மருமகன் என்னை பல வருடங்கள் ஏமாற்றி வந்தார். மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு…

மேலும்...

பாஜக அரசு அடிமை அரசாகிவிட்டது – சிவசேனா கடும் விமர்சனம்!

மும்பை (17 பிப் 2020): அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வருகைக்காக, மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகள் அனைத்தும் அடிமைத்தனத்தின் வெளிப்பாடு என்று சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் இதுகுறித்து வெளியாகியுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது: அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகையால், குடிசைகளை மறைக்க சுவர் எழுப்புவது உள்ளிட்ட முன்னேற்பாடுகள் அனைத்தும் இந்தியாவின் அடிமைத்தனத்தின் வெளிப்பாடாகவே உள்ளது. ட்ரம்ப் வருகையால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சியில் மாற்றம் ஏற்படப்போவதும் இல்லை, புதிதாகக் கட்டப்படும் சுவருக்குப்…

மேலும்...

ரஜினிக்கு பாஜக இன்னும் ஸ்க்ரிப்ட் ரெடி செய்யவில்லை – ஜவாஹிருல்லா விளாசல்!

சென்னை (15 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை போலீஸ் தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்க ரஜினிக்கு இன்னும் பாஜக ஸ்க்ரிப்ட் ரெடி செய்யவில்லை என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடிய மக்கள் மீது தடியடி நடத்திய சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, டெல்லியில் ஷாகீன் பாக்கில் 2 மாதங்களாக போராட்டம் நடக்கிறது. தமிழகத்தில் தொடர்…

மேலும்...

டெல்லி தோல்வி எதிரொலி – பதுங்கும் பாஜக -குழப்பத்தில் அமித் ஷா!

புதுடெல்லி (13 பிப் 2020): டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து பாஜக தலைமை குழப்பத்தில் உள்ளது. இன்று டெல்லி தேர்தல் தோல்வி குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பாஜக தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சே தோல்விக்கு காரணம்” என்பதை ஒப்புக் கொண்டார். மேலும், “பாகிஸ்தான் போ, சுட்டுத் தள்ளுங்கள்” போன்ற பாஜக தலைவர்களின் வார்த்தைகளை பாஜக ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அமித் ஷா தெரிவித்தார். அதேவேளை குடியுரிமை சட்டம்தான் பாஜகவின் தோல்விக்கு…

மேலும்...

மோடியின் சரிவு – சர்வதேச ஊடகங்கள் விமர்சனம்!

புதுடெல்லி (13 பிப் 2020): பிரதமர் மோடியின் சமீபத்திய சரிவுகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது. அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வராக பதவியேற்கவுள்ளார். பல முக்கிய தலைவர்கள் முகாமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டபோதும், குடியுரிமை சட்டம், மக்கள் விரோத போக்கு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பாஜக 8 இடங்களில் மட்டும்தான் வெற்றிபெற…

மேலும்...

ப.சிதம்பரம் மீது மகளிர் காங்கிரஸ் தலைவி காட்டம்!

புதுடெல்லி (12 பிப் 2020): ஆம் ஆத்மி கட்சியை பாராட்டிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை மகளிர் காங்கிரஸ் தலைவி ‌ஷர்மிஸ்தா முகர்ஜி கடுமையாக சாடியுள்ளார். டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. பிரித்தாளும் மோசமான…

மேலும்...