சவூதி பஹ்ரைன் தரைவழி பயணத்திற்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி அவசியம்!

ரியாத் (10 மார்ச் 2022): சவூதி-பஹ்ரைன் தரைவழி (காஸ்வே) பயணம் செய்ய பூஸ்டர் டோஸ் கட்டாயம் என்று காஸ்வே ஆணையம் தெரிவித்துள்ளது. அதேவேளை மூன்று மாதங்களுக்குள் இரண்டாவது டோஸ் பெற்றவர்களுக்கும், கோவிட் தடுப்பூசியில் சிறப்புச் சலுகை பெற்றவர்களுக்கும் இந்த விதிமுறையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கோவிட் கவரேஜுடன் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டைக் கொண்ட பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளும் இதிலிருந்து விலக்கு பெறுகிறார்கள். சவூதி அரேபியாவுக்குள் நுழைவதற்கு உள்துறை அமைச்சகம் புதிய சலுகைகளை அளித்துள்ள நிலையில், காஸ்வே ஆணையத்தின் உத்தரவு…

மேலும்...

அஸ்ட்ராஜெனெகா மூன்றாவது டோஸுக்கு ஓமிக்ரனை எதிர்க்கும் சக்தி அதிகம் : ஆய்வு!

லண்டன் (13 ஜன 2022): அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது பூஸ்டர் டோஸுக்குப் பிறகு கோவிடின் மாறுபாடான ஓமிக்ரானுக்கு எதிராக நல்லமுறையில் செயல்படுவதாக ஆங்கிலோ-ஸ்வீடிஷ் பயோஃபார்மா மேஜர் வெளியிட்ட ஆரம்ப தரவு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டு இந்தியாவில் கோவிஷீல்டாக நிர்வகிக்கப்படும் தடுப்பூசியின் தற்போதைய பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்புத் திறன் சோதனையில், மூன்றாவது டோஸாக கொடுக்கப்படும் பூஸ்டர் டோஸ், பீட்டா, டெல்டா, ஆல்பா மற்றும் காமா உள்ளிட்ட கொரோனா வைரசுக்கு உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்தது…

மேலும்...

கோவிட் தடுப்பூசி மூன்றாவது டோஸுக்கான இடைவெளி எத்தனை மாதங்கள்?

புதுடெல்லி (26 டிச 2021): கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸுக்கும் மூன்றாவது டோஸுக்கும் இடையிலான இடைவெளி ஒன்பது முதல் 12 மாதங்கள் வரை இருக்கலாம் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளன. தற்போது இந்தியாவின் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த தடுப்பூசிகளில் உள்ள இடைவெளிகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும், இது குறித்த இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும் மருத்துவதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். பிரதமர் நரேந்திர மோடி, சனிக்கிழமை இரவு…

மேலும்...

கத்தாரில் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் கால அளவு மாற்றம்!

தோஹா (16 நவ 2021): கத்தாரில் கோவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் பெறுவதற்கான தகுதி காலம் குறைக்கப்பட்டுள்ளது. கத்தாரில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்து எட்டு மாதங்களுக்குப் பிறகு எடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை சுகாதார அமைச்சகம் மாற்றியுள்ளது. அதன்படி தற்போது இரண்டு டோஸ் எடுத்து ஆறு மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தடுப்பூசிகளுக்கும் ஆறு மாதங்களுக்குப் பிறகு நோய் எதிர்ப்பு சக்தி படிப்படியாகக் குறையும் என்ற…

மேலும்...