ஊரடங்கு காலத்தில் சிஏஏ எதிர்ப்பாளர்களை கைது செய்வதா? – எதிர் கட்சிகள் கடும் கண்டனம்!

புதுடெல்லி (02 ஜுன் 2020): நாடெங்கும் ஊரடங்கு அமலில் இருக்கும்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடிய மாணவர்களை கைது செய்வதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கொரோனா பவலாலும், ஊரடங்காலும் நாடே பெரும் சோதனை காலத்தில் உள்ளது. இந்நிலையில் அவசியமில்லாமல் சிஏஏ எதிர்ப்பு மாணவர்களை டெல்லி போலீஸ் கைது செய்து வருகிறது. இதற்கு எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக உலகம் இப்போது உள்ள சூழலில் இதுபோன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுவதை கூட்டாக கண்டிக்க…

மேலும்...

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட வழக்கில் கைதான இஸ்ரத் ஜஹானுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன்!

புதுடெல்லி (30 மே 2020): காங்கிரஸ் முன்னாள் நகராட்சி கவுன்சிலரும், சிஏஏ-என்ஆர்சிஐ-என்ஆர்சி எதிர்ப்பாளருமான இஷ்ரத் ஜஹானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை சட்ட எதிர்ப்பு அமைதி போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்ரத் ஜஹான் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்தர் ராணா ஜஹானுக்கு ஜூன் 10 முதல் ஜூன் 19 வரை இடைக்கால ஜாமீன் வழங்கினார். இஷ்ரத் மீதான ஜாமீன் மனுவில், இந்த விவகாரத்தில்…

மேலும்...

ஊரடங்கு காலங்களிலும் அரசின் முஸ்லிம் விரோத போக்கு !

லக்னோ (28 மே 2020): உத்திர பிரதேசம் மாநிலம் அலிகார் பல்கலைக் கழக மாணவர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இவர்களை போலீசார் ஊரடங்கு காலங்களில் சத்தமின்றி கைது செய்துள்ளனர். ஏற்கனவே டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்ட சஃபோரா சர்கர், மீரன் ஹைதர், ஷிஃபால் ரஹ்மான், ஆசிப் இக்பால் தன்ஹா உள்ளிட்ட ஏராளமான மாணவர்களை டெல்லி போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் உத்திர பிரதேசத்திலும் போலீசார் முஸ்லிம்களை…

மேலும்...

இந்தியாவின் இஸ்லாமியர்களுக்கு எதிரான கொள்கைளை கண்டித்து அமெரிக்க செயிண்ட் பால் நகரசபை தீர்மானம்!

வாஷிங்டன் (21 மே 2020): இந்தியாவின் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளை கண்டித்து அமெரிக்க செயிண்ட் பால் நகரசபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் மிகைத்து நிற்கும் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகள் உலக அளவில் பேசுபொருளாக உள்ளது. சமீபத்தில் கொரோனா பரவலில் இஸ்லாமியர்களை மையப்படுத்தி காய் நகர்த்திய இந்திய அரசின் நடவடிக்கைகள் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் குடியுரிமை சட்டம், முத்தலாக் சட்டம் என எல்லாவகைகளிலும் முஸ்லிம்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர். இந்நிலையில் இவை அரபு நாடுகளின் பார்வைக்குச்…

மேலும்...

சீமான் மீது தேச துரோக வழக்கு – கோவையில் அப்படி என்ன பேசினார்?

கோவை (09 மே 2020): நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 22ம் தேதி கோவை ஆத்துப்பாலம் பகுதியில் நடந்த “ஷாகின்பாக்” போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சீமான், சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் சட்டங்களுக்கு எதிராக பேசியிருந்தார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர் 72 ஆண்டுகால இந்தியாவில் பல அரசுகள் ஆண்டு இருக்கின்றன எனவும் இத்தனை ஆண்டுகளில் யார் இந்தியன் என்று கூட தெரியாமல் இருந்திருக்கின்றனர் என…

மேலும்...

டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு

புதுடெல்லி (22 மார்ச் 2020): குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் போராட்டம் நடைபெறும் பகுதியின் அருகில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி கேட்டுக் கொண்டபடி மக்கள் ஊரடங்கு நாடுமுழுவதும் இன்று காலை 7 மணி முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தலைநகர் டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்கள் எவ்வித போக்குவரத்துமின்றி வெறிச்சோடி கிடக்கின்றன. மக்கள் ஊரடங்கு அமலில் இருந்தாலும் சில கட்டுப்பாடுகளுடனும்…

மேலும்...

சிஏஏ வை எதிர்த்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேரணி!

சென்னை (19 மார்ச் 2020): சிஏஏவை எதிர்த்து ததஜ சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இணைந்து நேற்று சென்னையில் பேரணி நடத்தினர். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டை தவிர தமிழகத்தின் பல பகுதிகளில் டெல்லி ஷாஹீன் பாக் மாடலில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அரசின் உத்தரவை ஏற்று, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க பல இஸ்லாமிய…

மேலும்...

பட்டும் திருந்தாத யோகி ஆதித்யநாத் அரசு – உச்ச நீதிமன்றம் சாடல்!

புதுடெல்லி (12 மார்ச் 2020): அலகாபாத் நீதிமன்றத்தை அடுத்து யோகி ஆதித்யநாத் அரசின் எல்லை மீறிய செயலுக்கு உச்ச நீதிமன்றமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி பலரது புகைப்படங்களையும், அவர்களது வீட்டு முகவரிகளையும், உத்திர பிரதேசத்தின் பல இடங்களில் யோகி அரசு பதாகைகளாக அமைத்துள்ளது. இதை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், யோகி அரசை கடுமையாகச் சாடியுள்ளது மட்டுமின்றி இது தனிமனித…

மேலும்...

கோவை ஷஹீன் பாக் போராட்டம் தற்காலிக நிறுத்தம்!

கோவை (12 மார்ச் 2020): கோவை ஷஹீன்பாக் போராட்டம் 5 நாட்களுக்கு தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் டெல்லி ஷஹீன் பாக் போராட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதன் ஸ்டைலில் நாடெங்கும் பெண்கள் முன்னிலையில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கோவை ஆத்துப்பாலம் இஸ்லாம் ஷாஃபி ஜமாத் மசூதி மைதானத்திலும் ஷஹீன்பாக் ஸ்டைலில் கடந்த 23 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போராட்டம் நடைபெறும் பகுதி…

மேலும்...

நேர காலம் பார்த்து நிதானமாக ஆதரவளித்த ஸ்டாலின்!

சென்னை (12 மார்ச் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை, மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் சிஏஏ எதிர்ப்பு தொடர் போராட்டத்திற்கு ஸ்டாலின் நேற்று நேரில் சென்று ஆதரவளித்தார். சென்னை, வண்ணாரப்பேட்டை ஷஹீன் பாக் மற்றும் மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து 27 நாட்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டங்களை பெண்களே முன்னின்று நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு திருமாவளவன், கருணாஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் நேரில் சென்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர். தமிழக சட்டப் பேரவையில் சிஏஏவை…

மேலும்...