இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு!

மும்பை (24 ஜன 2020): இந்தியாவில் இருவர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பீஜிங், ஷாங்காய் போன்ற சீன நகரங்களில் மட்டுமின்றி அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருகிறது. இந்நிலையில் சீனாவிலிருந்து இந்தியா வந்த இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு சளி மற்றும் இருமல் இருந்ததால், அவர்கள் இங்கு வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால்…

மேலும்...

கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை உயர்வு!

பீஜிங் (24 ஜன 2020): சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பீஜிங், ஷாங்காய் போன்ற சீன நகரங்களில் மட்டுமின்றி அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருகிறது. தொடர்ந்து, முதன்முதலில் கொரோனா கண்டறியப்பட்ட மத்திய நகரமான வுஹானில் வைரஸ் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள 1,072 பேரையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும்,…

மேலும்...

உறைந்து போயிருக்கும் உலக மக்கள் – சிகிச்சை அளிப்போரையும் தாக்கும் அபாய சங்கு!

சீனா ஏதாவது ஒரு வைரஸ் நோயால் பாதிக்கப் பட்டுக் கொண்டே உள்ளது. முன்பு சார்ஸ் இப்போது கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இருபது நாள்களுக்குள் தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் இந்த வைரஸ் வேகமாகப் பரவியதால், உலக நாடுகள் அச்சத்தில் உறைந்துள்ளன. ஜனவரி 1 அன்று, சீனாவின் உஹான் நகரில் 61 வயதான ஒருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாள்களில் மூச்சுத்திணறல் மற்றும் நுரையீரல் தொற்று சிகிச்சைக்காக, பலரும் மருத்துவமனைக்கு வந்தனர்….

மேலும்...

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் தீவிர பரிசோதனை!

சென்னை (23 ஜன 2020): கொரொனா வைரஸ் பல நாடுகளிலும் பரவி வரும் நிலையில் சென்னைக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் உடல் பரிசோதனைக்கு பின்னரே வெளியே அனுமதிக்கப் படுகின்றனர். சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரோனா என்ற வைரஸ் மனிதர்களிடையே பரவத் தொடங்கியுள்ளது. இது மிகவும் ஆபத்தான வைரஸ் என்பதால் உயிரை பறிக்கும் அபாயம் இருக்கிறது. தற்போது வரை சீனாவில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வுஹான், பெய்ஜிங், ஷாங்காய், ஹெனான், தியான்ஜின், ஜேஜியாங் ஆகிய பகுதிகளில்…

மேலும்...

அமெரிக்காவிற்குள் நுழைந்த ஆபத்து!

நியூயார்க் (22 ஜன 2020): மனிதர்கள் மூலம் பரவும் ஆட்கொல்லி வைரஸ் காரணமாக சீனாவில் பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்த சூழலில், அந்த வைரஸ் பாதிப்பு அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. சார்ஸ் குடும்பத்தை சேர்ந்த வைரஸ் ஒன்று தற்போது சீனாவில் பரவ ஆரம்பித்துள்ளது. சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து உள்ள இந்த கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் கடும் அச்சம்…

மேலும்...