சீன அதிபருக்கு பதிலாக வடகொரிய அதிபரின் உருவ பொம்மையை எரித்த பாஜகவினர்!

கொல்கத்தா (20 ஜூன் 2020): சீன அதிபர் ஜின்பிங்கின் உருவ பொம்மைக்கு பதிலாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் இன் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளனர். லடாக் எல்லையில் சீன வீரர்கள் திடீரென நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதையடுத்து சமூக வலைத்தளங்களில் சீனா மற்றும் அந்நாட்டு பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கைகள்…

மேலும்...

சீன படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவவில்லை – பிரதமர் மோடி!

புதுடெல்லி (19 ஜூன் 2020): இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவவில்லை, என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராணுவ நிலையை கைப்பற்றவும் இல்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சித்தவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டது என்று அனைத்துக் கட்சிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் இந்திய- சீன ராணுவம் இடையே நடந்த மோதலில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சீன…

மேலும்...

இன்னொரு மகனையும் நாட்டுக்காக சேவை செய்ய அனுப்பவுள்ளேன் – சீனா எல்லையில் உயிரிழந்த வீரரின் தந்தை உருக்கம்!

பாட்னா (17 ஜூன் 2020): சீனா இந்தியா இடையேயான மோதலில் உயிரிழந்த வீரர் அமன்குமார் சிங்கின் தம்பியையும் இந்திய ராணுவத்திற்கு அனுப்பவுள்ளதாக அமனின் தந்தை தெரிவித்துள்ளார். பீகார் சமஸ்திபூர் மாவட்டத்தில் மொஹியுதீன் நகரில் உள்ள சுல்தான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அமன் குமார். இவர் ஜூன் 15 ஆம் தேதி இரவு கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய துருப்புக்களுக்கும் சீன இராணுவத்தின் (பி.எல்.ஏ) படையினருக்கும் இடையே நடந்த மோதலில் உயிர் இழந்தார். அமன் குமாருக்கு மனைவி மினு தேவி, தந்தை…

மேலும்...

இந்திய சீன எல்லை மோதல் – மேலும் நான்கு இந்திய வீரர்கள் கவலைக்கிடம்!

லடாக் (17 ஜூன் 2020): லடாக் இந்திய சீன ராணுவ வீரகளுக்கிடையேயான மோதலில் காயமடைந்த மேலும் நான்கு வீரர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் திங்கள்கிழமை இரவு இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையே நடந்த மோதலில் மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் சீனா தரப்பில் 43 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்தியா தரப்பில் காயமடைந்த மேலும் நான்கு ராணுவ வீரர்களின் உடல் நிலை கவலைக்கிடமாக…

மேலும்...

இந்திய சீன எல்லையில் வீரர்கள் சாவு – பிரதமர் மவுனம் ஏன்?: ராகுல் காந்தி கேள்வி!

புதுடெல்லி (17 ஜூன் 2020): லடாக்கில் இந்திய சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த மே மாதம் இந்தியா-சீனா எல்லையில் இருநாட்டு வீரர்களுக்கு மோதல் ஏற்பட்டது. அதனை அடுத்து இருநாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இந்த நிலையில், லடாக்கின் கல்வான் பகுதியில் இந்தியா-சீனா ராணுவத்தினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த…

மேலும்...

இந்திய சீன எல்லையில் நடந்த மோதலில் 43 சீன ராணுவ வீரர்கள் பலி!

லடாக் (16 ஜூன் 2020): இந்திய சீன எல்லையில் திங்கள் கிழமை இரவு இரு நாட்டு ராணுவத்தினருக்கிடையே நடைபெற்ற மோதலில் சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்ததக ஏ என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் திங்கள்கிழமை இரவு இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையே நடந்த மோதலில் மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் சீனா தரப்பில் 43 பேர் கொல்லப்பட்டதாகவும் தற்போது செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக இந்தியா தரப்பில்…

மேலும்...

இந்திய சீன எல்லையில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் பலி – பரபரப்பு தகவல்!

லடாக் (16 ஜூன் 2020): இந்திய சீன எல்லையில் திங்கள் கிழமை இரவு நடைபெற்ற இரு நாட்டு ராணுவத்தினருக்கிடையேயான மோதலில் 20 இந்திய வீரர்கள் பலியானதாக லடாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் திங்கள்கிழமை இரவு  இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக ஒரு இந்திய ராணுவ அதிகாரி மற்றும் இரண்டு ஜவான்கள் என மூன்று வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்…

மேலும்...

சீனாவின் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரருக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு!

சென்னை (16 ஜூன் 2020): லடாக்கில் இந்திய-சீன ராணுவத்திற்கு இடையே நடந்த தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் பழனி குடும்பத்துக்கு முதல்வர் ரூ 20 லட்சம் நிவாரணம் வழங்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். லடாக்கில் இந்திய-சீன ராணுவத்திற்கு இடையே நடந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி மற்றும் இரண்டு வீரர்கள் உள்பட 3 பேர் வீரமரணம் அடைந்தனர். இதில் தமிகத்தைச் சேர்ந்த பழனி(வயது 40) வீரமரணம் அடைந்தார். இவர் ராமநாதபுரம் திருவாடானை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்….

மேலும்...

இந்திய சீன ராணுவங்கள் எல்லையின் சில பகுதிகளிலிருந்து பின்வாங்கியது!

லடாக் (09 ஜூன் 2020): இந்தியா-சீன அதிகாரிகள் இடையே நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையை அடுத்து, லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து இரு நாட்டு ராணுவங்களும் பின்வாங்கியுள்ளன. கடந்த சில நாட்களாக லடாக் எல்லை பகுதிகளில் சீன ராணுவம் தங்களது படைகளை குவித்து வந்த நிலையில், அங்கு பதற்றம் நிலவியது. இந்த பதற்றத்தை தணிக்கும் விதமாக, இதற்க்கு முன்னே இந்தியா-சீனா இடையே ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை “மால்டோ” என்ற இடத்தில் நடந்தது. அந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இன்று இருநாட்டு…

மேலும்...

லடாக் எல்லை பிரச்சனை குறித்து இந்தியா சீனா முதல் கட்ட பேச்சுவார்த்தை நிறைவு!

புதுடெல்லி (06 ஜூன் 2020): லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. லடாக்கின் எல்லை பகுதியில் கடந்த மே 5 மற்றும் 6-ம் தேதிகளில் இந்திய ராணுவ படையினருக்கும் சீன ராணுவ படையினருக்கும் சிறிய அளவில் பிரச்னை ஏற்பட்டது. இதில் 150 வீரர்கள் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து பிரச்னை தொடங்கிய இடமான பாங்காங் டிசோ ஏரியில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள நகரி குன்சா…

மேலும்...