BREAKING NEWS: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டாக்டர் மன்மோகன் சிங் நெஞ்சு வலியின் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 87 வயதான மன்மோகன் சிங் இன்று இரவு 8.45 மணியளவில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 2009 ஆம் ஆண்டு இருதய அறுவை சிசிச்சை செய்தது குறிப்பிடத்தக்கது. Delhi: Former Prime Minister Dr Manmohan Singh has been admitted to…

மேலும்...

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் உயர் மட்டக் குழு!

புதுடெல்லி (19 ஏப் 2020): நாட்டின் முக்‍கிய பிரச்சனைகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்‍கை எடுப்பதற்கு ஏதுவாக புதிய உயர்மட்ட ஆலோசனைக்‍ குழுவை காங்கிரஸ் கட்சித் தலைவர் திருமதி சோனியா காந்தி நியமித்துள்ளார். முன்னாள் பிரதமர் டாக்‍டர் மன்மோகன் சிங் தலைமையிலான குழுவில், திரு. ராகுல் காந்தி, திரு. ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, திரு. கே.சி. வேணுகோபால், திரு. ப. சிதம்பரம், திரு. மணிஷ்திவாரி, திரு. ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட 11 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்தக்‍ குழு நாள்தோறும் சந்தித்து,…

மேலும்...

காங்கிரஸ் தலைவர் காலில் விழுந்த ரஜினி!

சென்னை (17 மார்ச் 2020): சென்னையில் விழா ஒன்றில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் காலில் விழுந்து ரஜினிகாந்த் ஆசி வாங்கியுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், போர் வரும் போது களம் காணுவோம் எனவும் அறிவித்தார். எனினும் அவர் எப்போது கட்சி தொடங்குவார் என பரவலாக எதிர்பார்ப்புகள் இருந்து வரும் நிலையில், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்…

மேலும்...

பாஜகவில் சேர்ந்த சிலமணி நேரங்களில் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு அடித்தது ஜாக்பாட்!

புதுடெல்லி (11 மார்ச் 2020): பா.ஜ.க.வில் சேர்ந்த சில மணி நேரங்களில் மத்திய பிரதேசத்துக்கான மாநிலங்களை தேர்தல் வேட்பாளராக ஜோதிராதித்யா சிந்தியாவை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி கமல்நாத் தலைமையில் நடந்து வரும் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் வலுவான மூத்த தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்தார். பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து பேசிய அவர் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து ஆலோசித்தார். ஜோதிராதித்ய சிந்தியாவை…

மேலும்...

19 எம்.எல்.ஏக்களை இழந்த காங்கிரஸ் – பரிதவிக்கும் மத்திய பிரதேச அரசு!

புதுடெல்லி (10 மார்ச் 2020): ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் எம்.எல்.ஏக்கள் 19 பேர் காங்கிரஸிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். காங்., ஆட்சி நடக்கும் முதல்வர் கமல்நாத் தலைமையிலான அமைச்சரவையில் ஆறு அமைச்சர்கள், 10 எம்.எல்.ஏ.,க்கள் என 16 பேர், மூன்று சிறப்பு விமானம் மூலம், மத்திய பிரதேசத்தின் போபால் நகரிலிருந்து புறப்பட்டு, பெங்களூருக்கு சென்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன், தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுனர். இதற்கிடையே இருக்கும் ஜோதிராதித்யா சிந்தியா, டில்லியில் பிரதமர்…

மேலும்...

ப.சிதம்பரம் மீது மகளிர் காங்கிரஸ் தலைவி காட்டம்!

புதுடெல்லி (12 பிப் 2020): ஆம் ஆத்மி கட்சியை பாராட்டிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை மகளிர் காங்கிரஸ் தலைவி ‌ஷர்மிஸ்தா முகர்ஜி கடுமையாக சாடியுள்ளார். டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. பிரித்தாளும் மோசமான…

மேலும்...

காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் ராஜினாமா!

புதுடெல்லி (12 பிப் 2020): டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று அக் கட்சியின் பொறுப்பாளர் பி.சி.சாக்கோ ராஜினாமா செய்துள்ளார். 70 இடங்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பாஜக எட்டு இடங்களை கைபற்றியது. ஆனால் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. காங்கிரஸ் வேட்பாளர்களில் 63 பேர் டெபாசிட்டுகளை இழந்துள்ளனர். இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவை…

மேலும்...

டெல்லியில் ஆம் ஆத்மியின் ஐந்து முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றி!

புதுடெல்லி (12 பிப் 2020): நடைபெற்று முடிந்துள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக போட்டியிட்ட ஐந்து முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளதோடு, ஆம் ஆத்மி 62 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் ஆம் ஆத்மி சார்பில் ஐந்து முஸ்லிம் வேட்பாளர்களும் களத்தில் இறக்கப்பட்டனர். டெல்லியின் ஒக்லா தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் அமானத்துல்லா கான் தன்னை எதிர்த்து போட்டியிட்ட…

மேலும்...

டெல்லியில் ஆம் ஆத்மி 63 இடங்களில் வெற்றி!

புதுடெல்லி (11 பிப் 2020): டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 63 இடங்களை கைபற்றியுள்ளது. டெல்லியில் கடந்த 8 ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்த டில்லி சட்டசபையில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் இன்று ( 11 ம் தேதி) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.. கிட்டத்தட்ட முடிவுகள் அறிவிக்கப் பட்ட நிலையில் ஆம் ஆத்மி கட்சி 63 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. பாஜக 7…

மேலும்...

டெல்லியில் அடுத்தடுத்து பாஜக இழக்கும் இடங்கள் – 62 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி!

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 62 இடங்களை கைபற்றி அசுர வெற்றி பெற்றுள்ளது. டெல்லியில் கடந்த 8 ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்த டில்லி சட்டசபையில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் இன்று ( 11 ம் தேதி) காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. பாஜக 8 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் ஒரு…

மேலும்...