காங்கிரஸ் மீது முஸ்லிம் லீக் குற்றச்சாட்டு!

புதுடெல்லி (10 டிச 2022): “மாநிலங்களவையில் பொதுசிவில் சட்ட மசோதா அறிமுகப்படுத்தியபோது காங்கிரஸ் எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இல்லை” என்று முஸ்லிம் லீக் எம்பி பி.வி அப்துல் வஹாப் குற்றம் சாட்டியுள்ளார். “தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் வரிசையில் காங்கிரஸ் இல்லை என்று அவர் தெரிவித்தார். கடந்த காலங்களைப் போல் தேசிய அளவில் எதிர்க்கட்சி வரிசையில் ஒற்றுமை இல்லை.” என்று அப்துல் வஹாப் தெரிவித்தார். மேலும் ராஜ்யசபாவில் அமலாக்க சட்டம் குறித்த தனியார் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது காங்கிரஸ் உறுப்பினர்கள்…

மேலும்...

குஜராத்தில் காங்கிரஸின் தோல்விக்கு காரணமான உவைசியும் ஆம் ஆத்மியும்!

அஹமதாபாத் (09 டிச 2022): ஆம் ஆத்மி கட்சியும் (ஏஏபி) மற்றும் அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சியும் குஜராத்தில் சிறுபான்மையினரின் வாக்குகளை பிரித்து காங்கிரஸின் கனவை தகர்த்துள்ளது. குஜராத்தில் சிறுபான்மையினர், முதன்மையாக முஸ்லீம்கள், கடந்த பல தசாப்தங்களாக, குறிப்பாக 2002 பிந்தைய குஜராத் கலவரத்திற்குப் பிறகு காங்கிரஸின் விசுவாசமான வாக்காளர்களாக உள்ளனர். இந்நிலையில் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடந்து, டிசம்பர் 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. பாரதிய…

மேலும்...

தேசிய கட்சியாக அங்கீகாரம் கிடைப்பது எப்படி?

இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. குஜராத்தில் பாஜக தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சிக்கு வரும் நிலையில், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்கிடையில், கருத்துக் கணிப்புகளின்படி, குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு 9 முதல் 21 இடங்கள் கிடைக்கும். குஜராத்தில் குறைந்தது இரண்டு இடங்களையாவது பெற்றால் ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்து கிடைக்கும். தேசிய கட்சி அந்தஸ்து பெறுவதற்கு சில…

மேலும்...

பாஜகவுக்கு பலத்த அடி – குஜராத்தில் மட்டுமே கொண்டாட்டம்!

புதுடெல்லி (08 டிச 2022): குஜராத்தில் 182 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல், 2 கட்டங்களாக நடைபெற்றது. டிசம்பர் 1ம் தேதி முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5ம் தேதி 2ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, இன்று காலை தொடங்கியது. காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் குஜராத்தில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. அதேவேளை இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. இமாச்சல பிரதேசத்தில்…

மேலும்...

ஆம் ஆத்மியால் குஜராத்தில் மண்ணை கவ்விய காங்கிரஸ்!

அகமதாபாத் (08 டிச 2022): : குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸின் பாரம்பரிய வாக்கு வங்கியில் கால் பதித்ததால், காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. முதல் கட்ட முடிவுகளின்படி ஆம் ஆத்மி கட்சி 13 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரசுக்கு 26 சதவீதம். இதற்கிடையில் பாஜகவின் வாக்கு வங்கி அசைக்கப் படவில்லை. 182 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அக்கட்சி முன்னிலையில் உள்ளது. 2017ல் பாஜக 99 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ்…

மேலும்...

குஜராத்தில் பாஜக முன்னிலை!

ஆமதாபாத் (08 டிச 2022): குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முன்னிலை வகிக்கிறது. குஜராத்தில் பாஜக 100ஐ தாண்டியுள்ளது. பாஜக தற்போது 128 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 43 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆம் ஆத்மி கட்சியால் மாநிலத்தில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

மேலும்...

இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னிலை!

புதுடெல்லி (08 டிச 2022): இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 21 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 20 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

மேலும்...

திப்பு சுல்தானின் சிலையை நிறுவுவதா? – காங்கிரஸ் தலைவருக்கு கொலை மிரட்டல்!

பெங்களூரு (18 நவ 2022): கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ தன்வீர் செய்யதுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தன்வீர் போலீசில் புகார் அளித்துள்ளார். திப்பு சுல்தானின் மிக உயரமான சிலையை இங்கு நிறுவப்போவதாக அறிவித்ததற்காக தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான தன்வீர் சைட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஹாசன் மாவட்டம் சக்லேஷ்பூரைச் சேர்ந்த இந்துத்துவா அமைப்பு உறுப்பினர் ரகு மீது உதயகிரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்களான மைசூரு…

மேலும்...

ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸுக்கு பின்னடைவு!

சிம்லா (08 நவ 2022): சட்டசபை தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தின் 26 முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர். அவர்கள் ஹிமாச்சல் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் மற்றும் மாநில பொறுப்பாளர் சுதன் சிங் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் பொதுச் செயலாளர் தரம்பால் தாக்கூர், முன்னாள் செயலாளர் ஆகாஷ் சைனி, முன்னாள் கவுன்சிலர் ராஜன் தாக்கூர், இளைஞர்…

மேலும்...

நான் காங்கிரஸ் தலைவரானால் இதெல்லாம் நடக்கும் – சசிதரூர் உறுதி!

கவுஹாத்தி (16 அக் 2022): காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் பாஜகவில் இணையும் காங்கிரஸ் தலைவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சசிதரூர் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் வாக்கு சேகரித்து கவுஹாத்தி சென்ற சசிதரூர் கூறுகையில், காந்தி குடும்பம் எப்பொழுதும் காங்கிரஸுடன் இருக்கிறது, நாங்களும் அப்படித்தான். காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் காங்கிரஸின் வெற்றி என்ற…

மேலும்...