பாஜகவில் நுழைந்த மேலும் இரு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்!

அசாம் (29 டிச 2020): அசாமின் முன்னாள் அமைச்சரும், கோலாகாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான அஜந்தா நியோக், லக்கிபூரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜ்தீப் கோவலா ஆகியோர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளனர். அசாம் பாஜக தலைவர் ரஞ்சித் தாஸ் மற்றும் மாநில நிதி மற்றும் கல்வி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் கலந்து கொண்ட விழாவில் இவர்கள் இருவரும் பாஜகவில் இணைந்தனர். கட்சி விரோத செயல்களுக்காக அஜந்தா நியோகியை டிசம்பர் 25 அன்று காங்கிரஸ்…

மேலும்...

மாட்டிறைச்சி உண்ணுவதை முஸ்லிம்கள் கைவிட வேண்டும் – காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்!

பெங்களூரு (20 டிச 2020): “இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மாட்டிறைச்சி உண்ணுவதை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும்.” என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான இப்ராகிம் தெரிவித்துள்ளார்ர் கர்நாடகாவில் பாஜக அரசு அறிமுகப்படுத்திய பசு வதை சட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் இப்ராஹிம் ஆதரவளித்துள்ளார். அதேவேளை, “நாட்டில் இந்து பெரும்பான்மையினரின் மத உணர்வுகளை புண்படுத்தும் எந்தவொரு செயலிலும் முஸ்லிம் சமூகம் ஈடுபடக்கூடாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” என்றார். மேலும் முஸ்லிம் சமூகம் இதை உணர்ந்து மாட்டிறைச்சி சாப்பிடுவதைத் தவிர்க்க…

மேலும்...

மவுனம் கலைத்த ராகுல் காந்தி!

புதுடெல்லி (20 டிச 2020): மீண்டும் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க ராகுல் காந்தி ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் டெல்லியில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, முன்னாள் மத்திய…

மேலும்...

காங்கிரஸ் மூத்த தலைவர் அஹமது படேல் கொரோனா பாதிப்பால் மரணம்!

லக்னோ (25 நவ 2020):  காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான அகமது படேல் கொரோனா பாதிப்பால் காலமானார் இன்று அதிகாலை 3.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 71. அவரது மகன் பைசல் படேல் ட்விட்டரில் அறிவித்துள்ளார். மாநிலங்களவை எம்.பி.யுமானஅவர் மரணித்ததை உறுதிப்படுத்தியுள்ளார். @ahmedpatel pic.twitter.com/7bboZbQ2A6 — Faisal Ahmed Patel (@mfaisalpatel) November 24, 2020

மேலும்...
Kapil Sibal

காங்கிரஸ் மீது கபில் சிபல் நேரடி பாய்ச்சல்!

புதுடெல்லி (16 நவ 2020): பாஜகவை சமாளிக்க காங்கிரசுக்கு தெரியவில்லை என்பதாக கபில் சிபல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாழிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் தெரிவிக்கையில், தொடர்ச்சியான தோல்விகள் மேலும் தோல்விக்கே வழிவகுக்கும், பாஜகவுக்கு எதிராக காங்கிரஸால் ஒரு வலுவான மாற்றத்தை செய்ய இயலவில்லை, என்பதாக கபில் சிபல் தெரிவித்துள்ளார். பீகார் தோல்வியை சுட்டிக் காட்டி பேசியுள்ள கபில் சிபல், பீகாரில் மட்டுமல்ல, நாட்டில் எங்கும் காங்கிரஸால் பாஜகவை வெல்ல முடியும் என்று தெரியவில்லை . கட்சி…

மேலும்...

காங்கிரஸுக்காக பிரச்சாரம் செய்த பாஜக பிரமுகர் ஜோதிராதித்யா சிந்தியா

போபால் (01 நவ 2020): பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க சென்ற பாஜகவை சேர்ந்த ஜோதிராதித்யா சிந்தியா வாய் தவறி காங்கிரசுக்கு வாக்கு சேகரித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 3 ம் தேதி மத்திய பிரதேசத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு பிரச்சாரம் மேற்கொண்ட சமீபத்தில் காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்யா சிந்தியா, பாஜகவுக்கு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் தப்ராவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தின் போது ஜோதிராதித்யா சிந்தியா பாஜக வேட்பாளர் இம்ராதி தேவிக்கு வாக்கு சேகரித்தார்….

மேலும்...

பாஜகவில் புறக்கணிக்கப்படும் ஜோதிராதித்யா சிந்தியா!

புதுடெல்லி (23 அக் 2020): காங்கிஸிலிருந்து வெளியாகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்யா சிந்தியா பாஜவில் புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தனக்கு எந்த பதவியும் தேவையில்லை என்று ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே பாஜகவில் பதவிகள் கிடைக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் கீழ் மக்களுக்கு சேவை செய்ய முடிந்தது அதிர்ஷ்டம் என்று சிந்தியா தெரிவித்துள்ளார். “எனக்கு பாஜகவில் எந்த…

மேலும்...

நடிகை குஷ்பூ மீது மாற்றுத்திறனாளிகள் போலீசில் புகார்!

மதுரை (15 அக் 2020): நடிகை குஷ்பூ மீது மாற்றுத்திறனாளிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். நடிகை குஷ்பு, அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து அக்கட்சியில் இணைந்த பின்னர் சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் தான் 6 ஆண்டுகள் இருந்ததாகவும், தனக்கு அங்கு மரியாதை தரப்படவில்லை என்றும் கூறினார். மேலும் காங்கிரஸ் கட்சியை…

மேலும்...

குஷ்பூ விலக காரணம் ஏன்? – பிரபல இயக்குனர் மீது காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

சென்னை (13 அக் 2020): காங்கிரஸிலிருந்து குஷ்பூ விலக குஷ்பூவின் கணவரம் இயக்குனருமான சுந்தர்.சி. யே காரணம் என்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. நடிகை குஷ்பூ காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். இந்நிலையில் அவரது விலகல் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், செய்தித்தொடர்பாளருமான கோபண்ணா, “குஷ்பு கொஞ்ச காலமாகவே கட்சியின் செயல்பாடுகளில் ஆர்வம் குறைந்து காணப்பட்டார்… ஷூட்டிங்கிலும் பிசியாக இருந்தார்… நாங்க அழைக்கும்போதுகூட, வெளிநாடுகளில் ஷூட்டிங்கில் இருப்பதாகவே தகவல்கள் வந்தன.. இப்போது சுந்தர்…

மேலும்...

நான் யாருன்னு 6 வருஷம் கழித்து தெரிந்துள்ளது – குஷ்பூ காட்டம்!

சென்னை (13 அக் 2020): நான் நடிகை என்பது 6 வருஷம் கழித்துதான் காங்கிரசுக்கு தெரிந்துள்ளது என்று நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வில் சேர்ந்தபிறகு, டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய நடிகை குஷ்புவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பூக்களைத் தூவி குஷ்புவை வரவேற்ற பா.ஜ.க.வினர் ஆளுயர மாலையையும் அணிவித்தனர். விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, “சிந்திக்கக்கூடிய மூளை வளர்ச்சியில்லாத கட்சி காங்கிரஸ். ஆறு வருடம் கழித்துத்தான் நான் நடிகை என காங்கிரஸ் கட்சிக்குத்…

மேலும்...