கேரளாவில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா பாதிப்பு!

திருவனந்தபுரம் (08 மார்ச் 2020): கேரளாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் இருந்து கேரளம் திரும்பிய 3பேர் உட்பட பத்தினம் திட்டாவை சேர்ந்த 5 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் ஏற்கெனவே 3 பேருக்கு கரோனா உள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. இத்துடன் சேர்த்து நாட்டில் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை தற்போது 39-ஆக உள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா…

மேலும்...

ஓமனிலிருந்து தமிழகத்தில் நுழைந்த கொரோனா வைரஸ்!

சென்னை (07 மார்ச் 2020): ஓமன் நாட்டிலிருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து துவங்கிய கொரோனா வைரஸ் தாக்கம், பல்வேறு நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை பொருத்த அளவில் இந்த பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது நேற்றைய நிலவரப்படி 31 பேர் இந்த பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தைப் பொருத்தவரை யாரும் அச்சப்பட தேவையில்லை என்று அரசு கூறியிருந்தது. எனினும் எச்சரிக்கையாகவே அரசு உள்ளது. இந்நிலையில் ஓமன் நாட்டில்…

மேலும்...

அதெல்லாம் நாங்க பார்த்துக் கொள்கிறோம் – கங்குலி திட்டவட்டம்!

கொல்கத்தா (07 மார்ச் 2020): கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு பாதிப்பு இல்லை. திட்டமிட்டபடி நடைபெறும் என்று சவுரவ் கங்குலி கூறியுள்ளார். இந்தியாவில் பிரபலமான 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 29-ந்தேதி தொடங்கி மே 24-ந்தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் இந்திய வீரர்கள் மட்டுமின்றி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொள்கிறார்கள். பெரும்பாலான அணிகளுக்கு அயல்நாட்டு பயிற்சியாளர்களே உள்ளனர்….

மேலும்...

யாரும் நம்பாதீங்க – பிரதமர் மோடி அறிவிப்பு!

புதுடெல்லி (07 மார்ச் 2020): கொரோனா வைரஸ் குறித்த வதந்திகள் எதனையும் நம்ப வேண்டாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி ‘ஜன் ஆஷாதி யோஜனா’ பயனாளிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் சனிக்கிழமை பேசினார். அப்போது அவர், ‘கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயவுசெய்து உங்கள் மருத்துவரை அணுகவும். கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படாமல்…

மேலும்...

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை!

புதுடெல்லி (06 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 30 என்ற கணக்கில் இருந்த நிலையில் டெல்லியில் மேலும் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் நோய்த் தொற்று, தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவைத் தவிர்த்து தென் கொரியா, இத்தாலி மற்றும்…

மேலும்...

இந்தியா பேராபத்தில் உள்ளது – மன்மோகன் சிங் பரபரப்பு கட்டுரை!

புதுடெல்லி (06 மார்ச் 2020): இந்தியாவில் நடக்கும் இனப்படுகொலைகள், பொருளாதார மந்தநிலை, மற்றும் உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் உள்ளிட்டவைகளால் இந்தியா பேராபத்தில் உள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இந்து பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதாவது: “சமூக ஒற்றுமையின்மை, பொருளாதார மந்தநிலை மற்றும் உலக அளவில் வேகமாக பரவி வரும் தொற்றுநோய் (கொரோனா வைரஸ்) ஆகிய மூன்று பிரச்சனைகளால் இந்தியா உடனடியாக மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளது என்று மன்மோகன் சிங் தி…

மேலும்...

ஈரானில் 3500 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு – 107 பேர் பலி!

தெஹ்ரான் (06 மார்ச் 2020): ஈரனில் கொரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை 107 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஹுபேய் மாகாண தலைநகர் வுகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கு அதிக பாதிப்பு ஏற்பட்டதுடன் தொடர்ந்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் வளைகுடா நாடான…

மேலும்...

கொரோனா அறிகுறிகள் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண் – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை (05 மார்ச் 2020): கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. 044-29510400 044-29510500 94443 40496 87544 48477 மேற்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம் அரசு மருத்துவ குழு உங்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என்று பரிசோதித்து நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டுமா? என்று தீர்மானிப்பார்கள்.

மேலும்...

எனக்கு கொரோனா இருப்பதையே செய்தி சேனலை பார்த்துதான் தெரிந்து கொண்டேன்: கேரள மாணவி பகீர் பேட்டி!

திருச்சூர் (05 மார்ச் 2020): எனக்கு கொரோனா வைரஸ் இருப்பதையே செய்தி சேனலை வைத்துதான் அறிந்து கொண்டேன் என்று கேரள மாணவி தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு கேரளாவில் திருச்சூரை சேர்ந்த மாணவிக்கு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இவர் கொரோனா வைரஸ் உருவான வுஹன் நகரத்தில் உள்ள வுஹன் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அங்கிருந்து கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி கேரளா திரும்பியவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது….

மேலும்...

கொரோனா வைரஸ் எதிரொலி – மக்கா செல்ல உள்நாட்டு யாத்ரீகர்களுக்கும் தற்காலிக தடை!

ஜித்தா (04 மார்ச் 2020): கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வரும் நிலையில் முஸ்லிம்களின் புனித இடமான மக்காவிற்கு உள்நாட்டு யாத்ரீகர்கள் செல்லவும் தற்காலிக தடை விதிக்கப்படுள்ளது. கோவிட் – 19 (COVID-19) எனப்படும் கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவிலிருந்து பரவிய இந்த வைரஸ் உலகமெங்கும் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலக சுகாதார மையம் செய்வதறியாது தவிக்கிறது. இந்நிலையில் முஸ்லிம்களின் புனித இடங்களான மக்கா மதீனாவுக்கு உம்ரா யாத்திரை செல்லும்…

மேலும்...