இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் – அதிர வைக்கும் தகவல்!

புதுடெல்லி (04 மார்ச் 2020): இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை இத்தாலியைச் சேர்ந்த 16 பேர் உட்பட 28 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். தில்லி மற்றும் தெலங்கானாவில் தலா ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், புதன்கிழமையான இன்று இத்தாலியைச் சேர்ந்த 16 பேர் உட்பட…

மேலும்...

அமெரிக்காவில் அமேஸான் ஊழியருக்கு கரோனோ வைரஸ் – சியாட்டிலில் 9 பேர் பலி!

அமெரிக்காவில் சியாட்டில் நகரில் உள்ள அமேஸான் நிறுவன ஊழியரை கரோனோ வைரஸ் தாக்கியுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் தன் ஊழியர்களுக்குத் தகவல் அனுப்பியுள்ளது. பிப்ரவரி 25ஆம் தேதி, உடல்நலம் சரியில்லை என்று அந்த ஊழியர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். அதன் பிறகு அவர் வேலைக்கு வரவில்லை. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரை COVID-19 கரோனோ வைரஸ் தாக்கியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர். இத்தகவல் மார்ச் 3ந் தேதி எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது என்று அத்தகவல் கூறுகிறது. தடுப்புக்காப்பில் உள்ள அந்த ஊழியருக்குத் தேவையான…

மேலும்...

இந்தியாவை தொடர்ந்து டார்கெட் செய்யும் கொரோனா – 15 பேருக்கு பாஸிட்டிவ்!

புதுடெல்லி (04 மார்ச் 2020): இத்தாலியிலிருந்து இந்தியா வந்த 15 சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா வைரஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் வுகான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவிய இந்த நோய் 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. தற்போது ஈரானிலும் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது. சீனாவில் பலி எண்ணிக்கை 3000-க்கும் மேலாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் டெல்லி மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த தலா ஒருவருக்கு கொரோனா இருப்பதை மத்திய அரசு உறுதி செய்தது….

மேலும்...

கோமாளி விளையாட்டு விளையாட வேண்டாம் – மோடியை சாடிய ராகுல் காந்தி!

பதுடெல்லி (04 மார்ச் 2020): கோமாளி போல் விளையாடி இந்தியர்களின் நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று ராகுல் காந்தி மோடிக்கு ட்வீட் செய்துள்ளார். ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதை பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிற்கு டேக் செய்து அவர் பதிவிட்டுள்ளதாவது: “உங்களது சமூக ஊடகக் கணக்குகளை வைத்துக் கொண்டு கோமாளி போல் விளையாடி இந்தியாவின் நேரத்தை வீணாக்க வேண்டாம். இந்தியா நெருக்கடியான ஒரு சூழலை…

மேலும்...

அமெரிக்காவில் கொரோனா வைரஸுக்கு 6 பேர் பலி!

வாஷிங்டன் (03 மார்ச் 2020): அமெரிக்காவின் வாஷிங்டனில் கொரோனா வைரஸுக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் நான்கு பேர் உயிரிழந்ததாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கொரோனாவால் மேலும் பலர் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், எந்த விதமான சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறி…

மேலும்...

துபாயிலிருந்து இந்தியா வந்தவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

புதுடெல்லி (02 மார்ச் 2020): டெல்லி மற்றும் தெலங்கானாவில் இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து உலகமெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவில் ஏற்கனவே, கேரளாவில் இரண்டு பேர் சிகிச்சை பெற்று பூரண குணம் அடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது டெல்லி மற்றும் தெலங்கானாவுக்கு தலா ஒருவர் கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கரோனா பாதித்த இருவரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இருவரும் தீவிர மருத்துவக்…

மேலும்...

கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் ஒருவர் பலி!

வாஷிங்டன் (01 மார்ச் 2020): அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் ஹூபெய் மாகாணத்தின் வூஹான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவ துவங்கியது. இந்த வைரஸ், அண்டார்டிகா தவிர மற்ற அனைத்து கண்டங்களுக்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில், நேற்று வரை 2,835 பேர் உயிரிழந்துள்ளனர். 79,251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா மட்டுமல்லாமல் பல நாடுகளில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. ஈரானையும் இந்த வைரஸ் அதிக…

மேலும்...

அமெரிக்காவில் சியாட்டில் நகரில் மாணவருக்கு கொரோனா வைரஸ்!

சியாட்டில் (29 பிப் 2020):சியாட்டிலில் உள்ள எவரெட் நகரப் பகுதியில் உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவரை கொரோனா COVID-19 வைரஸ் தாக்கியுள்ளதாக அம்மாவட்டச் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மேலும், அத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்கள் மாணவர்களின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இதை நாங்கள் மிகவும் தீவிரமாகக் கையாண்டு வருகிறோம். பள்ளிக்கூடத்தில் அவர் தொடர்பு கொண்ட மாணவர்களுக்கும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சுகாதாரத் துறையின் கண்காணிப்புடன் 14 நாள்கள் வீட்டிலேயே இருப்பார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…

மேலும்...

கத்தார் நாட்டில் ஒருவருக்கு கொரோனா வைராஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிப்பு!

தோஹா (29 பிப் 2020): கத்தார் நாட்டில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கத்தார் நாடு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள செய்தியில், ஈரானிலிருந்து வந்த 36 வயது கத்தார் நாட்டை சேர்ந்தவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. ஈரானில் கொரோனா பாதிப்பால் இதுவரை 43 பேர் கொரோனஆ நோயால் பலியாகியுள்ளனர். மேலும் 600 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

அமெரிக்காவையும் தாக்கியது கொரோனா வைரஸ்!

நியூயார்க் (29 பிப் 2020): கொரோனா வைரஸ் நோயால் அமெரிக்காவில் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் மட்டும் கொவைட்-19 வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,835 ஆக சனிக்கிழமை உயா்ந்துள்ளது. இதுவரை சீனா முழுவதும் கொவைட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 79,251-க்கும் அதிகமாக உயா்ந்துள்ளது. ஈரானிலும் கொவைட்-19 வைரஸ் காரணமாக 245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 26 பேர் உயிரிழந்தனர். இதனால் ஐரோப்பிய நாடுகளில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஈரானில் இருந்து சென்றவர்களால் பரவிய…

மேலும்...