கோவேக்சின் தடுப்பூசி போட்டவர்கள் சவூதி தவக்கல்னாவில் பதிவு செய்யும் வசதி!

கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்கள் சவூதி தவக்கல்னாவில் பதிவு செய்யும் வசதி! ரியாத் (15 டிச 2021): இந்தியாவில் இருந்து கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் சவூதி சுகாதார அமைச்சகத்தின் தவக்கல்னா அப்ளிகேசனில் பதிவு செய்யலாம். இதன் மூலம் கோவாக்சின் பெற்றவர்களுக்கு தவக்கல்னா ஆப்பில் நோய் எதிர்ப்பு நிலை காட்டப்படும். சுற்றுலா (விசிட்டிங்) விசா வைத்திருப்பவர்களும் தடுப்பூசி சான்றிதழ்களுக்காக பதிவு செய்யலாம். ஏற்கனவே சவூதி அரேபியாவில் ஃபைசர், மொடெனா, ஜான்சன் & ஜான்சன் மற்றும் அஸ்ட்ரா செனிகா அல்லது…

மேலும்...

கோவேக்சின் 77.8 சதவீதம் செயல்திறன் கொண்டது – 3 ஆம் கட்ட பரிசோதனை வெளியீடு!

புதுடெல்லி (03 ஜூலை 2021): கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்படுகிறது என்றும் டெல்டா வைரஸுக்கு எதிராக 65.2% செயல்திறன் கொண்டது என்றும் 3 ஆம் கட்ட பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம், கோவேக்சின் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் கோவேக்சின் தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ளது….

மேலும்...

சிறந்த கொரோனா தடுப்பூசி எது? – ஆய்வு தகவல்!

புதுடெல்லி (07 ஜூன் 2021): இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள கோவிஷீல்ட் தடுப்பூசியில் கோவாக்சினை விட கூடுதலான நோய் எதிர்ப்புத் தன்மை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முன்களப் பணியாளர்கள் உள்பட பலகோடி பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இரண்டு டோஸ்கள் போட்ட பிறகு கோவிஷீல்ட், கோவாக்சின் இரண்டுமே சிறந்த பலன்களைக் கொடுப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு தடுப்பூசிகளுக்கும் ஒரு நல்ல பாதுகாப்பு அளிப்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. பெரிய அளவில், தடுப்பூசிகள் செயல்படுகின்றன என்பதை ஆய்வு காட்டுகிறது. தடுப்பூசிகளின்…

மேலும்...

கோவேக்சின் தடுப்பூசி குறித்து மேலும் விவரங்கள் கேட்கும் உலக சுகாதார நிறுவனம் !

புதுடெல்லி (25 மே 2021): பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி  உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால பயன்பாடு பட்டியலில் இடம்பெறாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது மேலும் கோவேக்சின் குறித்து உலக சுகாதார நிறுவனம் மேலும் விவரங்கள் கேட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதி கிடைக்காத்ததால் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களை மட்டுமே தங்களது நாட்டுக்குள் அனுமதிப்பது என்ற விதிமுறையை உலகின் பல்வேறு நாடுகள் கடைப்பிடித்து வருகின்றன. சர்வதேச…

மேலும்...

அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்!

சென்னை (22 ஜன 2021): பிற நாடுகளைப் போல பிரதமர்,முதல்வர், அமைச்சர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு மக்களுக்கு நம்பிக்கையளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இன்று சென்னை அரசு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா தடுப்பூசி மையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். ”சுகாதார பணியாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கில் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அமைச்சர் தெரிவித்தார். இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ மற்றும்…

மேலும்...

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி குறித்து சுகாதார ஊழியர்கள் கவலை!

பெங்களூரு (20 ஜன 2021): இந்தியாவில் வழங்கப்படும் சோதனையின் கட்டம் முடிவடையாத கோவேக்சின் தடுப்பூசி குறித்து கர்நாடக அரசு மருத்துவர்கள் சங்கம் (கேஜிஎம்ஏ) கவலை தெரிவித்துள்ளது. இது குறித்து கே ஜி எம் ஏ, சுகாதார அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், “தற்போது விநியோகிக்கப்படும் இரண்டு வகை தடுப்பூசிகளில் எது பாதுகாப்பானது என்பது குறித்து சுகாதார ஊழியர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.” தெரிவித்துள்ளனர். மேலும், சோதனையின் கட்டத்தில் உள்ள தடுப்பூசி விநியோகம் சுகாதார ஊழியர்களிடையே சந்தேகத்தை எழுப்புவதாகவும், தற்போதைய தடுப்பூசி…

மேலும்...

கொரோனா தடுப்பூசி யாரெல்லாம் எடுத்துக்கொள்ளக் கூடாது? -பாரத் பயோடெக் விளக்கம்!

புதுடெல்லி (19 ஜன 2021): பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை யார் பயன்படுத்தலாம், யார் பயன்படுத்தக்கூடாது என்பதற்கான வழிகாட்டுதல்கள் பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வாமை உள்ளவர்கள் மருத்துவரை அணுகிய பின்னரே தடுப்பூசி போட வேண்டும்.  கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் இந்தத் தடுப்பூசியை பயன்படுத்தக்கூடாது. மற்றொரு கோவிட் தடுப்பூசி பெற்றவர்கள் கோவாசின் எடுத்துக் கொள்ளக்கூடாது. தடுப்பூசி நாடு முழுவதும் விநியோகிக்கத் தொடங்கியதிலிருந்து தடுப்பூசி பெற்றவர்களில் சிலர், சில பக்கவிளைவுகளைச் சந்தித்ததாக வெளியான தகவல்களுக்கு…

மேலும்...

கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்பட்டால் இழப்பீடு – பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு!

ஐதராபாத் (16 ஜன 2021): கோவிட் -19 தடுப்பூசியான கோவாக்சின் மருந்து எடுத்துக் கொள்பவர்களுக்குப் பக்க விளைவுகள் ஏற்பட்டால் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த அந்நிறுவன படிவத்தில் கூறப்பட்டிருப்பதாவது : தடுப்பூசி பெறுநர்களுக்கு ஏதேனும் பாதகமான பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தரமான பராமரிப்பு மற்றும் சிகிச்சை வழங்கப்படும். மேலும், பக்கவிளைவுகள் தடுப்பூசிக்குத் தொடர்புடையது என நிரூபிக்கப்பட்டால், இழப்பீடும்…

மேலும்...

கோவேக்சின் கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி!

புதுடெல்லி (03 ஜன 2021): கோவிஷீல்ட், கோவேக்சின் தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தோன்றி ஓராண்டுக்குள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கி உள்ளன. அந்த வகையில், இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கி உள்ள தடுப்பூசி, இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் அறிமுகமாகிறது. அதேபோல், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து தயாரித்த…

மேலும்...