அச்சுறுத்தும் கொரோனா – பிரதமர் மனைவிக்கு கொரோனா பாதிப்பு!

ஸ்பெயின் (15 மார்ச் 2020): ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்ஸின் மனைவி பெகோனா கோம்ஸ்க்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை பெற்று வரும் கோம்ஸ் உடல் நலன் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகவலை ஸ்பெயின் பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக ஸ்பெயின் அமைச்சருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதாக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

பள்ளிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் மூடல் – முதல்வர் எடப்பாடி உத்தரவு!

சென்னை (15 மார்ச் 2020): கொரோனா பரவல் எதிரொலியாக, பாதுகாப்பு நடவடிக்கையை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள மழலையர் பள்ளி, தொடக்கப்பள்ளி மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு வருகிற மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கொரோனா பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக, தமிழகத்தில் உள்ள மழலையர் பள்ளிகள் மற்றும் (எல்.கே.ஜி, யு.கே.ஜி) தொடக்கப்பள்ளிகளுக்கு (1 ஆம் வகுப்பு முதல் முதல் 5 ஆம்…

மேலும்...

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 105 ஆக உயர்வு!

புதுடெல்லி (15 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல மாநில அரசுகள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன. இது இப்படியிருக்க இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் சீனாவை அடுத்து ஐரோப்பிய நாடுகள்…

மேலும்...

கொரோனா பரவல் – ஈரானிலிருந்து 234 இந்தியர்கள் நாடு திரும்பினர்!

புதுடெல்லி (15 மார்ச் 2020): கொரோனா பாதித்த ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த 234 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானத்தில் திரும்ப அழைத்து வரப்பட்டனர். உலகளவில் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல மாநில அரசுகள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன. இது இப்படியிருக்க ஈரானில் அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஈரான் நாட்டில்…

மேலும்...

கொரோனா வைரஸ் – பேரிடராக கருதி நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவு!

புதுடெல்லி (14 மார்ச் 2020): கொரோனாவை பேரிடராகக் கருதி மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து இன்று (சனிக்கிழமை) மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கொரோனா வைரஸ் (கொவைட்-19) பாதிப்பை ஒவ்வொரு மாநிலமும் பேரிடராகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில பேரிடர் நிதியில் (எஸ்.டி.ஆர்.எஃப்) இருந்து கொரோனா பாதிப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி…

மேலும்...

கொரோனாவை வைத்து வியாபாரம் – பள்ளி சிறுவன் சஸ்பெண்டு!

லண்டன் (14 மார்ச் 2020): இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவலை வைத்து வியாபாரம் செய்த பள்ளிச் சிறுவனை பள்ளி நிர்வாகம் இடைநீக்கம்  செய்துள்ளது. இங்கிலாந்தின் லீட்ஸ் நகரைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஆலிவர் கூப்பர். அந்த நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். தினமும் காலையில் பள்ளிக்குக் கிளம்பும் முன் ரேடியோ கேட்பதை வழக்கமாக கொண்டிருக்கும் இந்த மாணவன், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு செய்தியை ரேடியாவில் கேட்டுள்ளான். உடனே, மெடிக்கல்…

மேலும்...

கொரோனா வராமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

கொரோனா வைரஸ், சீனாவில் உள்ள வுஹான் என்ற இடத்தில் உருவானதாக கூறப்படுகிறது. இந்த வைரஸால் உலகளவில் உள்ள லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் சனிக்கிழமை (14 மார்ச் 2020) வரை 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 2 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ்கள் ஒரு பெரிய வைரஸ் குடும்பமாகும், இது பொதுவான சளி முதல் கடுமையான நோய்கள் வரை சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தக்கூடும். COVID-19 என்பது ஒரு தொற்று நோய், எளிதாக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவக் கூடும். கொரோனா…

மேலும்...

கொரோனா வைரஸ் – இத்தாலியில் ஒரே நாளில் 250 பேர் மரணம்!

ரோம் (14 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் இத்தாலியில் 24 மணி நேரத்தில் 250 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் சீனாவை அடுத்து இத்தாலியை அதிகம் தாக்கியுள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் இத்தாலியில் 250 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1266 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை கணக்குப்படி கொரோனாவால் இத்தாலியில் 17660 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்...

அமெரிக்காவில் அவசர நிலை அறிவிப்பு!

நியூயார்க் (14 மார்ச் 2020): அமெரிக்காவில் கொரோனா அதிக அளவில் பரவி வருவதை அடுத்து அவரசர நிலையை அதிபர் டிரம்ப் அறிவித்தார். உலக நாடுகளில் பரவி வரும் கொரோனாவால் அமெரிக்காவில் மட்டும் 40 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பை அவரசர நிலையாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கைக்காக 50 பில்லியன் டாலர்களை டிரம்ப் ஒதுக்கி உள்ளார். அனைத்து மாகாணங்களிலும் கொரோனா அவசர சிகிச்சை மையங்களை நிறுவ டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

மேலும்...

கொரோனா வைரஸுக்கு இந்தியாவில் இரண்டாவது மரணம்!

புதுடெல்லி (13 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் மேலும் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். ஏற்கெனவே, கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு முதியவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்காகத் டெல்லியில் சிகிச்சை பெற்றுவந்த 69 வயதான ஒரு பெண்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது இரண்டாக உயர்ந்துள்ளது. சீனாவில் மட்டுமே பரவி வந்த கரோனா வைரஸ், தற்போது நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் தீவிரமாகப் பரவி…

மேலும்...