ஒரே நாளில் உச்சத்தை தொட்ட டாஸ்மாக் விற்பனை!

சென்னை (09 ஜன 2022): நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் 217.96 கோடி மது விற்பனையாகியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் தமிழகம் முழுவதும் அமலில் உள்ள காரணத்தினால் மதுக்கடைகள் இன்று திறக்கப்பட மாட்டாது. இதன் காரணமாக நேற்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது குடிப்போர் அதிக அளவில் மது வாங்க குவிந்துள்ளனர். அதிகப்படியாக சென்னை மண்டலத்தில் மட்டும் 50.04 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது, மதுரை மண்டலத்தில் 43.20 கோடி ரூபாயும்,…

மேலும்...

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,59,632 பேருக்கு கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (09 ஜன 2022): மத்திய சுகாதார அமைச்சகம் பகிர்ந்துள்ள தரவுகளின்படி, இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை 1,59,632 புதிய கோவிட்-19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது நேற்றையதை விட 12.4 சதவீதம் அதிகம். இதில், 3,623 வழக்குகள் ஓமிக்ரான் வகையைச் சேர்ந்தவை. இது நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா வழக்குகளை 3,55,28,004 ஆகக் கொண்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 40,863 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தமாக நாடு முழுவதும் 3,44,53,603 பேர் கொரோனவிலிருந்து மீண்டுள்ளனர். இந்தியாவின்…

மேலும்...

உத்தரகாண்டில் அரசியல் கூட்டங்களுக்கு தடை!

உத்தரகாண்ட் (08 ஜன 2022): உத்தரகாண்டில் அரசியல் பேரணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் அதிகரித்து வரும் கோவிட் வழக்குகளை அடுத்து, பேரணிகள் மற்றும் பிற தர்ணாக்களுக்கு இம்மாதம் 16 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வரும். அரசியல் பேரணிகள் மட்டுமின்றி மற்ற கலாச்சார நிகழ்வுகளும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் அங்கன்வாடிகள், பள்ளிகள், நீச்சல் குளங்கள் மற்றும் நீர் பூங்காக்கள் மூடப்படும். 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்…

மேலும்...

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 1.41 லட்சம் புதிய கொரோனா வழக்குகள் பதிவு!

புதுடெல்லி (08 ஜன 2022): இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,41,986 புதிய கோவிட்-19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது நேற்றையதை விட 21.3 சதவீதம் அதிகம். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,41,986 புதிய கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளன, இது நேற்றையதை விட 21.3 சதவீதம் அதிகம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் பகிர்ந்துள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் நாட்டில் மொத்த கொரோனா வழக்குகள் 3,53,68,372 ஆக உள்ளது. 40,925 வழக்குகளுடன்…

மேலும்...

சவூதி அரேபியாவில் மீண்டும் பரவும் கொரோனா – புதிய வழிமுறைகள் இன்று முதல் அமல்!

ரியாத் (30 டிச 2021): சவுதி அரேபியாவில் எல்லா இடங்களிலும் முகக்கவசம் அணிவது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் அனுமதி 50% இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். கடைகள் மற்றும் வணிக வளாகங்களிலும் ஒன்றரை மீட்டர் இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகள் (டிசம்பர் 30, 2021) இன்று முதல் அமலுக்கு வருகிறது. மேலும்  வணிக வளாகங்கள், பணியிடங்கள், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம். இவற்றை வாகனங்களிலும் அணிய வேண்டும். முகக்கவசம் அணியத் தவறினால் 1,000 ரியால் வரை…

மேலும்...

நடிகர் விக்ரமுக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (16 டிச 2021): நடிகர் விக்ரமுக்குஜ் கொரொனா வைரஸ் பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனையடுத்து, அவரது ரசிகர்கள் ட்விட்டரில் #chiyaanVikram ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் செய்து உடல்நலம் குணமடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். தமிழகத்தில் சமீபத்தில் திராவிடர் கழகத்தலைவர் கீ.வீரமணி, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

தமிழகத்திற்குள் நுழைந்த ஒமிக்ரான் வைரஸ்!

சென்னை (15 டிச 2021): ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸால் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, “நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த மேலும் 7 பேருக்கும் புதிய வகை கொரோனா இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அவர்களின் மாதிரியும் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 41 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று…

மேலும்...

ஒமிக்ரான் வகை கொரோனா வைரசுக்கு முதல் பலி!

லண்டன் (13 டிச 2021):ஒமிக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், ஒருவர் உயிரிழந்திருக்கக்கூடும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். மேற்கு லண்டனில் பாடிங்க்டன் என்ற இடத்தில் நடந்த தடுப்பூசி முகாமொன்றில் பேசிய அவர், “வருத்தமளிக்கும் விதமாக, ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழல் உள்ளதுதான். அதேபோல வேதனை தரும்வகையில், இதுவரை ஒமிக்ரான் உறுதியானவர்களில் குறைந்தது ஒருவராவது உயிரிழந்துள்ளார். இதன் பரவும் வேகத்தை நாம் இன்னும் சரியாக கணிக்க வேண்டியுள்ளது. ஆகவே இதிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள…

மேலும்...

ஒமிக்ரான் பரவலைத் தடுக்க மும்பையில் 144 தடை உத்தரவு!

மும்பை (11 டிச 2021): மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒமிக்ரான் அச்சத்தால் மும்பையில் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மகாராஷ்டிராவில் ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்ததை அடுத்து மும்பை மாநகரில் டிசம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்று மேலும் பரவாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து ஊர்வலங்கள், பேரணிகள், சமுதாய நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

கமல்ஹாசன் விவகாரத்தில் சுகாதாரத்துறை பல்டி!

சென்னை (08 டிச 2021): கமல்ஹாசனிடம் கொரோனாவுடன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனது ஏன்? என்பது குறித்து கேள்வி கேட்கப்போவதில்லை என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீஸன் வெற்றி நடைபோட்டு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில், இந்நிகழ்ச்சியினை கமல்ஹாஸன் தொகுத்து வழங்கி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், திடீரென்று அமேரிக்கா சென்று திரும்பிய கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று பாதித்தது. அதனையடுத்து அவர் அந்நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக வெளியேறி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அவருக்கு பதிலாக…

மேலும்...