இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 414 ஆக உயர்வு!

புதுடெல்லி (16 ஏப் 2020): இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 414 ஆக உயர்ந்துள்ளது. உலக நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் தீவிரமடைந்துள்ளது. இதனை முன்னிட்டு கடந்த மார்ச் 24ந்தேதியில் இருந்து அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து கடந்த 14ந்தேதி அடுத்த 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,380 ஆக இன்று உயர்ந்து உள்ளது….

மேலும்...

ரம்ஜான் பண்டிகைக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவன்!

சென்னை (15 ஏப் 2020): ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்திற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த ரூ 5200 ஐ கொரோனா முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார் ஏழம் வகுப்பு மாணவர் சல்மான் ஃபாரிஸ். மேற்கு மாம்பலம் கஸ்தூரிபாய் நகர், கல்யாண சுந்தரம் தெருவில் வசிப்பவர், ஏழாம் வகுப்பு மாணவர் சல்மான் ஃபாரிஸ். இவர் அவரது பெற்றோர் அவ்வப்போது வழங்கும் பணத்தை உண்டியலில் சேமித்து வைத்துள்ளார். எதிர் வரும் ரம்ஜான் பண்டிகைக்காக இந்த பணத்தை அவர் சேர்த்து வைத்ததாக…

மேலும்...

முக்கியமான நேரத்தில் ட்ரம்பின் முடிவு – உலக தலைவர்கள் கவலை!

வாஷிங்டன் (15 ஏப் 2020): உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கப்படும் நிதியை நிறுத்துவது என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவுக்கு, உலக நாடுகளின் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், இன்று உலகையே கதி கலங்க வைத்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவுக்கு கொத்து கொத்தாய் மக்கள் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “கொரோனா வைரஸ் தொற்றுநோய் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சரியான நேரத்தில், வெளிப்படையான…

மேலும்...

ஏப்ரல் 20 க்குப் பிறகு ஊரடங்கில் சில தளர்வுகள்!

புதுடெல்லி (15 ஏப் 2020): கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஏப்ரல் 20-க்கு பிறகு சில கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி மே 3 வரை கீழ்காணும் நிபந்தனைகளை மத்திய அரசு விதித்துள்ளது. மேலும் ஏப்ரல் 20க்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்றும், ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு…

மேலும்...

கொரோனா பரவலால் வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க வேண்டும் – ராகுல் காந்தி!

புதுடெல்லி (15 ஏப் 2020): கொரோனா பரவலால் வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “வளைகுடா நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் தொழில்கள் முடக்கத்தால் ஆயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். நாடு திரும்ப விரும்பும் அவர்கள், விமானங்கள் ரத்தால் வர முடியவில்லை. ஆகவே, மத்திய அரசு அவர்களுக்கு விமானங்கள் ஏற்பாடு செய்துதர வேண்டும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும்...

முஸ்லிம்களிடம் எவரும் காய்கறி வாங்குவதில்லை – முஸ்லிம் வியாபாரிகள் புகார்!

லக்னோ (15 ஏப் 2020): கொரோனா பரவல் எதிரொலியாக முஸ்லிம் காய்கறி வியாபாரிகளிடம் காய்கறி வாங்கக் கூடாது என்று இந்துக்கள் அறிவித்துள்ளதாக முஸ்லிம் வியாபாரிகள் புகார் அளித்துள்ளனர். உத்திர பிரதேசம் மாநிலம் மொஹோபா பகுதியில் இரு முஸ்லிம் வியாபாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதில், “எங்கள் பகுதியில் சிலர் தப்லீக் ஜமாத் மக்கள் இருப்பதால், எங்களிடம் காய்கறி வாங்கக் கூடாது என்று அப்பகுதி இந்துக்கள் அறிவித்துள்ளதால் எங்களுக்கு காய்கறி வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது” என்று புகார் அளித்துள்ளனர்….

மேலும்...

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ 500 அபராதம் – மத்திய அரசு அதிரடி!

புதுடெல்லி (15 ஏப் 2020): பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ 500 அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக அளவில் அதி வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் எதிரொலியாக கடந்த மார்ச் 24ந்தேதி முதல் தொடர்ந்து 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ஆனால், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் குறையவில்லை. இந்நிலையில்,…

மேலும்...

கொரோனா தொற்று காரணமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்!

பெஷாவர் (15 ஏப் 2020): கொரோனா தொற்று காரணமாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாஃபர் சர்ஃபராஸ் (50) உயிரிழந்தார். கொரோனா தொற்று காரணமாக ஜாஃபர் சர்ஃபராஸ் கடந்த 3 நாட்களாக பெஷாவரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டரில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அவர் உயிரிழந்ததை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். பாகிஸ்தானில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் கிரிகெட் வீரர் சர்ஃபராஸ். இவர் 1988 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில்…

மேலும்...

மோடியை மீண்டும் சீண்டிய கமல்!

சென்னை (15 ஏப் 2020): மும்பையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல், மோடி அரசையும் விமர்சனம் செய்துள்ளார். நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தொடர்ந்து மத்திய மாநில அரசுகளை விமர்சித்து வருகிறார். அந்த வகையில் மோடி சமீபத்தில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி கூறும் விதமாக வீட்டின் முகப்பில் நின்று கைத்தட்டச் சொன்னார். பால்கனியில் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து ஒற்றுமையை நிலைநாட்டுமாறு கேட்டுக்கொண்டார். இதுகுறித்து கமல்ஹாசன் மோடி அரசை…

மேலும்...

காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு கொரோனா பாஸிட்டிவ் – பீதியில் முதல்வர் மற்றும் எம்.எல்.ஏக்கள்!

அஹமதாபாத் (15 ஏப் 2020): குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ. இம்ரான் கெதாவாலாவுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, உள்துறை அமைச்சர் மற்றும் மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் செவ்வாயன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து இவர்களை சந்தித்த ஆறு மணி நேரத்திற்குள் காங்கிரஸ் எம்.எல்.ஏ., இம்ரான் கெதாவாலாவுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து காந்தி நகர் SVP மருத்துவமனையில் இம்ரான் கொதாவாலா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்வருடன் நடைபெற்ற ஆலோசனையில்…

மேலும்...