இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தில் 2021-ம் ஆண்டு 8.70 லட்சம் பேர் மரணம்!

மதுரை (18 பிப் 2022): வரலாற்றில் இதுவரை இல்லாத அலவிற்கு தமிழகத்தில் 2021-ம் ஆண்டு 8.70 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழக மக்கள் தொகை 6 கோடியே 24 லட்சம் ஆகும். இது 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பில் 7 கோடியே 21 லட்சமாக உயர்ந்தது. 2021-ம் ஆண்டு கொரோனா காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற வில்லை. இருந்தாலும், தமிழக மக்கள் தொகை தற்போது 8 கோடியை…

மேலும்...

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் 946 பேர் மரணம் – அதிர்ச்சித் தகவல்!

புதுடெல்லி (08 டிச 2021): இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் 946 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை ராஜாங்க அமைச்சர் பாரதி பிரவின் பவார் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கிய கொரோனா வைரசின் கொடும் பயணத்தில் பல லட்சம் உயிர்கள் பறிபோயிருக்கின்றன. நேற்று முன்தினம் நிலவரப்படி நம் நாட்டில் 4,73,537 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர். நேற்று காலை வரை, 128.76 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை ராஜாங்க அமைச்சர் பாரதி…

மேலும்...

நீதிபதி மரணத்தில் மர்மம் – சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை!

ஜார்கண்ட் (29 ஜூலை 2021): ஜார்கண்ட் நீதிபதி டெம்போ வேன் மோதி கொல்லப்பட்டது தொடர்பாக பார்கவுன்சில் சிபிஐ விசாரணை கோரியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் புதன்கிழமை காலை நடைபயிற்சி செய்தபோது அவர் மீது வேகமாக வந்த டெம்போ வேன் மோதியது. இதில் படுகாயம் அடைந்த நீதிபதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான , சி.சி.டி.வி காட்சிகள் குறித்த விசாரணையில் இந்த சம்பவம் விபத்து அல்ல, வேண்டுமென்றே நடந்திருக்கலாம், என்பதைக் குறிக்கிறது….

மேலும்...

கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட முதல் மரணம் – உறுதி செய்தது அரசு!

புதுடெல்லி (15 ஜூன் 2021): இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை எடுத்த ஒருவர் உயிரிழந்ததை அரசு உறுதி செய்துள்ளது. இதனை தடுப்பூசி பக்க விளைவுகளைப் பற்றி ஆய்வு செய்த குழு உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 8 ஆம் தேதி  கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்த 68 வயதான ஒருவர் அனாபிலாக்ஸிஸ் காரணமாக இறந்தார் என்று இதுகுறித்த அறிக்கை காட்டுகிறது. “நாங்கள் கண்ட முதல் மரணம் இதுதான், விசாரணையின் பின்னர் இறந்ததற்கான காரணம் தடுப்பூசிக்குப் பிறகு அனாபிலாக்ஸிஸ்…

மேலும்...

இந்துவை திருமணம் செய்ய மறுத்த முஸ்லீம் இளம் பெண் உயிரோடு எரித்துக் கொலை – பீகாரில் கொடூரம்!

பாட்னா (18 நவ 2020): பீகாரில் குல்நாஸ் காத்தூன் என்ற முஸ்லீம் இளம் பெண் இந்து இளைஞரால் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம் பெண்ணை சதிஷ் குமார் ராய் என்பவர் ஒருதலையாய் காதலித்து வந்துள்ளார். மேலும் அந்த பெண்ணை செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். மேலும் அந்த பெண்ணுக்கு வேறொரு ஆனால் அந்த பெண் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். மேலும் அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்தது….

மேலும்...

அமைச்சர் துரைக்கண்ணு மறைவு அதிர்ச்சி அளிக்கிறது – ஸ்டாலின்!

சென்னை (01 நவ 2020): தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு நேற்றிரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு பல்வேறு கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேளாண்துறை அமைச்சர் திரு.துரைக்கண்ணு மறைவெய்திய செய்தி கேட்டுத் துயருற்றேன். ஆழ்ந்த இரங்கல்! மூன்றுமுறை பாபநாசம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்று 2016-ல் வேளாண்துறை அமைச்சராக…

மேலும்...

காட்டுப் பன்றிகளுக்காக வைக்கப்பட்ட வெடிமருந்தால் யானை கொல்லப்பட்டதா? – வனத்துறையினர் விசாரணை!

திருவனந்தபுரம் (04 ஜூன் 2020): கேரளாவில் காடுப்பன்றிகளுக்காக வைக்கப்பட்ட வெடிமருதால் கர்ப்பிணி யானை கொல்லப்பட்டதா? என்று கேரள வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவில் அன்னாசி பழத்தில் பட்டாசுகளை நிரப்பி அதை யானையை உண்ணவைத்து கொன்ற விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது கேரள வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையில் குறிப்பிடத்தக்க முக்கிய விபரங்கள் ஏதும் புலப்படவில்லை. ஏனெனில், யானைக்கு காயம்பட்டு 2 வாரங்களுக்கு பின்னரே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யானையை தான்…

மேலும்...

தொடரும் அதிர்ச்சி – ரெயில் கழிப்பறையில் புலம்பெயர்ந்த தொழிலாளியின் இறந்த உடல் கண்டெடுப்பு!

ஜஹான்சி (29 மே 2020): உத்திர பிரதேசத்தில் இரயில் கழிப்பறையில் புலம்பெயர்ந்த தொழிலாளரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட திடீர் ஊரடங்கு, புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பெரிய அளவில் பாதித்தது. நடந்தே பலர் அவரவர்களின் ஊர்களுக்கு சென்றதால் உணவு இல்லாமை, களைப்பு காரணமாக பலர் வழியிலேயே உயிரிழந்தனர். இது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர்களின் ஊருக்கு செல்ல சிறப்பு ரெயில்கள் விடப்பட்டன. மும்பையிலிருந்து உத்திர பிரதேசத்திற்கு ரெயிலில்…

மேலும்...

பிரபல நடிகை சாலை விபத்தில் மரணம்!

பெங்களூரு (27 மே 2020): பிரபல ரியாலிட்டி ஷோவின் மாடலும் சின்னத்திரை நடிகை மெபினா மைக்கேல் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். மெபினா மைக்கேல் செவ்வாய்க்கிழமை மாலை மாண்டியா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 75ல் நாகமங்கள தாலுகாவில் உள்ள தேவிஹள்ளி அருகே ஒரு டிராக்டர் மோதியதில் அவர் பயணித்த கார் விபத்துக்குள்ளானது. . மெபினா, தனது இரண்டு நண்பர்களுடன் பெங்களூருவில் இருந்து கோடகு மாவட்டத்தில் உள்ள சோம்வார்பேட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது இவ்விபத்து நிகழ்ந்தது. அந்த காரில் மெபினாவுடன் நான்கு…

மேலும்...

இலங்கை தமிழர்களுக்கு பேரிழப்பு – ஆறுமுகன் தொண்டமான் மரணம்!

கொழும்பு (26 மே 2020): இலங்கையின் தமிழ் அரசியல்வாதிகளில் மிக முக்கியமானவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் (55) இன்று காலமானார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆறுமுகன் தொண்டமான். 1990ல் இருந்து இவர் அந்த கட்சியில் இருக்கிறார். அந்நாட்டு தொழிற்சங்கத் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் மற்றும் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக முன்னேற்ற அமைச்சராகவும் அவர் இருந்தார். இந்நிலையில் வீட்டில் மயங்கி விழுந்த ஆறுமுகன் தொண்டமானை மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள். ஆனால்…

மேலும்...