கொரோனா வைரஸ்: 6000 பேர் பாதிப்பு – 132 பேர் பலி!

பீஜிங் (29 ஜன 2020): சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 132 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த சில வாரங்களாகவே பதற்றம் நிலவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் 132 பேர் இதுவரை இறந்துள்ளதாகவும் சுமார் 6000 பேர் வரை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் உள்ள மக்களிடையே இந்த வைரஸ் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. இந்த வைரஸைத் தடுப்பது…

மேலும்...

கொரோனா வைரஸுக்கான காரணம் – வெளியாகும் பரபரப்பு பின்னணி!

பீஜிங் (27 ஜன 2020): சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகையே அச்சுறுத்தலில் ஆழ்த்தி வரும், இதன் பின்னணி குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் சீனா மட்டுமல்லாமல் அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் எவ்வாறு பரவியது என பல்வேறு ஊகங்கள் வெளியாகிவரும் நிலையில், பயோ-வெப்பன் ஆய்வுக் கூடம் மூலமாக பரவியிருக்கும் என இஸ்ரேல் உயிரியல் விஞ்ஞானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

மேலும்...

கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு!

பீஜிங் (25 ஜன 2020): சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பீஜிங், ஷாங்காய் போன்ற சீன நகரங்களில் மட்டுமின்றி அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருகிறது. தொடர்ந்து, முதன்முதலில் கொரோனா கண்டறியப்பட்ட மத்திய நகரமான வுஹானில் வைரஸ் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள 1,072 பேரையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக சீன தேசிய…

மேலும்...

கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை உயர்வு!

பீஜிங் (24 ஜன 2020): சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பீஜிங், ஷாங்காய் போன்ற சீன நகரங்களில் மட்டுமின்றி அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருகிறது. தொடர்ந்து, முதன்முதலில் கொரோனா கண்டறியப்பட்ட மத்திய நகரமான வுஹானில் வைரஸ் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள 1,072 பேரையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும்,…

மேலும்...

சுற்றுலா சென்ற இந்தியர்களுக்கு நிகழ்ந்த சோகம்!

நேபாள் (22 ஜன 2020): நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 8 இந்தியர்கள் சொகுசுபங்களாவில் ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். நேபாளத்தில் உள்ள பிரபல சுற்றுலாத்தளமான போகாராவிற்கு, கேரளாவைச் சேர்ந்த 15 சுற்றுலாப்பயணிகள் சென்றிருந்தனர். அவர்கள் காத்மாண்டுவில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தனர். அந்த அறைகளில் எரிவாயுவில் இயங்கும் ஹீட்டர்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. அதிலிருந்து எரிவாயு கசிந்ததில் அங்கு தங்கியிருந்த 8 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அறையில் போதிய காற்றோட்டம் இல்லாததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு…

மேலும்...

நடிகை அமலாபால் தந்தை மரணம்!

கொச்சி (21 ஜன 2020): நடிகை அமலாபால் தந்தை பால் வர்கீஸ் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். பால் வர்கீஸ் (61) கொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அமலாபால் மலையாளத்தில் நீலதாமரை என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். தமிழில் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். பால் வர்கீஸின் இறுதிச் சடங்கு கேரள மாநிலம் குறுப்பம்பாடி சர்ச் மயானத்தில் புதன்கிழமை மாலை நடைபெறும்.

மேலும்...

ஒரே மாதத்தில் 219 குழந்தைகள் மரணம் – பதிலளிக்காமல் மழுப்பும் முதல்வர்!

அஹமதாபாத் (06 ஜன 2020): குஜராத்தில் ஒரே மாதத்தில் 219 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் அரசு மருத்துவமனையில் 134 பச்சிளம் குழந்தைகளும், அகமதாபாத் அரசு மருத்துவமனையில் 85 பச்சிளம் குழந்தைகளும் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜ்கோட் மருத்துவ மனையில் 2019 ஆம் ஆண்டில் மட்டும் 1,235 குழந்தைகள் பலியானதாகக் கூறப்படுகிறது. இது குறித்து முதலமைச்சர் விஜய் ரூபானியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். ஆனால் அவர் பதிலளிக்காமல் நழுவிச் சென்றார். ராஜஸ்தான் மாநிலம்…

மேலும்...