தீபாவளி பட்டாசு – காவல்துறை எச்சரிக்கை!

சென்னை (20 அக் 2022): தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பது குறித்து தமிழக போலீசார் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும்,125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பும் பட்டாசுகளை தயாரிக்கவோ, வெடிக்கவோ கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர். பெட்ரோல் பங்க், எரிபொருள் கிடங்குகள், குடிசை பகுதிகளில் வாணவேடிக்கை நிகழ்த்தவும், பட்டாசுகளை கொளுத்தவும் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், மருத்துவமனை, பள்ளி, நீதிமன்றம் மற்றும்…

மேலும்...

பட்டாசுக்கடையில் திடீர் தீ – 4 பேர் உயிரிழப்பு!

கள்ளக்குறிச்சி (26 அக் 2021): கள்ளக்குறிச்சி அருகே பட்டாசுக் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் இன்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீ விபத்தில் சிக்கி…

மேலும்...

நவம்பர் 30 வரை பட்டாசு வெடிக்கத் தடை!

புதுடெல்லி (06 நவ 2020): டெல்லியில் காற்று மாசு மற்றும் பண்டிகை சீசன்களால் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதாகவும், அதனால் பட்டாசுகளுக்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாகவும் முதல்வர் கெஜ்ரிவால் கூறினார். இந்நிலையில், நாளை முதல் நவம்பர் 30ம் தேதி வரை டெல்லியில் அனைத்து வகை பட்டாசுகளையும் வெடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்தார். தடை விதிக்கப்பட்டிருப்பதால் டெல்லியில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளை வெடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் இதுபற்றி அமைச்சர்…

மேலும்...

தீபாவளி திருநாளையொட்டி ரேஷன் கார்டு உள்ளவர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சிறப்புப் பரிசு!

சென்னை (13 அக் 2020): இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 2,000 ரூபாய் ரொக்கப் பரிசு அளிக்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பொதுமக்களின் வாழ்வாதாரம் மாதக்கணக்கில் பாதிக்கப்பட்டுள்ளதால், தீபாவளி பண்டிகையை அவர்கள் சிறப்பாக கொண்டாடும் பொருட்டு இந்த ரொக்கப் பரிசை வழங்க அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. அத்துடன், கொரோனாவை காரணங்காட்டி பொங்கல் பண்டிக்கைக்கும் 1,000 ரூபாய் பதிலாக கூடுதல் தொகை அளிப்பது குறித்து…

மேலும்...