போலீசா? பாஜக செய்தி தொடர்பாளரா? – டெல்லி போலீசை விளாசும் ஆம் ஆத்மி!

புதுடில்லி (05 பிப் 2020): டெல்லி போலீசார் பா.ஜ.கவின் செய்திதொடர்பாளரை போல் பேசுவதாக ஆம்ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் குற்றம்சாட்டி உள்ளார். டெல்லியில் ஷாஹின் பாக் பகுதியில் சிஏஏ.,வுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது சமீபத்தில் பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தினான், அவனை கைது செய்து விசாரித்து வந்த டெல்லி போலீசார், தற்போது அவர் ஆம்ஆத்மி கட்சியின் உறுப்பினர் எனக் கூறி, அதற்கு ஆதாரமாக போட்டோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அது தாக்குதல் நடத்திய கபில் குஜ்ஜார்,…

மேலும்...

டெல்லியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவன் ஆம் ஆத்மியை சேர்ந்தவனா? – பகீர் தகவல்!

புதுடெல்லி (04 பிப் 2020): டெல்லியில் ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவன் ஆம் ஆத்மியை சேர்ந்தவன் என்ற டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இங்கு சில தினங்களுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதி கபில் குஜ்ஜார் என்பவன் கைது செய்யப்பட்டான். அபோது ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் எழுப்பியவாறு போராட்டக் காரர்களை பார்த்து அவன் துப்பாக்கிச்…

மேலும்...

குழந்தையை இழந்தும் போராட்டத்தை கைவிடாத தாய் – ஷஹீன் பாக்கில் நிகழ்ந்த சோகம்!

புதுடெல்லி (04 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் போராட்டக் களத்தில் உயிரிழந்து  பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார் நான்கு மாத குழந்தை. இந்தியாவின் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் மேன்மேலும் தீவிரமடைந்து வருகிறது. டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள ஷஹீன் பாக்கில் பெண்கள் 50 நாட்களை தாண்டியும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மிரட்டல் துப்பாக்கிச் சூடு போன்றவை நிகழ்ந்த போதும் எதற்கும் அச்சப்படாமல் அங்கு…

மேலும்...

டெல்லி துப்பாக்கிச் சூடு – ஷஹீன் பாக் தொடர் போராட்டத்தை திசை திருப்பும் பிரதமர் மோடி!

புதுடெல்லி (04 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் தொடர் போராட்டத்தின் பின்னணியில் திட்டமிட்ட சதி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வரும் 8 ம்தேதி சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள டில்லியில் பிரதமர் மோடி (3 ம் தேதி) பிரசாரம் மேற்கொண்டார். டெல்லி கார்கர்டோமா பகுதியில் உள்ள சிபிடி மைதானத்தில் நடைபெற்ற பாஜக பேரணியில் மோடி பங்கேற்று பேசியதாவது: குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டங்கள் கடந்த பல நாட்களாக சீலாம்பூர், ஜாமியா மற்றும் ஷாஹீன் பாக்…

மேலும்...

ஷஹீன்பாக் துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதி யார் என்று தெரிந்தது!

புதுடெல்லி (01 பிப் 2020): டெல்லியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதி யார் என்ற அடையாளம் தெரிந்தது. டெல்லியில் ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் மீது ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்துடன் பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான். அவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவன் 25 வயது கபில் குஜ்ஜார் என்று அடையாளம் தெரிந்தது. அவன் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்துடனும், இந்திய நாட்டில் இந்துக்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றம் கத்தியபயே…

மேலும்...

டெல்லியில் மீண்டும் போராட்டக் காரர்கள் மீது பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு!

புதுடில்லி (01 பிப் 2020): டெல்லியில் ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் மீது ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்துடன் பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான். இந்திய நாட்டில் இந்துக்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று துப்பாக்கிச்சூடு நடத்தியவன் கோஷமிட்டுள்ளான் இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் குறித்து தகவல் எதுவும் இல்லை டில்லி ஜாமியா பல்கலை.,யில் பள்ளி மாணவன் ஒருவன் துப்பாக்கிச்சூடு நடத்தி 2 நாட்களே ஆன நிலையில், இன்று ஷாஹீன் பாக் பகுதியிலும் போராட்டக்காரர்கள் மீது…

மேலும்...

சீனாவிலிருந்து 324 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்!

புதுடெல்லி (01 பிப் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக சீனாவிலிருந்து 324 இந்தியர்கள் புதுடெல்லி வந்ததடைந்தனர். கொரோனா வைரஸ், சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி, கடும் காய்ச்சலை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து கொண்டதாகும். இது சீனாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் 18 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 7000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த வைரஸ் தொற்றால் இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது….

மேலும்...

டெல்லி துப்பாக்கிச் சூடு விவகாரம் – பிரதமர் மோடிக்கு அசாதுத்தீன் உவைசி கிடுக்கிப்பிடி கேள்வி!

புதுடெல்லி (31 ஜன 2020): “டெல்லியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவன் உடைக்கு அடையாளம் என்ன?” என்று பிரதமர் மோடிக்கு உவைசி கேள்வி எழுப்பியுள்ளார். குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தை கொச்சை படுத்தும் வகையில் பேசியிருந்த பிரதமர் மோடி, வன்முறையில் ஈடுபடுபவர்கள் ஆடைகளை வைத்தே அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் டெல்லியில் “ஜாமியா மில்லியா பல்கலை மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதியின் உடை குறித்து அடையாளம் தர முடியுமா?” என்று…

மேலும்...

டெல்லி மாணவர்கள் மீது சுட்டவனை கோட்சே என பாராட்டிய இந்துத்வா அமைப்பு!

புதுடெல்லி (31 ஜன 2020): டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவனை மற்றும் ஒரு கோட்சே என இந்து மஹா சபா பாராட்டியுள்ளது. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில் டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது இந்நிலையில் டெல்லி ஜாமியா பல்கலையில், ராம் பகத் கோபால் என்ற பயங்கரவாதி ஜாமியா மில்லியா மாணவர்கள் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டதில் காஷ்மீர் மாணவர் சதாம்…

மேலும்...

நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவு!

புதுடெல்லி (31 ஜன 2020): நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை மீண்டும் ஒத்திவைத்து டெல்லி கீழமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிர்பயா குற்றவாளிகள் நால்வரையும் பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 06 மணிக்கு தூக்கிலிட உச்ச நீதிமன்றம் உத்தர்விடிருந்த நிலையில் தூக்கிலிடுவதை ஒத்திவைத்து இரண்டாவது முறையாக டெல்லி கீழமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தூக்கு தண்டனையை ஒத்திவைக்கக் கோரி குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த டெல்லி கீழமை நீதிமன்ற கூடுதல்…

மேலும்...