மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் பதவி யாருக்கு?

சென்னை (08 மார்ச் 2020): திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானதைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் பதவியாருக்கு கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவியாக உள்ளது. கட்சித் தலைவருக்கு அடுத்த நிலையில் அதிகாரம் கொண்ட பதவியாகும். 1977-ம் ஆண்டில் இருந்து பொதுச்செயலாளராக க.அன்பழகன் இருந்து வந்தார். கிட்டத்தட்ட 43 ஆண்டுகள் அசைக்க முடியாத அளவுக்கு அந்த பதவியில் அவர் நீடித்து வந்தார். அவர் காலமானதை அடுத்து அடுத்த மூத்த தலைவருக்கே இந்த…

மேலும்...

துரைமுருகன் ஆலைக்கு சீல்!

காட்பாடி (02 மார்ச் 2020): காட்பாடி அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த திமுக பொருளாளர் துரைமுருனுக்கு சொந்தமான குடிநீர் ஆலையின் நீர உறிஞ்சும் பம்புக்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது. காட்பாடி அடுத்த உள்ளிபுதூர் கிரமாத்தில் முன்னாள் அமைச்சரும், திமுக பொருளாளருமான துரைமுருகனின் அருவி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆலை உள்ளது. இந்த ஆலை அனுமதியின்றி செயல்பட்டதாகக் கூறி பொதுப்பணித் துறையினர் மற்றும் காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன் முன்னிலையில் திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.

மேலும்...

துரைமுருகனுக்கு திமுக தலைவர் பதவி – ஜெயக்குமார் கேள்வி!

சென்னை (23 ஜன 2020): திமுக தலைவர் பதவியை துரைமுருகனுக்கு ஸ்டாலின் விட்டுக் கொடுப்பாரா? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அ.தி.மு.க.வில் யார் வேண்டுமானாலும் முதல்-அமைச்சர் ஆகலாம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பதிலளிக்கையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்-அமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பாரா? என்று கேட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “அதையே நான் திருப்பிக் கேட்கிறேன். அ.தி.மு.க.வில் அடிமட்ட தொண்டன் கூட கொடி கட்டிய காரில்…

மேலும்...

ஸ்டாலின் முதல்வராக முடியாது – பகீர் கிளப்பும் காங்கிரஸ் எம்பி!

சென்னை (17 ஜன 2020): திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆவதை தடுக்க திமுகவிலேயே ஆட்கள் உள்ளனர். என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சித் தேர்தல் இடப பங்கீட்டில் எற்பட்ட கசப்பின் காரணமாக, ‘கூட்டணி தர்மத்தை மீறி திமுக செயல்படுவதாக’ மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து இரு கட்சிகளுக்கும் இடையே புகைச்சல் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த சமயத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன், “காங்கிரஸ், திமுகவைவிட்டு விலகுவதால் என்ன…

மேலும்...

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டப் பாதையிலிருந்து தடம் மாறுகிறதா திமுக?

CAA NRC விசயத்தில் தி.மு.க.வின் சமீபத்திய நகர்வுகள், அந்தக் கட்சி எந்த திசையை நோக்கி நகர்கிறது என்கிற கேள்வியை எழுப்ப வைக்கிறது. ஹலோ எஃப்.எம்.மில் துரைமுருகன் வெளிப்படுத்திய கருத்து; சட்டசபையில் “இந்திய முஸ்லிம்களுக்கு சி.ஏ.ஏ. சட்டத்தால் பாதிப்பில்லை” என்று சொல்லியது; காங்கிரஸ் தலைமையில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தைப் புறக்கணித்தது என மத்திய அரசின் கொள்கை முடிவுகளை எதிர்ப்பதிலிருந்து, தி.மு.க. விலகிச் செல்வதைக் காண முடிகிறது. தந்தைப் பெரியாரோடு களம் கண்டு, தனது சமூகநீதிச் செயல்பாடுகளால் சமத்துவப்…

மேலும்...

திமுக காங்கிரஸ் விரிசல் – துரை முருகன் பரபரப்பு தகவல்!

வேலூர் (15 ஜன 2020): திமுகவிலிருந்து காங்கிரஸ் விலகினால் அதனால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் காட்பாடியில், பொங்கல் பண்டிகையையொட்டி, தொகுதி மக்கள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தி.மு.க-வினர் ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன்,“தி.மு.க ஆட்சியில் கிராமந்தோறும் விளையாட்டு மைதானம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அதனை அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவந்ததைப்போல் படம் எடுத்துக்கொள்கிறார்கள். குளங்களைத் தூர்வாருவதாக சொன்னார்கள். அதன்பிறகு, விவசாயிகள் ஏரி மண்ணை எடுத்துக்கொள்ளலாம்…

மேலும்...