ஈரோடு இடைத்தேர்தல் – காங்கிரஸ் வேட்பாளர் இவர்தான்!

புதுடெல்லி (22 ஜன 2023): ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வே.கே.எஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈ.வெ.ரா, ஜனவரி 3-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அத்தொகுதி காலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தி.மு.க கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட அதேதொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு…

மேலும்...

எஸ் எம் எஸ்ஸில் பூத் சிலிப் அனுப்பிய பாஜக – அதிர்ச்சியான வாக்காளர்கள்!

காந்திநகர் (05 டிச 2022): குஜராத்தில் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் பாஜகவினர் எஸ் எம் எஸ் மூலம் பூத் சிலிப் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 2ம் கட்ட சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு பூத் சிலிப் இணைப்புகளுடன் பாரதீய ஜனதா கட்சி எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. எஸ் எம் எஸ் பெற்ற வாக்காளர்களின் மொபைல் எண்களை பாஜக எவ்வாறு பெற்றது என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்த விவரங்களை சமூக ஆர்வலர் ஒருவர்…

மேலும்...

குஜராத்தில் ராணுவப் படையினர் இடையே மோதல் – இருவர் சுட்டுக் கொலை!

போர்பந்தர் (27 நவ 2022): குஜராத் மாநிலம் போர்பந்தரில் ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தேர்தல் பணிக்கு வந்த ராணுவ வீரர்கள், பணி முடிந்து வீட்டுக்கு வந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட தகராறில் ராணுவ வீரர் ஒருவர் ஏகே 47 துப்பாக்கியால் சுட்டார். இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் மணிப்பூரை சேர்ந்த மத்திய ரிசர்வ் போலீஸ் அதிகாரிகள் முன்னதாக துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இரு ராணுவ வீரர்கள் காந்திநகரில் உள்ள மருத்துவமனையில்…

மேலும்...

குஜராத் தேர்தலையொட்டி மீண்டும் விஸ்வரூபம் எடுக்கு குடியுரிமை திருத்த சட்ட விவகாரம்

புதுடெல்லி (10 நவ 2022): இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, ஒரே மாதிரியான சிவில் சட்டம் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான விவாதத்தை பாஜக செயல்படுத்தியுள்ளது. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மாநில கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் பாஜகவின் எதிர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி எதிர்த்தாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என பாஜக மாநிலத் தலைமை அறிவித்துள்ளது. ஐம்பது சதவீத இடஒதுக்கீட்டு வரம்பை நீக்கி,…

மேலும்...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நாளை பதவியேற்பு!

சென்னை (01 மார்ச் 2022): தமிழகம் முழுவதும் கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. பிப்ரவரி 22ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், திமுக கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் நாளை பதவியேற்க உள்ளனர். நாளை காலை 9.30மணி முதல் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்கின்றனர். சேர்மன், துணை சேர்மன், மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல்…

மேலும்...

விசிகவை தோற்கடிக்க உதவியதா திமுக?

தாம்பரம் (23 பிப் 2022): தாம்பரம் பகுதியில் கூட்டணி கட்சி விசிக வேட்பாளரை தோற்கடிக்க சுயேட்சைக்கு திமுக எம்.எல்.ஏ உதவியதாக சர்ச்சை எழுந்துள்ளது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தாம்பரம் மாநகராட்சி 52வது வார்டு கூட்டணிக் கட்சியான விசிகவிற்கு ஒதுக்கப்பட்டது. அந்த வார்டில் திமுகவில் சீட் எதிர்பார்த்திருந்த பெரியநாயகம் திமுகவிலிருந்து விலகி சுயேச்சையாக நின்றார். இவர், தான் வாக்குகோரும் பிரசுரங்களில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியில் நம் பகுதி மக்களுக்காக என்றென்றும் உழைத்திட ஆதரவு தர…

மேலும்...

ஒரே நகராட்சியில் 22 வார்டுகளில் டெபாசிட் இழந்த பாஜக!

புதுக்கோட்டை (23 பிப் 2022): நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் 22 வார்டுகளில் பாஜக டெபாசிட் இழந்துள்ளது. புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் 23 வார்டுகளில் பா.ஜ.க தனித்து போட்டியிட்டது. இதில் 18வது வார்டு வேட்பாளர் மல்லிகா மட்டும் 428 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த வார்டில் அ.தி.மு.க வேட்பாளர் பாரதி வெற்றி பெற்றுள்ளார். புதுக்கோட்டை நகராட்சியில், 18வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மல்லிகா மட்டுமே வைப்புத் தொகையை தக்க வைத்துள்ளார். மற்ற 22 பா.ஜ.க வேட்பாளர்களும்…

மேலும்...

வெற்றி பெற்றார் கட்சி மாறினார் – பத்தே நிமிடத்தில் நடந்த பரபரப்பு!

மதுரை (22 பிப் 2022): நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக கூட்டணி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்திலும் முன்னிலை வகித்து வருகிறது. 138 நகராட்சிகளில் திமுக கூட்டணி 131 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பேரூராட்சிகளை பொறுத்தவரையில் திமுக கூட்டணி 394 இடங்களிலும், 17 இடங்களில் அதிமுகவும் முன்னிலை வகிக்கிறது….

மேலும்...

ஒத்த ஓட்டு – மீண்டும் பாஜக சாதனை!

ஈரோடு (22 பிப் 2022): நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களிலும் திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சி 11 வது வார்டில் பாஜக வேட்பாளர் நரேந்திரன் ஒரே ஒரு வாக்கு மட்டும் பெற்றுள்ளார். ஏற்கனவே ஊரக உள்ளாட்சித்…

மேலும்...

எடப்பாடி பழனிச்சாமி வசிக்கும் வார்டில் திமுக வெற்றி!

சேலம் (22 பிப் 2022): முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வசிக்கும் சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட 23வது வார்டில் திமுக வெற்றி பெற்றுள்ளது அதிமுகவை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் மேற்கு மாவட்டங்களில் திமுக அதிக இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இந்நிலையில் சேலம் மாநகராட்சிக்கு…

மேலும்...