தீபாவளி பட்டாசு – காவல்துறை எச்சரிக்கை!

சென்னை (20 அக் 2022): தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பது குறித்து தமிழக போலீசார் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும்,125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பும் பட்டாசுகளை தயாரிக்கவோ, வெடிக்கவோ கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர். பெட்ரோல் பங்க், எரிபொருள் கிடங்குகள், குடிசை பகுதிகளில் வாணவேடிக்கை நிகழ்த்தவும், பட்டாசுகளை கொளுத்தவும் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், மருத்துவமனை, பள்ளி, நீதிமன்றம் மற்றும்…

மேலும்...

புதுச்சேரியில் பட்டாசு வெடித்துச் சிதறியதில் தந்தை மகன் பலி!

புதுச்சேரி (05 நவ 2021): புதுச்சேரியில் பட்டாசு வெடித்துச் சிதறியதில் தந்தை மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். கலைநேசன் (37) என்பவர் வியாழக்கிழமை இரவு தனது மனைவி மற்றும் மகனுடன் தீபாவளியை கொண்டாடுவதற்காக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வழியில் இரண்டு பெரிய பட்டாசு பைகளை வாங்கி. பைக்கில் கொண்டு சென்றுள்ளார். ஆனால் எதிர் பாராத விதமாக பட்டாசு பைக்கிலேயே வெடித்துச் சிதறியுள்ளது. இதில் கலைநேசனும், அவரது மகன் பிரதீஷும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயம் அடைந்தானர்….

மேலும்...

பட்டாசுக்கடையில் திடீர் தீ – 4 பேர் உயிரிழப்பு!

கள்ளக்குறிச்சி (26 அக் 2021): கள்ளக்குறிச்சி அருகே பட்டாசுக் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் இன்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீ விபத்தில் சிக்கி…

மேலும்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – 6 பேர் பலி!

விருதுநகர் (20 மார்ச் 2020): விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தின் காரணமாக 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது சிப்பி பாறை . இங்கு தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இங்கு பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் 30 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது உராய்வின் காரணமா பட்டாசு விபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது இந்த விபத்தில்…

மேலும்...