தனிமையில் நடிகை தமன்னாவும் விஜய்யும் டேட்டிங் – வைரலாகும் வீடியோ!

கோவா (08 ஜன 2023): நடிகை தமன்னா மற்றும் விஜய் வர்மா கோவாவில் புத்தாண்டு விருந்தில் முத்தமழை பொழிந்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது. வைரலான அந்த வீடியோ குறித்து. தமன்னாவோ, விஜய்யோ எதுவும் பேசாத நிலையில், இருவரும் சாதாரணமானமாகவே இருக்கின்றனர். அதேவேளை ஜனவரி 6 ஆம் தேதி, தமன்னா இன்ஸ்டாகிராமில் நுழைந்து பல புகைப்படங்களை வெளியிட்டார், அவர் புத்தாண்டை எவ்வாறு வரவேற்றார் என்பதை அவரது ரசிகர்களுக்குக் கொடுத்தார். ஆனால் அதில் விஜய் இல்லை. பிரபலங்கள் ஆண்டின் முதல்…

மேலும்...

கட்சி மாறமாட்டோம் – வேட்பாளர்களிடம் சத்தியம் வாங்கிய காங்கிரஸ் தலைமை!

பனாஜி (23 ஜன 2022): கோவா தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களிடம் கட்சி மாறமாட்டோம் என்று சத்தியம் வாங்கியுள்ளது காங்கிரஸ் கட்சி தலைமை. கோவா சட்டப்பேரவைக்கு கடந்தமுறை நடந்த தேர்தலில் காங்கிரஸ் மொத்தமுள்ள 40 இடங்களில் 17 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக திகழ்ந்தது. ஆனால் இவர்களில் பலர் அடுத்தடுத்து காங்கிரசிலிருந்து பாரதிய ஜனதாவுக்கு மாறிவிட்டனர். இதனால் ஆட்சியை கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது காங்கிரஸ் தரப்பில் 2 எம்எல்ஏக்கள் மட்டுமே மிஞ்சியுள்ளனர். இந்நிலையில், அடுத்த…

மேலும்...

கோவாவில் காலியாகும் பாஜக கூடாரம்!

பானஜி (22 ஜன 2022): கோவாவில் முன்னாள் முதல்வர் மனோகர் பரிக்கரின் மகன் உத்பல் பரிக்கர் பாஜகவை விட்டு விலக்கியுள்ள நிலையில் மேலும் 5 தலைவர்கள் பாஜகவிலிருந்து விலகியுள்ளனர். பாஜகவின் வேட்பாளர் அறிவிப்புக்கு பின், சீட் கிடைக்காத தலைவர்கள் ஒவ்வொருவராக கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். ஒரே இரவில், கோவாவில் ஐந்து முக்கிய பாஜக தலைவர்கள் பாஜகவுக்கு எதிராக மாறியுள்ளனர். முன்னாள் முதல்வர் லக்ஷ்மிகாந்த் பர்சேகர், முன்னாள் அமைச்சர் தீபக் போஸ்கர், துணை சபாநாயகர் இசிடோர் பெர்னாண்டஸ்,…

மேலும்...

கோவா பாஜக முன்னாள் முதல்வர் மனோகர் பரிக்கரின் மகன் பஜகவிலிருந்து விலகல்!

பானஜி (21 ஜன 2022): கோவா பாஜக முன்னாள் முதல்வர் மனோகர் பரிக்கரின் மகன் உத்பல் பரிக்கர் பாஜகவிலிருந்து விலகியுள்ளார். மூன்று முறை கோவா முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தவர் மனோகர் பரிக்கர். இவரின் மகன் மகன் உத்பல் பரிக்கர். இவர் அடுத்த மாதம் நடைபெற உள்ள கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் அவரது தந்தையின் தொகுதியான பானஜியில் போட்டியிட சீட் கேட்டிருந்தார். ஆனால் பாஜக அவருக்கு சீட் தர மறுத்துவிட்டது. இதனால் ஆத்திரமுற்ற உத்பல் பரிக்கர் பாஜகவிலிருந்து…

மேலும்...

பாஜகவுக்கு எதிரான அலை – காங்கிரஸ், திரிணாமூல் கூட்டணிக்கு வாய்ப்பு!

கோவா (13 ஜன 2022): கோவா சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிரான அலை தோன்றியுள்ளது. கோவாவில் பாஜக தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும், வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், ஊழல் என பல பிரச்சனைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. ஆனால் அதை முறியடிக்கும் சக்தி எதிர்க்கட்சிகளுக்கு இல்லை என்பதே உண்மை. ஆட்சிக்கு எதிரான கருத்து சாதகமாக இருக்கும் என காங்கிரஸ் எதிர்பார்த்திருந்த நிலையில், ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் காங்கிரஸும் ஆட்சிக்கு எதிரான வாக்குகளை பிரிக்க…

மேலும்...

திரிணாமுல் காங்கிரசின் நிலைப்பாடு பஜகவுக்கே சாதகம் – சிவசேனா!

புதுடெல்லி (10 ஜன 2022): கோவா சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசின் நிலைப்பாடு பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்று சிவசேனா விமர்சித்துள்ளது. “கோவா தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளில் இருந்து நம்பிக்கையற்ற தலைவர்களை தன் பக்கம் இழுத்துள்ளது. இது ஏற்புடையதல்ல” என்று சிவசேனாவின் முகப்புத்தகமான சாம்னாவில் சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார். சட்டசபைத் தேர்தலுக்காக கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் அதிக அளவில் செலவு செய்வதாகவும், அக்கட்சி செலவழித்த நிதி எங்கிருந்து வந்தது என்றும்…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சர்ச்சில் கிறிஸ்தவர்கள் போராட்டம்!

கோவா (25 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோவா சர்ச்சில் கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர்கள் என பலதரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இஸ்லாமியர்களை குறி வைத்து இயற்றப் பட்டுள்ள இந்த சட்டத்திற்கு பெரும்பான்மை மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதில் குறிப்பாக கிறிஸ்தவர்களும் அடக்கம். கோவா கத்தோலிக் சர்ச்சில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. CAA, NRC மற்றும் NPR ஐ எதிர்த்து…

மேலும்...