மதக்கலவரத்தை உண்டாக்க முயலும் பாஜக எம்பி பிரக்யாசிங் தாக்கூருக்கு எதிராக103 முன்னாள் அரசு அதிகாரிகள் கடிதம்!

புதுடெல்லி (07 ஜன 2023): பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் எம்பி பதவிக்கு தகுதியற்றவர் என்றும் அவர் எடுத்த சத்திய பிரமாணத்தை மீறுவதாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 103 முன்னாள் அதிகாரிகள் திறந்த கடிதம் எழுதியுள்ளனர். சமீபத்தில் கர்நாடகாவில் இந்து ஆதரவு அமைப்பு நடத்திய ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரக்யாசிங் தாக்கூர் இந்துக்கள் அவர்களது வீடுகளில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருக்க வேண்டும் என்று வன்முறையை தூண்டும் வகையில் பேசியிருந்தார்….

மேலும்...

மதவெறுப்பூட்டும் பேச்சு – உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

புதுடெல்லி (21 அக் 2022): மத ரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பேச்சுகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெறுப்புப் பேச்சுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முஸ்லிம்கள் நடத்தும் வணிகங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற பாஜக எம்பி பர்வேஷ் வர்மாவின் பேச்சுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது இந்த மனுவை நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ஹிருத்திகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு…

மேலும்...

முஸ்லிம்களுக்கு எதிரான வகுப்புவாத பேச்சு – ஆயுதப் படை தலைவர்கள் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு கடிதம்!

புதுடெல்லி (01 ஜன 2022): ஹரித்வாரில் முஸ்லிம்களுக்கு எதிராக சமீபத்தில் நடந்த வகுப்புவாத பேச்சுகளைக் கண்டித்து முன்னாள் ஆயுதப்படை தலைவர்கள் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதுகுறித்து எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில் “வெறுப்பின் பொது வெளிப்பாடுகளுடன் வன்முறையைத் தூண்டுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது, இது உள்நாட்டுப் பாதுகாப்பின் மீறல்களுக்கு வழிவகுக்கும், நமது நாட்டின் சமூக கட்டமைப்பை சீரழித்துவிடும்” என்று முன்னாள் ஆயுதப்படை தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள். நமது எல்லையில் தற்போது நிலவும் சூழ்நிலையில், தேசத்திற்குள் அமைதி மற்றும்…

மேலும்...