இந்தியவுக்கு நவீன ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா இந்தியா இடையே ஒப்பந்தம்!

புதுடெல்லி (24 பிப் 2020): இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு அமெரிக்கா நவீன ஆயுதங்களை வழங்கும் வகையில், சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்தாக உள்ளன. இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அகமதாபாத் மொடேரா ஸ்டேடியத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியதாவது:- இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு நவீன ஆயுதங்களை வழங்க தயாராக உள்ளோம். பாதுகாப்பு துறையில் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்தாக…

மேலும்...

இந்தியா வந்தார் ட்ரம்ப் – பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு!

அஹமதாபாத் (24 பிப் 2020): இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார். ஆமதாபாத் விமான நிலையத்திற்கு இன்று முற்பகல் 11.40க்கு வந்தடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு இந்திய பாரம்பரிய முறைப்படி மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. டிரம்ப், அவரது மனைவி மெலனியா, மகள் இவாங்கா உள்ளிட்டோரை பிரதமர் மோடி மற்றும் முக்கிய அமைச்சர்களும், அதிகாரிகளும் வரவேற்றனர். இசைக் கருவிகள் முழங்க, பல்வேறு கலாசார நடன நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் அமெரிக்க…

மேலும்...

வெங்காயம், தக்காளி விற்பீர்கள்! கிரிக்கெட் விளையாட மாட்டீர்களா? – சுஐப் அக்தார் சரமாரி கேள்வி!

இஸ்லாமாபாத் (18 பிப் 2020): இந்தியா பாகிஸ்தான் இடையே வியாபார உறவுகள் உள்ள நிலையில் ஏன் கிரிக்கெட் விளையாடக் கூடாது? என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சுஐப் அக்தார் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், இரு நாடுகளுக்கும் இடையில் கூடிய விரைவில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியா, பாகிஸ்தான் இடையில் வர்த்தகம் நடைபெற்று வருவதையும் மற்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவதையும் சுட்டிக்காட்டிய அக்தர், ஏன் கிரிக்கெட் போட்டிகள் மட்டும் நடத்தப்படுவதில்லை என்று…

மேலும்...

பாகிஸ்தானில் நாங்கள் நிம்மதியாகவே இருக்கிறோம் – இந்தியா வந்துள்ள பாக் இந்துக்கள் கருத்து!

ஹரித்வார் (18 பிப் 2020): பாகிஸ்தானில் நாங்கள் நிம்மதியாகவே வாழ்கிறோம் என்று பாகிஸ்தானிலிருந்து அரித்வார் வந்துள்ள இந்து பக்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்தி பத்திரிகை ஒன்றிற்கு அவர்கள் அளித்துள்ள பேட்டியில், இந்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் ஒரு அரசியல் விளையாட்டு என்று தெரிவித்துள்ள அவர்கள், உண்மையில் பாகிஸ்தான் இந்துக்கள் மீது இந்திய அரசுக்கு அனுதாபம் இருப்பின், இந்தியா வரும் இந்துக்களுக்கு விசா நடைமுறைகளை இலகுவாக்கினாலே போதும். என்றனர். நாங்கள் இந்தியாவுக்கு யாத்திரை வரவேண்டும் என்றல்…

மேலும்...

இந்தியாவின் தற்போதைய நிலை குறித்து சர்வதேச சமூகம் தலையிட இம்ரான் கான் கோரிக்கை!

இஸ்லாமாபாத் (18 பிப் 2020): இந்தியாவின் தற்போதைய நிலை குறித்து சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு பாகிஸ்தான் 40 ஆண்டுகளாக அடைக்கலம் அளித்து வருவது தொடா்பான 2 நாள் சா்வதேச மாநாடு, இஸ்லாமாபாதில் திங்கள்கிழமை தொடங்கியது. இதில், ஐ.நா. பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ் பங்கேற்றுள்ளாா். அவா் முன்னிலையில், பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் பேசியதாவது: இந்தியாவின் தற்போதைய கொள்கைகளால், அங்கிருந்து முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு இடம்பெயர…

மேலும்...

இது இந்தியாவல்ல பாகிஸ்தான் – பாகிஸ்தான் நீதிமன்றம் பாய்ச்சல்

இஸ்லாமாபாத் (17 பிப் 2020): பாகிஸ்தானில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்துள்ள நீதிமன்றம் “இது பாகிஸ்தான், இந்தியாவல்ல”என்றும் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் மனித உரிமைகள் தலைவர் மன்சூர் பஸ்தீன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 23 பேர் கடந்த மாதம் இஸ்லாமாபாத் போலீசாரால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்களின் ஜாமீன் மீதான மனு விசாரணையின்போது இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அதார் மினல்லா பிறப்பித்த…

மேலும்...

1955 குடியுரிமை சட்டப்படி ஒருவர் இந்தியர் என்பதைச் சட்ட ரீதியாக உறுதிபடுத்துவது எப்படி?

1955 குடியுரிமை சட்டப்படி ஒருவர் இந்தியர் என்பதைச் சட்ட ரீதியாக உறுதிபடுத்துவது எப்படி? கீழ்கண்டவாறு ஒவ்வொருவரும் செய்யுங்கள்: 1. வீட்டிலுள்ள அனைவரின் பிறந்த தேதி எழுதி கொள்ளுங்கள். 2. அதனை மூன்று கேட்டகரியாக பிரியுங்கள். அ. 1987 ஜூலை 1 ஆம் தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் ஆ. 1987 ஜூலை 1 க்கும் 2004 டிசம்பர் 31 க்கும் இடையில் பிறந்தவர்கள் இ. 2004 டிசம்பர் 31 க்குப் பின்னர் பிறந்தவர்கள் 3. இதில், 1987 ஜூலை…

மேலும்...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வருகை!

புதுடெல்லி (11 பிப் 2020): அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 நாள் பயணமாக பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இந்தியா வருகை தரவுள்ளளார். அவரது வருகையை வெள்ளை மாளிகை திங்கள்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்மூலம் இருநாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலுப்பெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய வருகை தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையிலான தூதரகங்கள் மூலம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், ஜனவரி 16ஆம் தேதி…

மேலும்...

சிகரம் தொட்ட இந்திய சிறுமி!

அர்ஜெண்டினா (10 பிப் 2020): அகோன்காகுவா சிகரத்தில் ஏறி உலக சாதனை 12 வயது இந்திய சிறுமி காம்யா கார்த்திகேயன். தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் உள்ள ஆண்டஸ் மலைகளில் அமைந்துள்ள அகோன்காகுவா சிகரம் கடல் மட்டத்திலிருந்து 6 ஆயிரத்து 962 மீட்டர் (22841.21 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. எண்ணத்தால் கூட எட்ட முடியாத சிகரம் இது. இந்த சிகரத்தின் உச்சியை ஆந்திராவைச் சேர்ந்த காம்யா கார்த்திகேயன் என்ற 12 வயது சிறுமி எட்டிப்படித்து சாதனை படைத்துள்ளார்….

மேலும்...

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் வங்கதேசம் வெற்றி!

போட்செப்ஸ்ட்ரூம் (09 பிப் 2020): ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்திடம் தோல்வி அடைந்து கோப்பையை இழந்தது. தென் ஆப்ரிக்காவில் ஜூனியர் ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. இதன் பைனலில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 47.2 ஓவரில் 177 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. ஆகாஷ் சிங் (1) அவுட்டாகாமல் இருந்தார். வங்கதேசம் சார்பில் அவிஷேக் தாஸ் 3 விக்கெட்…

மேலும்...