ஜெய் மோடிஜி என்று சொல்ல மறுத்த மாணவர்கள் – வைரலாகும் வீடியோ!

புதுடெல்லி (04 மார்ச் 2022): உக்ரைனிலிருந்து இந்தியா வந்த மாணவர்கள் விமானத்தில் ஜெய் மோடிஜி என்று அழைப்பதற்கு மறுப்பு தெரிவித்து அமைதி காத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்கள் அண்டைய நாடான ருமேனியாவிற்கு வெளியேறி வருகின்றனர். அங்கிருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்களை ஏற்றி வந்தபோது மாணவர்கள் விமானத்தில் ஏறிய பின், பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் கோஷங்களை எழுப்பினார். அவர்…

மேலும்...

ரஷ்யா – உக்ரைன் போரில் இந்திய ஒருவர் மாணவர் படுகாயம்!

புதுடெல்லி (04 மார்ச் 2022): ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போரில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்த சில நாட்களில், உக்ரைன் தலைநகரில் இந்திய மாணவர் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ANI இடம் பிரத்தியேகமாகப் பேசிய, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கான (MoS) இணை அமைச்சர் (MoS) ஜெனரல் VK சிங், இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். “கியேவில் வசித்து வந்த இந்திய மாணவர் சுடப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். இதற்கிடையே எல்லோரும் கியேவை விட்டு…

மேலும்...

உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்க 7 விமானங்கள்!

புதுடெல்லி (28 பிப் 2022): உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க 7 விமானங்களை இந்தியா அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைனில் கீவ், கார்கிவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வசித்த இந்தியர்கள், அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி நாடுகளுக்கு சாலை மார்க்கமாக சென்று அடைக்கலமாகி உள்ளனர். அவர்களை தாயகத்திற்கு அழைத்து வருவதற்காக ஏழு விமானங்களை இயக்க இந்திய அரசு முடிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, நான்கு ஏர் இந்தியா விமானங்கள், ஒரு இண்டிகோ விமானம்…

மேலும்...

பாதியிலேயே திரும்பிய இந்தியர்களை மீட்கச்சென்ற விமானம்!

புதுடெல்லி (24 பிப் 2022): உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஏஐ- 1947நடுவானில் பாதி வழியிலேயே இந்தியா திரும்பி உள்ளது. ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து, தற்போது அந்நாட்டு படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி உள்ளது. மேலும் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் உக்ரைனின் முக்கியமான நகரங்களில் ஒன்றான ஒடேசாவில் ரஷிய ராணுவ வீரர்கள் நுழைந்துள்ளனர். உக்ரைன் விமான நிலையங்கள்…

மேலும்...

ஹிஜாப் விவகாரம் – சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்புக்கு இந்தியா பதில்!

புதுடெல்லி (16 பிப் 2022): ஹிஜாப் விவகாரத்தில் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்த சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்பிற்கு இந்தியா பதிலளித்துள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்துள்ளமை மற்றும் முஸ்லிம்கள் மீதான பல்வேறு தாக்குதல்களுக்கு சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாரில் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்தது உள்ளிட்ட விவகாரங்களுக்கு சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்பு ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் இந்திய அரசியலமைப்பில்…

மேலும்...

இந்தியாவின் ஹிஜாப் விவகாரத்திற்கு சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்பு கண்டனம்!

புதுடெல்லி (15 பிப் 2022): இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்துள்ளமை மற்றும் முஸ்லிம்கள் மீதான பல்வேறு தாக்குதல்களுக்கு சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாரில் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்தது உள்ளிட்ட விவகாரங்களுக்கு சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்பு ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் முஸ்லிம் பெண்களை துன்புறுத்தும் சம்பவங்கள் குறித்தும், கண்டனம் தெரிவித்துள்ளது. முஸ்லிம்கள் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதான…

மேலும்...

சவுதியில் நடந்த இந்திய குடியரசு தின கால்பந்தாட்டப் போட்டி!

ஜித்தா (6 பிப் 2022): இந்தியன் சோசியல் ஃபோரம் மேற்கு மாகாணம் தமிழ்நாடு மாநில கமிட்டி சார்பாக 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நட்பு ரீதியான கால்பந்தாட்டப் போட்டி 28-1-2022 வெள்ளி கிழமை காலை 8:30 மணியளவில் இந்தியன் சோசியல் ஃபோரம் தமிழ் நாடு மாநில கமிட்டி தலைவர் பொறியாளர் முஹம்மது முகைதீன் தலைமையில் நடைபெற்றது. இதில் யுனைட்டட் ஸ்போர்ட்ஸ் கிளப் தமிழ்நாடு அணிக்கும், இந்தியன் சோசியல் ஃபோரம் கேரள அணிக்கும் இடையே ஷரஃபிய்யா ODST ஹோட்டல்…

மேலும்...

ஜுனியர் உலகக்கோப்பையை வென்றது இந்திய (பிசிசிஐ)அணி!

ஆன்டிகுவா (06 பிப் 2022): 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் ஆன்டிகுவாவில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஜேக்கப் 2 ரன்னிலும், கேப்டன் டாம் பிரஸ்ட் ரன் ஏதும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர். ஜேம்ஸ் ரீவ் ஒருபுறம்…

மேலும்...

தமிழக வீரர் ஷாருக்கானுக்கு இந்திய கிரிக்கெட் அணியில் இடம்!

அஹமதாபாத் (06 பிப் 2022) இந்திய கிரிக்கெட் அணியில் தமிழகத்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் ஷாரூக்கான் சேர்க்கப் பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் ஷாருக்கான் மாற்று வீரராக சேர்க்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் 3 வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் இப்போது முதலாவது ஒரு நாள் போட்டிக்கான இந்திய பிசிசிஐ அணியில் ஷாருக்கான் கூடுதலாக சேர்க்கப்பட்டு இருக்கிறார். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட்…

மேலும்...

தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்தியா – ராகுல் காந்தி பரபரப்பு தகவல்!

புதுடெல்லி (03 பிப் 2022): உலக நாடுகளிலிருந்து இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அவர் பேசுகையில் அனைத்து பக்கமும் வெறுப்புகளால் நமது நாடு சூழப்பட்டிருக்கிறது. உலக நாடுகளால் தனித்து விடப்பட்டிருக்கிறது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆபத்தான நிலையில் உள்ளது நம் தேசம். இதை நான் விரும்பவில்லை. இது என்னை கவலையடைய செய்கிறது. சீனாவையும் பாகிஸ்தானையும் பிரித்து வைப்பதுதான் இந்தியாவின் இலக்கு ஆகும். ஆனால் பாஜக அரசோ வெளியுறவுக் கொள்கை மூலம் இரண்டையும் ஒன்றிணைத்து…

மேலும்...