ஈரானில் ஹிஜாப் கண்காணிப்பு பிரிவு கலைப்பு!

டெஹ்ரான் (05 டிச 2022): ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அந்நாட்டு அரசு ஹிஜாப் கண்காணிப்பு காவல் பிரிவைக் கலைத்துள்ளது. ஈரானில் வீட்டைவிட்டு வெளியில் செல்லும் 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியது கட்டாயம். இதற்கிடையே, ஹிஜாப் மத உடைக் கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்க 2006-ல் அறநெறிக் காவல் பிரிவை ஈரான் அரசு தொடங்கியது. ரோந்துப் பணியில் ஈடுபடும் இந்தப் பிரிவுக்கு, உடை கட்டுப்பாடுகளை…

மேலும்...

ஹிஜாபை கழற்றிய நடிகை கைது!

தெஹ்ரான் (21 நவ 2022): இரான் திரைப்பட நட்சத்திரம் ஹெங்கமே காசியானி ஈரானில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் பதிவில் ஹிஜாப் அணியாமல் தோன்றியதால் அவர் கைது செய்யப்பட்டார். காசியானி இன்ஸ்டா பதிவில், ஹிஜாப் இல்லாமல் இன்ஸ்டாகிராமில் இதுவே தனது கடைசி இடுகையாக இருக்கலாம். அடுத்து என்ன நடக்கும் என்று தெரியவில்லை. எனக்கு என்ன நேர்ந்தாலும், எனது கடைசி மூச்சு வரை ஈரானியர்களுடன் இருப்பேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். என்று காசியானி தெரிவித்துள்ளார்.

மேலும்...

ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நில நடுக்கம்!

தெஹ்ரான் (25 ஜூன் 20222): ஈரானின் தெற்கு வளைகுடா கடற்பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. உயிரிழப்பு அல்லது சேதம் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. அதேபோல பல ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடியிருப்பாளர்கள் சனிக்கிழமை காலை நடுக்கத்தை அனுபவித்ததாக தெரிவொத்துள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய வானிலை ஆய்வு மையமும் (NCM) நிலநடுக்கம் 6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக ட்வீட் செய்துள்ளது

மேலும்...

ஈரானில் இரட்டை நிலநடுக்கம் – துபாயில் கட்டிடங்கள் குலுங்கின!

துபாய் (14 நவ 2021): ஈரானில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தை அடுத்து துபாயில் சில இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகம் துபாய், ஷார்ஜா, ராஸ் அல் கைமா மற்றும் அபுதாபியில் வசிப்பவர்கள் “இரண்டு முதல் மூன்று நிமிடங்கள்” நீடித்த நடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்தனர். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பல கட்டிடங்கள் காலி செய்யப்பட்டன. ஜுமைரா லேக் டவர்ஸ், நஹ்தா, டெய்ரா, பர்ஷா, துபாய் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பார்க் மற்றும் டிஸ்கவரி கார்டன்ஸ் போன்ற சமூகங்களில்…

மேலும்...

பதவியேற்பு விழாவில் கவர்னருக்கு விழுந்த பளார் – அதிர்ச்சி வீடியோ!

ஈரான் (24 அக் 2021): ஈரானில் கவர்னர் பதவியேற்பு விழாவில் பேசிக் கொண்டு இருந்தபோது கவர்னரை மர்ம நபர் பளார் என்று அடித்த காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஈரானில் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட அபிதின் கோரம் பதியேற்பு விழாவில் பேசிக் கொண்டு இருந்த நிலையில் மேடை ஏறிய மர்ம நபர் திடீரென அவரது பின்னந்தலையில் பளார் என்று அடித்து சண்டையிட தொடங்கினார். உடனடியாக பாதுகாப்பு பணியில் பாதுகாவலர்கள்…

மேலும்...

கொரோனா பாதிப்பால் ஈரானில் ஒரே நாளில் 129 பேர் பலி!

தெஹ்ரான் (22 மார்ச் 2020): கொரோனா பாதிப்பால் ஈரானில் ஒரே நாளில் 129 பேர் பலியாகியுள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி மனித குலத்தையே அலற வைத்துக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். உலகளவில் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,069 ஆக அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,08,594 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ஈரானில் கொனா பாதிப்பால் இன்று ஒரே நாளில்…

மேலும்...

கொரோனா வைரஸ் இறைவனின் சோதனை – ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி!

தெஹ்ரான் (18 மார்ச 2020): கொரோனா வைரஸ் இறைவனின் சோதனை என்று ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார். சீனா, இத்தாலிக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பு ஈரானில் அதிக அளவில் உள்ளன. ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 1135 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 19,361 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரான் அதிபர் மீது,கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மக்களுக்கு உடனடியாக தகவல் தரப்படவில்லை…

மேலும்...

கொரோனா வைரஸ் – ஈரானில் பலியானோர் எண்ணிக்கை 1135 ஆக உயர்வு!

தெஹ்ரான் (18 மார்ச் 2020): சீனா, இத்தாலிக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பு ஈரானில் அதிக அளவில் உள்ளன. ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 1135 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 19,361 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 147 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும்...

கொரோனா பரவல் – ஈரானிலிருந்து 234 இந்தியர்கள் நாடு திரும்பினர்!

புதுடெல்லி (15 மார்ச் 2020): கொரோனா பாதித்த ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த 234 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானத்தில் திரும்ப அழைத்து வரப்பட்டனர். உலகளவில் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல மாநில அரசுகள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன. இது இப்படியிருக்க ஈரானில் அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஈரான் நாட்டில்…

மேலும்...

கொரோனா வைரஸ் எதிரொலி – ஈரான் அரசு எடுத்த அதிரடி முடிவு!

தெஹ்ரான் (10 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஈரானில் இருக்கும் சிறைக் கைதிகளை விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. கொரோனா வைரஸ் சீனாவுக்கு அடுத்த நிலையில் இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் ஈரான் நாட்டு அரசு சில அதிரடி முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. இதன் ஒரு பகுதியாக ஈரான் நாட்டில் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் சுமார் 70 ஆயிரம் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய அந்நாட்டு தலைமை…

மேலும்...