மனிதம் வளர்ப்போம் – ஜித்தாவில் அணைத்து சமூகத்தினர் கலந்து கொண்ட இஃப்தார் நிகழ்ச்சி!

கடந்த 18-4-22 அன்று ஜித்தா முத்தமிழ் சங்கம்( jems) சார்பாக நடை பெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து வந்திருந்த சகோதரர் முஜிபுர் ரகுமான் அவர்கள் மனிதம் வளர்ப்போம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மௌலவிகள் என்றாலே மார்க்க விஷயங்களில் அதிலும் குறிப்பிட்ட வணக்க வழிபாடுகள் குறித்த விஷயங்களையே திரும்ப திரும்ப கேட்டு பழகி விட்ட நமக்கு மௌலவி முஜிபுர் ரகுமானின் பேச்சு நம்மை வியப்பில் ஆழ்த்தியது. நிகழ்காலதிற்கு மிகவும் அவசியமான சிந்திக்க தக்க சிறந்த உரையை நிகழ்த்தினார்….

மேலும்...

சவூதி ஜித்தாவில் இடிக்கப்படும் 50,000 கட்டிடங்கள்!

ஜித்தா (31 ஜன 2022): சவூதி அரேபியாவின் ஜித்தாவில் சுமார் 50,000 கட்டிடங்கள் இடிக்கப்படுவதாக உள்ளூர் நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நகர்ப்புற மேம்பாடு மற்றும் அழகுபடுத்தலின் ஒரு பகுதியாக, ஜித்தாவில் உள்ள குடிசைகள் உட்பட 138 பகுதிகளில் உள்ள 50,000 கட்டிடங்களை இடிக்க முனிசிபாலிட்டி இலக்கு வைத்துள்ளது. இதில் 13 பகுதிகளில் சுமார் 11,000 கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. மீதமுள்ள சிலவற்றை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது வீடுகள், கட்டிடங்கள் மற்றும் தங்குமிடங்களை இழந்தவர்களுக்கு 68,000 தற்காலிக முகாம்கள் அமைக்கப்படும்….

மேலும்...

மக்கா – மதீனா ஹரமைன் ரெயில் சேவை எண்ணிக்கை அதிகரிப்பு!

ஜித்தா (13 டிச 2021): மக்கா மற்றும் மதீனாவிற்கு இடையேயான ஹரமைன் அதிவேக இரயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மக்கா மற்றும் மதீனாவிற்கு ஹரமைன் அதிவேக இரயில் சேவையில் பயணிக்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதால், தினமும் கூடுதலாக 16 சேவைகள் இயக்கப்படும் என்று இரயில் அதிகாரிகள் தெரிவித்தனர். ஹரமைன் இரயில் சேவை மக்கா, ஜித்தா, ராபிக் மற்றும் மதீனா ஆகியவற்றிற்கு உண்டு. இதற்கிடையே ஜித்தாவின் சுலைமானியா நிலையத்திலிருந்து மக்காவிற்கு மேலும் எட்டு தினசரி சேவைகளும், மதீனாவிற்கு…

மேலும்...

சவூதி ஜித்தாவில் இடிக்கப்படும் கட்டிடங்கள் – வீட்டு வாடகை உயரும் அபாயம்!

ஜித்தா (13 நவ 2021): சவூதி அரேபியாவின் ஜித்தாவில் பல பழைய புதிய கட்டிடங்கள் பெருமளவில் இடிக்கப்படுகின்றன. குறிப்பாக இந்திய மக்கள் அதிகம் வசிக்கும் ஷராஃபியா மற்றும் பாக்தாதியாவில் பல கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. விதி மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள், பழைய கட்டிடங்கள் இடிக்கப்படுகின்றன. சவூதி அரேபியாவில் ஜூலை 1 ஆம் தேதி செயல்படுத்தப்பட்ட சவுதி கட்டிடக் குறியீடு திட்டத்தின் அடிப்படையில் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.. இடிக்கப்படும் கட்டிடங்கள் மூன்று கட்ட எச்சரிக்கைக்குப் பிறகு இடிக்கப்பட்டு வருகிறது….

மேலும்...

சவூதி அரேபியாவில் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் தொடங்கும் சொகுசுக் கப்பல் பயணம்!

ஜித்தா (10 ஜுலை 2021): சவுதி அரேபியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசுக் கப்பல் பயணம் மீண்டும் தொடங்குகிறது. சவூதி அரேபியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கான சொகுசு பயணக் கப்பல் கோவிட் பரவல் காரணமாக ரத்து செய்யப்பாட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டு. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக திட்டத்தை இயக்கும் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது ஒருவர் 2150 ரியால்களில் தொடங்கி பல்வேறு தொகைகளில் வசதிக்கேற்ப பேக்கேஜ்களை தேர்வு செய்யலாம். ஜித்தாவிலிருந்து செங்கடல் வழியாக புறப்படும் இந்த கப்பல்…

மேலும்...

இந்திய செவிலியர் சவூதி ஜித்தாவில் திடீர் மரணம்!

ஜித்தா (13 டிச 2020): சவூதி ஜித்தாவில் பணிபுரிந்து வந்த இந்திய செவிலியர் மஞ்சு மாரடைப்பால் உயிரிழந்தார். கேரள மாநிலம் கண்ணுரை சேர்ந்த மஞ்சு வர்கீஸ் (37) ஜித்தா நேஷனல் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது கணவர் ராணுவத்தில் பணிபுரிகிறார். மஞ்சவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. அனைவரும் இந்தியாவில் உள்ளனர். மஞ்சு 10 வருடங்களாக சவுதியில் பணிபுரிந்து வந்தார்…

மேலும்...

சர்வதேச தன்னார்வத் தொண்டர்கள் தினத்தில் ஜித்தா தமுமுகவிற்கு விருது!

ஜித்தா (07 டிச 2020): சர்வதேச தன்னார்வத் தொண்டர்கள் தினமான கடந்த 5-12-20 அன்று ஜித்தா தமுமுகவிற்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஜித்தாவிலுள்ள இந்திய தூதரகத்தில் சர்வதேச தன்னார்வத் தொண்டர்கள் தினம் 2020 Indian Pilgrims Welfare Forum (IPWF) அமைப்பால் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், தொடர்ந்து உலகமுழுவதும் தன்னார்வலர்கள் கொண்டு மனிதநேயப்பணி செய்யும் தமுமுகவிற்கு விருதுகள் வழங்கப்பட்ட து. தமுமுக சார்பில் ஜித்தா மண்டல பொறுப்பாளர் பொறியாளர் கீழை இர்பான் அவர்களிடம் துணைத்தூதர் Y. சாபிர் அவர்கள்…

மேலும்...

இந்தியன் சோஷியல் ஃபோரம் நடத்திய சமூக நலப்பணிக்கான இணையதள பயிற்சி முகாம்!

ஜித்தா (10 நவ 2020): இந்தியன் சோஷியல் ஃபோரம் ஜித்தா மேற்கு மாகாணம் தமிழ் பிரிவு நடத்திய சமூக நலப்பணிக்கான இணையதள பயிற்ச்சி வகுப்பினை இந்தியதூதரகத்தின் தொழிலாளர் நலனுக்கான இந்திய துணை தூதர் திரு. சச்சிந்த்ர நாத் தாகூர் அவர்கள் தொடங்கி வைத்து வாழத்துரை வழங்கினார். அவர் தனது உரையில் இந்தியன் சோஷியல் ஃபோரம் முன்னெடுக்கும் பல்வேறு சமூக நலப்பணிகளை பாராட்டி தூதரகத்தோடு ஒருங்கிணைத்து செயல்பட்ட நிகழ்வுகளை நினைவுகூர்ந்தார். மேலும் அதிகரித்துவரும் சமூக நலப்பிரச்சினைகளுக்கு இதுபோன்ற பயிற்சிகளும்…

மேலும்...

இந்தியன் சோசியல் ஃபோரம் நடத்திய சவூதிவாழ் இந்திய பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி!

ஜித்தா (18 செப் 2020): சவூதி அரேபியாவில் பணிபுரிந்துவரும் இந்திய தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு ‘திறனை மேம்படுத்துவோம்’ என்ற தொடர் பயிற்சியை மேற்கு மாகாணம் இந்தியன் சோசியல் ஃபோரத்தின் தமிழ் பிரிவு ஜும் காணொளி மூலம் துவக்கியது . உலகளாவிய கொடிய கொரோனா (கோவிட் 19) நோய் தொற்று ஒவ்வொருவரின் வாழ்வாதாரத்தையும் தொழில்துறையையும் மிகப்பெரியளவில் பாதித்துள்ளது. வேலை இழப்பு மற்றும் சம்பள குறைப்பு என பல பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தியுள்ள சூழலில், சமூக அக்கறையுடன்…

மேலும்...

உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு இந்தியன் சோசியல் ஃபாரம் ஏற்பாடு செய்த ஆன்லைன் நிகழ்ச்சி!

ஜித்தா (19 ஜூன் 2020): உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு இந்தியன் சோசியல் ஃபாரம் ஆன்லைன் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. வெளிநாட்டிலுள்ள இந்திய சமூகத்தின் சமூக நல அமைப்பான இந்தியன் சோசியல் ஃபாரம் இரத்த நன்கொடையாளர்கள் குழு (ஐ.எஸ்.எஃப்) 5 ஆண்டுகளாக இரத்த தானத்தில் ஈடுபட்டுள்ளது. மேலும் 2019 ஆம் ஆண்டில் ‘நன்கொடையாளர்கள் பூங்கா (Donor’s Park)’ ரத்த தானம் வழங்கும் குழு மற்றும் ஒரு குறிப்பிட்ட இரத்த தேவைகளின் அடிப்படையில் இரத்த தானம்…

மேலும்...