ஜெயலலிதா இறந்த நாள் நல்ல நாளா? எடப்பாடியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை (06 டிச 2022): ஜெயலலிதா இறந்த நாளான நேற்று அவரது நினைவு நாள் அனுசரிக்கப் பட்டது. இந்நிலையில் அதிமுக சார்பில் ஒபிஎஸ், இபிஎஸ் தனித்தனீஆக ஜெயலலிதாவின் சமாதியில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் எடப்பாடி தலைமையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். எடப்பாடி பழனிச்சாமி உறுதி மொழியை வாசிக்கும்போது, ‘அம்மா இறந்த நன்னாளில்’ என்று வாசித்தார். இதனை அதிமுகவினரும் சேர்ந்து வாசித்தனர். அதிமுகவினரின் அபிமானத்திற்குரிய அம்மாவின் இறந்த நாள் எப்படி நன்னாளாக இருக்க முடியும்? என்று எடப்பாடி பழனிச்சாமியை…

மேலும்...

ஜெயலலிதா மரண விவகாரத்தில் எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார் – சசிகலா!

சென்னை (19 அக் 2022): ஜெயலலிதா சிகிச்சையில் குளறுபடி செய்யப்படவில்லை, எந்த விசாரணையையும் சந்திக்க தயார் என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் இதற்கு சசிகலாவே முழு பொறுப்பு என்றும் ஆறுமுகசாமி கமிஷன் நேற்று அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வி.கே.சசிகலா ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கையை நிராகரித்தார். ஜெயலலிதாவின் சிகிச்சையில் தான் உட்பட 3 பேர் தலையிடவில்லை என்றும், எந்த விசாரணையையும் சந்திக்க தயார் என்றும்…

மேலும்...

அப்போது ஒரு பேச்சு இப்போது ஒரு பேச்சு – அந்தர் பல்டி அடித்த ஓபிஎஸ்!

சென்னை (22 மார்ச் 2022): ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக விமர்சித்து வந்த ஓ.பன்னீர் செல்வம் திடீரென அப்படி எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் நேற்றும் இன்றும் ஓபிஎஸ் ஆஜராகி பதிலளித்து வந்தார். இந்நிலையில் விசாரணையின் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், ஆணையத்தில் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளேன். உண்மையை ஆணையம் கண்டறிய வேண்டும். என்றார். மேலும் சசிகலாவை ‘சின்னம்மா’ என்று அழைத்த ஓபிஎஸ்,…

மேலும்...

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் அப்போலோ டாக்டர் பரபரப்பு வாக்குமூலம்!

சென்னை (07 மார்ச் 2022): முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில்  ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் அப்போலோ டாக்டர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அடுத்த கட்ட விசாரணையை மீண்டும் துவக்கியுள்ளது. முதல்நாள் விசாரணையில் அப்போலோ டாக்டர் பாபு மனோகர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்படி 2016ல் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கும் நாளுக்கு முன் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. டாக்டர் சிவக்குமார் அழைத்ததன் பேரில்…

மேலும்...

ஜெயலலிதா மரணம் தொடர்பாக மீண்டும் தொடங்கும் விசாரணை!

சென்னை (02 மார்ச் 2022): ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் தொடங்குகிறது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்திற்கான கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுவரும் நிலையில், வரும் 7ஆம் தேதி முதல் குறுக்கு விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் தொடங்குகிறது. ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் 10 பேருக்கு…

மேலும்...

ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது? – பீதியை கிளப்பும் நத்தம் விஸ்வநாதன்!

சென்னை (19 ஜூன் 2021): ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பது பற்றி சசிகலாவுக்கு மட்டுமே தெரியும் என்று நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த கடந்த 2017ம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா உறவினர்கள், சசிகலா, அமைச்சர்கள் என 150க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியது. அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த…

மேலும்...

தீபா தீபக் ஆகியோரே ஜெயலலிதாவின் நேரடி வாரிசு – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சென்னை (29 மே 2020): தீபா, தீபக் ஆகியோரை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் உள்பட சுமார் ரூ. 900 கோடி மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுகவைச் சேர்ந்த புகழேந்திர கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா, அவரது தம்பி…

மேலும்...

ஜெயலலிதாவின் வேதா இல்லம் எங்களுக்கே சொந்தம் – தீபா கொந்தளிப்பு!

சென்னை (24 மே 2020): முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவில்லமாக மாற்ற தமிழக அரசு சமீபத்தில் அவசர சட்டம் பிறப்பித்ததற்கு அவரின் அண்ணன் மகள் தீபா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் மறைந்த முன்னாள் முதலமைச்சரின் வாழ்ந்து மறைந்த வீடாகும். இதனை நினைவில்லமாக மாற்ற தமிழக அரசு சமீபத்தில் அவசர சட்டம் பிறப்பித்தது. இதனை மேற்பார்வை செய்ய அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் தலைவராக முதலமைச்சர் பழனிசாமி…

மேலும்...

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டி – வீடியோ!

கரூர் (02 மார்ச் 2020): கரூர் அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நடைபெற்ற மாட்டு வண்டி எல்லை பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரிசுகளை வழங்கி பாராட்டினார். கரூர் மாவட்டம் மணவாடி ஊராட்சி அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. இந்தப் போட்டிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். பெரிய மாடு,…

மேலும்...

எம்ஜிஆராக மாறிய அரவிந்த் சாமி – வீடியோ!

சென்னை (17 ஜன 2020): முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுயசரிதைத் திரைப்படமான தலைவி திரைப்படத்தில் அரவிந்த் சாமி எம்.ஜி.ஆராக நடிக்கிறார். தலைவி படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் நாயகி கங்கனா ரனாவத் நடிக்கிறார். மதராசப்பட்டினம், தலைவா, தெய்வத் திருமகள் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் விஜய், இருமொழிகளிலும் இயக்குகிறார். இத்திரைப்படத்தின் கதையை பாகுபலி, மணிகர்னிகா திரைப்படங்களின் கதாசிரியரும், இயக்குநர் ராஜமெளலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதுகிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர். இசை – ஜி.வி. பிரகாஷ்….

மேலும்...