Supreme court of India

தேர்தல் ஆணையத்திற்கு எந்த உரிமையும் இல்லை – உச்ச நீதிமன்றம் காட்டம்!

புதுடெல்லி (02 நவ 2020): கமல் நாத்தின் நட்சத்திர பிரசாரகர் உரிமையை பறிக்க தேர்தல் ஆணையத்திற்கு எந்த உரிமையும் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தப்ரா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கடந்த வாரம் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்….

மேலும்...

மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் ராஜினாமா!

போபால் (20 மார்ச் 2020): மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அவரது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் எம்.எல்.ஏக்கள் 19 பேர் காங்கிரஸிலிருந்து விலகுவதாக அறிவித்ததை தொடர்ந்து மத்திய பிரதேச மாநில கமல்நாத் தலைமையிலான அரசு ஆட்டம் கண்டது. இதனை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு முன்னதாக கமல்நாத் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மேலும்...

19 எம்.எல்.ஏக்களை இழந்த காங்கிரஸ் – பரிதவிக்கும் மத்திய பிரதேச அரசு!

புதுடெல்லி (10 மார்ச் 2020): ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் எம்.எல்.ஏக்கள் 19 பேர் காங்கிரஸிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். காங்., ஆட்சி நடக்கும் முதல்வர் கமல்நாத் தலைமையிலான அமைச்சரவையில் ஆறு அமைச்சர்கள், 10 எம்.எல்.ஏ.,க்கள் என 16 பேர், மூன்று சிறப்பு விமானம் மூலம், மத்திய பிரதேசத்தின் போபால் நகரிலிருந்து புறப்பட்டு, பெங்களூருக்கு சென்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன், தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுனர். இதற்கிடையே இருக்கும் ஜோதிராதித்யா சிந்தியா, டில்லியில் பிரதமர்…

மேலும்...