கர்நாடகாவில் கட்டாய மத மாற்ற தடை சட்ட மசோதா சட்டசபையில் இன்று தாக்கல்!

பெங்களூரு (2 டிச 2021): கர்நாடகாவில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான சட்ட மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. புதிய சட்டத்தின்படி, கட்டாயப்படுத்தி, வற்புறுத்தி, பணம் கொடுத்து அல்லது திருமண உறுதிமொழியின் கீழ் மதம் மாறுவது சட்டப்படி குற்றமாகும். அதன்படி கட்டாய மதமாற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மதம் மாறியவரின் குடும்பத்தினர் அளிக்கும் புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்யலாம். பொதுவானவரை கட்டாய மதமாற்றம் செய்தால் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை…

மேலும்...

தமிழக கர்நாடக பாஜக-வினர் இடையே நடைபெறும் உச்சபட்ச காமெடி!

பெங்களூரு (31 ஜூலை 2021): கர்நாடகா பாஜக திட்டத்தை தமிழக பாஜகவினர் எதிர்ப்பதும், மத்தியில் ஆளும் பாஜக அதை பார்த்து கொண்டிருப்பதும் பெரிய நகைச்சுவை என்று அரசியல் ஆர்வலர்கள் கிண்டல் அடிக்கின்றனர். கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றுக் கொண்ட நிலையில், மேகதாது அணையை குறித்து சபதம் எடுத்துக் கொண்ட விவகாரம் தமிழக மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. கர்நாடக முதல்வரின் இந்த பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மேகதாது அணையைக் கட்ட கர்நாடகா…

மேலும்...

பாஜக அரசை எதிர்த்து பாஜக போராட்டம்!

சென்னை (29 ஜூலை 2021): கர்நாடக பாஜக அரசை எதிர்த்து, தமிழக பாஜக போராட்டம் அறிவித்துள்ளது. மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். தஞ்சாவூரில் வருகின்ற ஆகஸ்ட் 5ம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

மேலும்...
Yediyurappa

கர்நாடகா முதல்வர் எடியூரப்பா ராஜினாமா!

பெங்களூரு (26 ஜூலை 2021): கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கர்நாடகாவில் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் தேதி எடியூரப்பா 4வது முறையாக முதல்வராகப் பதவி ஏற்றார். அப்போதே 2 ஆண்டுகள் முடிந்ததும் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும்’ என நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த நிபந்தனையை ஏற்ற எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்று இன்றுடன் (ஜூலை 26) 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கடந்த 16ம்…

மேலும்...

பாஜக அமைச்சரின் அதிர வைக்கும் ஆபாச வீடியோ!

பெங்களுரு (03 மார்ச் 2021): கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி, இளம் பெண்ணோடு தனிமையில் இருப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கர்நாடகாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி, அந்தப் பெண்ணை ஏமாற்றி தவறாக நடந்து கொண்டுள்ளதாக காவல்துறையிடம் புகாரளித்துள்ளார். அவரிடம் உள்ள ஆபாச வீடியோக்களை வைத்து அந்தப் பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்துகிறார். எனவே தயவுசெய்து இந்த விஷயத்தின் உண்மைத் தன்மையை விசாரித்து, அமைச்சர் மீது கிரிமினல் வழக்குப் பதிவுசெய்து,…

மேலும்...

கையில் பணமில்லை – பகீர் கிளப்பும் முன்னாள் பிரதமர்!

பெங்களூர் (11 பிப் 2021): : தேர்தல் செலவினங்களுக்கு பணம் இல்லாததால் வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் ஜே.டி (எஸ்) போட்டியிடாது என்று முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெல்காம் மக்களவைத் தொகுதி மற்றும் பசவகல்யன், சிண்ட்கி மற்றும் மஸ்கி சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறும். இடை தேர்தல் குறித்து அவர் தெரிவிக்கையில், “இப்போதைக்கு இடைதேர்தல் குறித்து சிந்திக்கப்போவதில்லை. அதற்கு செலவு செய்ய பணமும் இல்லை. 2023 தேர்தலுக்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படும்.” என்று தெரிவித்துள்ளார்….

மேலும்...

கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில் எஸ்டிபிஐ 200 க்கும் அதிகமான இடங்களை வென்று சாதனை!

பெங்களூரு (31 டிச 2020): கர்நாடகாவில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ 200 க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றுள்ளது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, எஸ்.டி.பி.ஐ இதுவரை 223 இடங்களை வென்றுள்ளது. மங்களூர் மாவட்டத்தில் எஸ்டிபிஐ அதிக இடங்களை கைபற்றியுள்ளது. மடிகேரி (குடக்) – 10, உத்தரா கன்னடம் – 5, குல்பர்கா – 5, உடுப்பி – 14, பல்லாரி – 2, ஹாசன் – 4 மாவட்டங்கள். சாமராஜநகர், யாத்கீர், ரைச்சூர்…

மேலும்...

மாட்டிறைச்சி உண்ணுவதை முஸ்லிம்கள் கைவிட வேண்டும் – காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்!

பெங்களூரு (20 டிச 2020): “இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மாட்டிறைச்சி உண்ணுவதை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும்.” என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான இப்ராகிம் தெரிவித்துள்ளார்ர் கர்நாடகாவில் பாஜக அரசு அறிமுகப்படுத்திய பசு வதை சட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் இப்ராஹிம் ஆதரவளித்துள்ளார். அதேவேளை, “நாட்டில் இந்து பெரும்பான்மையினரின் மத உணர்வுகளை புண்படுத்தும் எந்தவொரு செயலிலும் முஸ்லிம் சமூகம் ஈடுபடக்கூடாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” என்றார். மேலும் முஸ்லிம் சமூகம் இதை உணர்ந்து மாட்டிறைச்சி சாப்பிடுவதைத் தவிர்க்க…

மேலும்...

வீட்டுக்குள் வந்த இறந்த மனைவி – மகிழ்ச்சிக் கடலில் கணவர்!

பெங்களூரு (11 ஆக 2020): விபத்தில் இறந்த மனைவி தத்ரூபமாக அதே வடிவில் வீட்டுக்குள் இருக்க, குடும்பமே மகிழ்ச்சிக் கடலில் உள்ளது. இதுகுறித்த சுவாரஸ்ய சம்பவம் இதோ: கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் அப்பகுதியில் வணிக வளாகம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் பலியானார். இதனை அடுத்து கிருஷ்ணன் தன்னுடைய இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். அவர் தற்போது புதிதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். இந்நிலையில்…

மேலும்...

BREAKING: கர்நாடகாவில் நிலநடுக்கம்!

பெங்களூரு (05 ஜூன் 2020): கர்நாடகா மற்றும் ஜார்கண்டில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை லேசான தீவிரம் கொண்ட நிலநடுக்கம் கர்நாடகாவில் ஹம்பி மற்றும் ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர் ஆகிய பகுதிகளில் ஒரே நேரத்தில் தாக்கியதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. ஜார்க்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூரில் காலை 6:55 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.7 என்ற லேசான தீவிர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே நேரத்தில், கர்நாடகாவில் உள்ள ஹம்பியும் ரிக்டர் அளவுகோலில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை…

மேலும்...