ஹலால் அல்லாத கோழிக்கறி கோரி முஸ்லிம் வியாபாரிகள் மீது பஜ்ரங்தள் அமைப்பினர் தாக்குதல்!

பெங்களூரு (31 மார்ச் 2022): ஹலால் அல்லாத கோழிக்கறி கேட்டு முஸ்லிம் வியாபாரி மீது பஜ்ரங்தள் அமைப்பினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். ஹிஜாப் விவகாரத்திற்குப் பிறகு கர்நாடகாவில் இந்துத்துவாவினர் பல்வேறு விதமாக முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர். கோவிலுக்கு அருகில் முஸ்லீம் வியாபாரிகளுக்கு தடை விதித்தனர். தற்போது ஹலால் இறைச்சி விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். இந்நிலையில் ஹலால் கோழிக்கறி கோரி முஸ்லிம் வியாபாரிகளை அடித்து உதைத்த சம்பவம் புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. ஷிவமொகா பகுதியில் பஜ்ரங் தள் குழுவினர்…

மேலும்...

முஸ்லிம்களிடம் இறைச்சி வாங்க வேண்டாம் – இந்துக்களுக்கு பஜ்ரங்தள் அழைப்பு!

பெங்களூரு (30 மார்ச் 2022): கர்நாடகாவில் முஸ்லிம் வியாபாரிகளிடம் இறைச்சி வாங்க வேண்டாம் என பஜ்ரங்தளம் இந்துக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. பெங்களூருவில் நடந்த நீலமங்கல உகாதி கண்காட்சியில் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் இந்து விற்பனையாளர்களைச் சந்தித்து முஸ்லிம் வியாபாரிகளிடம் இறைச்சி வாங்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். மேலும் கன்னடத்தில் அச்சிடப்பட்ட அறிவிப்பை பலருக்கும் பஜ்ரங்தள அமைப்பினர் விநியோகித்து வந்தனர். ஹிஜாப் தடையால் கர்நாடகாவில் இஸ்லாமிய வெறுப்பு தலைவிரித்தாடுகிறது. அங்கு முஸ்லிம்கள் கோவில் திருவிழாக்களில் வியாபாரம் செய்ய முடியாத…

மேலும்...

ஹிஜாப் அணிந்த மாணவிகளை தேர்வெழுத அனுமதித்த ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்!

[1:47 PM, 3/30/2022] Sulthan Kuwait: பெங்களூரு (30 மார்ச் 2022): கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த மாணவிகளை தேர்வெழுத அனுமதித்த 7 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு செல்ல கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் ஹிஜாப் இஸ்லாமிய நடைமுறைகளில் அவசியமானதல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பிற்கு முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு நடைபெற்று வருகிறது. ஹிஜாப்…

மேலும்...

ஹிஜாப் தடை காரணமாக தேர்வை புறக்கணித்த 20 ஆயிரம் மாணவிகள்!

பெங்களூரு (29 மார்ச் 2022): கர்நாடகத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சிதேர்வு எழுதாத விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகத்தில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது. மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 73 ஆயிரத்து 846 பேர் இந்த தேர்வை எழுதினர். இதில் 4 லட்சத்து 52 ஆயிரத்து 732 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 21 ஆயிரத்து 110 பேர் மாணவிகள். 4 பேர் 3-ம் பாலினத்தவர்கள். 3 ஆயிரத்து 444 தேர்வு மையங்களில் இந்த…

மேலும்...

ஹிஜாபை கழற்ற மறுத்த தேர்வு கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்!

பெங்களூரு (28 மார்ச் 2022): கர்நாடகாவில் ஹிஜாபை கழற்ற மறுத்த தேர்வு கண்காணிப்பாளர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவில் ஹிஜாப் தடைக்கு மத்தியில் எஸ்எஸ்எல்சி (10-ஆம் வகுப்பு) தேர்வு இன்று தொடங்கி அமைதியாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான மாணவர்கள் சீருடையில் பரீட்சைகளை எழுதினர். சிலர் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்ததால் அவர்கள் பள்ளியை விட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். இந்நிலையில் கே.எஸ்.டி.வி மேல்நிலைப் பள்ளியில் தேர்வு நடத்தும் போது ஹிஜாபை கழற்ற மறுத்த தேர்வு கண்காணிப்பாளரை…

மேலும்...

ஹிஜாப் தடை உத்தரவை எதிர்த்து முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

புதுடெல்லி (28 மார்ச் 022): பள்ளி கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை ஆதரித்து உத்தரவிட்ட கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. வழக்கறிஞர் எம்.ஆர்.ஷம்ஷாத் மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் இரண்டு முஸ்லிம் பெண் உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இஸ்லாமிய நூல்கள் குறிப்பாக இஸ்லாமிய சட்டத்தின்…

மேலும்...

முஸ்லிம் நாடுகள் திருப்பி அனுப்பினால் என்.ஆர்.ஐக்களுக்கு வேலை வழங்க முடியுமா? – பாஜக தலைவர் பரபரப்பு கேள்வி!

பெங்களூரு (28 மார்ச் 2022): முஸ்லிம் நாடுகள் திருப்பி அனுப்பத் தொடங்கினால், என்ஆர்ஐகளுக்கு வேலை வழங்க முடியுமா என்று பாஜக மூத்த தலைவரும், கர்நாடக சட்ட மேலவை உறுப்பினருமான (எம்எல்சி) எச்.விஸ்வநாத் கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் சில கோயில் வளாகங்களில் முஸ்லிம் வர்த்தகர்கள் கடைகள் அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு விஸ்வநாத் கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகா கோவில் திருவிழாக்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதிக்கும் நடவடிக்கை, மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கு பரவி பெரும்…

மேலும்...

பாடபுத்தகத்தில் திப்பு சுல்தான் குறித்த அத்தியாயத்தை நீக்க கர்நாடக அரசு முடிவு!

பெங்களூரு (27 மார்ச் 2022): கர்நாடக அரசு பள்ளி பாடப்புத்தகங்களைத் திருத்தவும், திப்பு சுல்தான் உட்பட சில அத்தியாயங்களை நீக்கவும் திட்டமிட்டுள்ளது. மறுஆய்வுக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் இதற்கு பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. கல்வித்துறை அறிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டால் வரும் கல்வியாண்டில் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களில் மாற்றங்கள் அமல்படுத்தப்படும். திப்பு சுல்தான் பற்றிய அத்தியாயங்களை முற்றிலுமாக நீக்க அந்த குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கிடையில், பள்ளி பாடநூல் மறுஆய்வுக் குழு சமீபத்தில் சமர்ப்பித்த…

மேலும்...

ஹிஜாபுக்காக தேர்வை கைவிட வேண்டாம் – முஸ்லீம் மாணவிகளுக்கு அமைச்சர் கோரிக்கை!

பெங்களூரு (27 மார்ச் 2022): ஹிஜாப் விவகாரத்தில் ஈகோவை விட்டு தேர்வில் கலந்துகொள்ள வேண்டி கர்நாடகா கல்வி அமைச்சர் நாகேஷ் மாணவிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹிஜாப் அணிய வலியுறுத்துவார் சொல்லை கண்டுகொள்ளாதீர்கள் என்று கூறியுள்ள அமைச்சர் நாகேஷ் தேர்வுக்கு வராதவர்களுக்கு ஒரு மாதத்திற்கு பிறகு மறுதேர்வு நடத்தப்படும். “இதைத் தவிர, அவர்களுக்கு வேறு வழியில்லை,” என்று அவர் கூறினார். மேலும் ஹிஜாப் அணிந்து வரவேண்டும் என வலியுறுத்தும் மாணவர்கள் தேர்வுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து கலந்து கொள்வார்கள் என்று…

மேலும்...

முஸ்லிம் பெயரில் போலி வலைத்தள பக்கத்தில் வகுப்புவாத கருத்துக்களை பதிவிட்டவர் கைது!

பெங்களூரு (25 மார்ச் 2022): கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் பெயரில் சமூக வலைதள பக்கத்தில் சமூக விரோத கருத்துகளை பதிவிட்ட சித்தரோதா ஸ்ரீகாந்த் நீராலே (31) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடக மாநில சட்டப் பேரவையின் முன்னாள் தலைவர் டி.எச்.சங்கர்மூர்த்தியின் மகனான கர்நாடக பாஜக எம்எல்சி டி.எஸ்.அருணுக்கு சமூக வலைதளத்தில் முஷ்டாக் அலி என்ற பெயரில் ஒருவர் மிரட்டல் விடுத்தார். எம்.எல்.சி.யின் புகாரின் அடிப்படையில், ஷிவமோகாவில் உள்ள சைபர், பொருளாதாரம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு…

மேலும்...