ஹிஜாப் விவகாரம் – பள்ளிகளை சுற்றி 144 தடை உத்தரவு!

உடுப்பி (13 பிப் 2022): கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெங்களூரில் பள்ளி- கல்லூரிகளை சுற்றி 144 தடை உத்தரவு வருகிற 22-ந் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக உடுப்பி மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளிகளை சுற்றி நாளை (14-ந்தேதி) காலை 6 மணி முதல் 19-ந்தேதி மாலை 6…

மேலும்...

ஹிஜாப் ஆதரவு பேரணிக்கு தடை!

அஹமதாபாத் (13 பிப் 2022): குஜராத்தில் ஹிஜாப் ஆதரவு பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர் மேலும் போராட்டங்களில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுத்துள்ளனர். . கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடைக்கு எதிராக போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு ஆதரவாக சூரத்தில் முஸ்லிம் அமைப்புகள் பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளன. AIMIM இன் சூரத் பிரிவு தலைவர் வாசிம் குரேஷி மற்றும் கட்சி உறுப்பினர் நஸ்மா கான் உட்பட 20 பெண் எதிர்ப்பாளர்கள் பேரணியில் கலந்து கொள்ளவிருந்த நிலையில் அவர்களுக்கு தடை…

மேலும்...

ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராவார் – அசாதுதீன் ஒவைசி!

லக்னோ (13 பிப் 2022): ஒரு நாள் ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராக வருவார் என்று அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய ஒவைசி, ஹிஜாப் அணிந்த பெண்கள் மருத்துவர்களாகவும், மாவட்ட நீதிபதிகளாகவும், துணை மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளாகவும் (SDM) ஒரு நாள் இந்தியாவின் பிரதமராகவும் மாறுவார்கள் என்று கூறினார். ஹிஜாப் விவகாரம் குறித்து பேசிய அவர், “ஹிஜாப் அணிவதற்கான உரிமைக்காகப் போராடும்…

மேலும்...

ஹிஜாபை கழற்ற மாட்டோம் – அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் – VIDEO

அலிகார் (11 பிப் 2022): கர்நாடக அரசு, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதைத் தடை செய்ததற்கு எதிராக உத்திர பிரதேசம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் (AMU) மாணவர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலான மாணவர்கள் ஹிஜாப் அணிந்து, கோஷங்களை எழுப்பி, தாங்கள் விரும்பியதை அணிய சுதந்திரம் கோரினர். கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர முஸ்லீம் பெண்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப்…

மேலும்...

ஹிஜாப் விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி (11 பிப் 2022): ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர முஸ்லீம் பெண்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் ஹிஜாப் அணிய தடை…

மேலும்...

ஹிஜாப் விவகாரம் – முஸ்லிம் மதகுருமார்கள் சர்வமத தலைவர்களுடன் ஆலோசனை!

புதுடெல்லி (11 பிப் 2022): ஹிஜாப் விவகாரத்தில் தீர்வு காண முஸ்லிம் மத குருமார்கள் பல்வேறு மத தலைவர்களுடன் ஆலோசனை நடத்த முடிவெடுத்துள்ளனர். கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்விவகாரம் நாடெங்கும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்நிலையில் நாட்டில் பரவி வரும் வெறுப்புக்கு எதிராக தீர்வு காண இஸ்லாமிய மையத்தின் (ஐசிஐ) மதகுருமார்கள் பல்வேறு மத தலைவர்களுடன் சர்வமத மாநாட்டை நடத்தவுள்ளனர். இதுகுறித்து ஐசிஐ தலைவர் மௌலானா காலித் ரஷீத் ஃபராங்கி…

மேலும்...

ஹிஜாப் விவகாரம் – முஸ்லிம் மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு!

புதுடெல்லி (11 பிப் 2022): மத அடையாளங்களுடன் பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்கள் வர தடை வழங்கி கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர முஸ்லீம் பெண்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப்…

மேலும்...

தொலைபேசி எண்கள் கசிவு – முஸ்லிம் மாணவிகளுக்கு தொலைபேசி மிரட்டல்!

உடுப்பி (10 பிப் 2022): கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசுப் பெண்கள் கல்லூரியின் பல முஸ்லீம் மாணவிகளின் தொலைபேசி எண்கள், முகவரிகள், பெற்றோரின் தொடர்புகள் கசிந்ததை அடுத்து, அடையாளம் தெரியாத நபர்களால் புதன்கிழமை முதல் மிரட்டல் அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர முஸ்லீம் பெண்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பை…

மேலும்...

மாணவர்கள் மத அடையாளங்களுடன் எந்த ஆடையும் அணியக்கூடாது – கர்நாடக நீதிமன்ற நீதிபதி!

பெங்களூரு (10 பிப் 2022): மாணவர்கள் மதம் சார்ந்த எந்த ஆடையையும் அணிய அனுமதிக்க முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வியாழக்கிழமை தெரிவித்தார். கர்நாடகாவில் பள்ளி ,கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய மாநில அரசு தடை விதித்துள்ள நிலையில், இதனை அனுமதிக்கக் கோரி, நீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, கல்லூரியில் மாணவர்கள் ‘ஹிஜாப்’ அணிவதற்கு மாநில அரசின் தடையை எதிர்த்து தொடரப்பட்ட இந்த மனுக்களை…

மேலும்...

விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் விவகாரம் – உச்ச நீதிமன்றத்தில் கபில் சிபல் அவரசர மனு!

புதுடெல்லி (10 பிப் 2022): ஹிஜாப் தொடர்பான வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இருந்து தனக்கு மாற்றுவதற்கான மனுவை பட்டியலிட மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கோரிக்கை வைத்துள்ளார். இதனை பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான பெஞ்ச் இதுகுறித்த உத்தரவில், இந்த வழக்கை உயர்நீதிமன்றம் கைப்பற்றியுள்ளதாகவும், விசாரணையைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியது. வழக்கை மாற்றக் கோரியும், உச்ச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கும் கோரி,…

மேலும்...