பயங்கரவாதியின் துப்பாக்கிச்சூட்டை அடுத்து மீண்டும் போராட்டத்தால் திணறும் டெல்லி!

புதுடெல்லி (30 ஜன 2020): டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது கோபால் என்ற பயங்கரவாதி துப்பாக்கியால் சுட்டதை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில் டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல ஷஹீன் பாக்கிலும் பெண்கள் அதிக அளவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று ராம் பகத் கோபால் என்ற பயங்கரவாதி ஜாமியா மில்லியா மாணவர்கள்…

மேலும்...

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தமிழக பாஜக!

சென்னை (28 ஜன 2020): தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில் ஏதாவது பதிந்துவிட்டு பின்பு நீக்கம் செய்வது வாடிக்கை. அந்த வகையில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா குறித்த ஒரு பதிவை பதிந்துவிட்டு தற்போது நீக்கம் செய்துள்ளது. காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்தவருமான ஓமர் அப்துல்லாவின் கடந்த ஐந்து மாதங்களாக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவரது தாடியுடன் கூடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இதனை கிண்டல் செய்யும்…

மேலும்...

ஐந்து மாதங்களுக்குப் பின் வெளியான ஒமர் அப்துல்லாவின் வைரல் புகைப்படம்!

ஜம்மு (25 ஜன 2020): காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்தவருமான ஓமர் அப்துல்லாவின் தாடியுடன் கூடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கிரத்து செய்தது மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும் மாநிலத்தை காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றியது. இணைய இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு…

மேலும்...

குடியரசு தினத்தில் தாக்குதல் நடத்த திட்டம் – ஐந்து பேர் கைது!

ஸ்ரீநகர் (17 ஜன 2020): குடியரசு தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாக ஐந்து பயங்கரவாதிகள் ஸ்ரீநகரில் வியாழனன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வியாழனன்று பதிவிட்டுள்ளதாவது: குடியரசு தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டம் தீட்டிய ஜெய்ஷ் அமைப்பின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஹசரத்பால் பகுதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளுக்கு காரணமானவர்கள் கண்டறியபட்டுள்ளனர். ஹசரத்பால் சதார்பால் பகுதியைச் சேர்ந்த அய்ஜாஸ் அஹமத் ஷேக், அசார் காலனி பகுதியைச்…

மேலும்...

காஷ்மீரில் நான்கு ராணுவ வீரர்கள் பலி!

ஸ்ரீநகர் (15 ஜன 2020): காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக நான்கு ராணுவ வீரர்கள் உட்பட 10 பேர் பலியாகியுள்ளனர். கடந்த சில நாட்களாக காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், அங்கு பல மாவட்டங்களில் பனிச்சரிவு ஏற்படுகிறது. குப்வாரா மாவட்டம், மச்சில் செக்டார் பகுதியில் உள்ள ராணுவ முகாம், பனிச்சரிவில் சிக்கியது. இதில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். ஒருவரை காணவில்லை. ஒரு வீரர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நவுகாம் செக்டார் பகுதியில்…

மேலும்...

காஷ்மீரில் மூவர் சுட்டுக் கொலை!

புல்வாமா (12 ஜன 2020): காஷ்மீர் புல்வாமாவில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே அவ்வப்போது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.. இந்நிலையில், இன்று புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் உள்நுழைந்ததாக வந்த தகவலையடுத்து, பாதுகாப்புப்படையினர் அவ்விடத்திற்குச் சென்றனர். தொடர்ந்து, பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.

மேலும்...

மோடி என்னிடம் பேரம் பேசினார் – ஜாகிர் நாயக் பரபரப்பு தகவல்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவரது நேரடி உத்தரவின் பேரில் இந்திய அரசின் பிரதிநிதி ஒருவர் தம்மை சந்தித்துப் பேசியதாகத் இஸ்லாமிய மத போதகர் ஜகிர் நாயக் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். காஷ்மீரில் இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில், தாம் தகுந்த பாதுகாப்புடன் இந்தியா திரும்ப வழிவகை செய்யப்படும் என அந்தப் பிரதிநிதி தம்மிடம் உறுதியளித்ததாகவும் ஜாகிர் நாயக் குறிப்பிட்டுள்ளார். ஜாகிர் நாயக்கின் கூற்று…

மேலும்...

காஷ்மீர் மக்களின் நெஞ்சில் பாலை வார்த்த உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி (10 ஜன 2020): இணையதள சேவை இல்லாமல் இருந்து வரும் காஷ்மீர் மக்கள், உச்ச நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு குறித்து அறிந்து மிகவும்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்ததை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வா்கள் ஃபரூக் அப்துல்லா, ஒமா் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா். பிற மாநிலங்களில் இருந்து அரசியல் கட்சிகளின் தலைவா்கள்…

மேலும்...