12 வயது சிறுவனுக்கு 2.9 லட்சம் ரூபாய் அபராதம்!

போபால் (20 அக் 2022: மத்திய பிரதேச மாநிலம் கார்கானில் கடந்த ஏப்ரலில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக அதிகாரிகள் பெரும் தொகை இழப்பீடு கோரியுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் மத்திய பிரதேசம் கார்கோனில் வன்முறை ஏற்பட்டது. அப்போது அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் அடிப்படையில் அதிகாரிகள் இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் . கார்கோனில் மோதல். மோதலின் போது ஏற்பட்ட சேதங்கள் குறித்து அண்டை வீட்டுக்காரர் அதிகாரிகளிடம் புகார் செய்ததையடுத்து, சிறுவன்…

மேலும்...

சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்தவர்கள் வீடுகள் புல்டோசர் மூலம் இடிப்பு!

போபால் (19 செப் 2022): மத்திய பிரதேசத்தில் 16 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டன. மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் 16 வயது சிறுமி தனது வருங்கால கணவருடன் கோவிலுக்கு சென்றபோது, வருங்கால கணவர் முன் சிறுமி இரண்டு மைனர்கள் உட்பட 6 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். ஆனால், இரு குடும்பத்துக்கும் அவப்பெயரை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சத்தில், இரு குடும்பத்தாரும் புகார் அளிக்க விரும்பவில்லை. இந்த…

மேலும்...

மூன்றரை வயது சிறுமி பள்ளி பேருந்து ஓட்டுநரால் பாலியல் பலாத்காரம்!

போபால் (13 செப் 2022): மத்திய பிரதேச மாநிலம் போபாலில் மூன்றரை வயது சிறுமியை பள்ளி பேருந்து ஓட்டுனர் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் போபாலில் உள்ள ஒரு முக்கிய பள்ளியில் படிக்கும் மாணவி. பாடசாலை முடிந்து வீடு வந்து கொண்டிருந்த போது பள்ளி பேருந்து ஓட்டுநரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்தபோது பேருந்தில் பள்ளியின் பெண் ஊழியரும் இருந்துள்ளார். இந்த சம்பவத்தை பள்ளி நிர்வாகம் மூடி மறைக்க முயன்றதாக…

மேலும்...

மத்திய பிரதேசத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஊரடங்கு உத்தரவு!

கார்கோன் (01 மே 2022): ரம்ஜான் பண்டிகை மற்றும் இந்து திருவிழாக்களையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்க மத்திய பிரதேசம் மாநிலம் கார்கோன் மாவட்டத்தில் மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது “ஈத் தொழுகை வீட்டில் செய்யப்பட வேண்டும். மேலும், அட்சய திரிதியா மற்றும் பரசுராமர் ஜெயந்தியில் எந்த நிகழ்ச்சியும் மாவட்டத்தில் ஏற்பாடு செய்ய அனுமதிக்கப்படாது, ”என்று கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் (கார்கோன்) சுமர் சிங் முஜல்தா கூறினார். கடந்த ஏப்ரல் 10…

மேலும்...

மத்திய பிரதேசம் கலவரம் – இப்ரீஸ் கான் மரணத்தை உறுதி செய்தது காவல்துறை!

கார்கோன் (18 ஏப் 2022): மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் ஏற்பட்ட ராமநவமி கலவரத்தை அடுத்து கலவரக்காரர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த இப்ரீஸ் கானின் மரணத்தை கார்கோன் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி காணாமல் போன ஒருவர் ஞாயிற்றுக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டார். எனினும் காவல்துறை இப்ரீஸ் மரணத்தை அறிவிக்காமல் இருந்தது. சம்பவம் குறித்து இப்ரீஸின் சகோதரர் இக்லாக் கூறுகையில், நானும் எனது சகோதரர் இப்ரீஸும் இப்தார் நோன்பு துறப்புக்காக மசூதிக்குச் சென்று திரும்பி…

மேலும்...

வீடுகளை இடித்த அரசை எதிர்த்து நீதிமன்றத்தை நாட முஸ்லிம்கள் முடிவு!

போபால் (16 ஏப் 2022): மத்திய பிரதேசத்தில் பாஜக அரசு முஸ்லிம்களின் வீடுகளை இடித்த நிலையில் இதற்கு எதிராக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உயர்நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேசம் கார்கோன் நகரில் ராமநவமி ஊர்வலத்தின்போது வன்முறை வெடித்தது. இதில் வன்முறையில் ஈடுபட்டதாக முஸ்லிம்களின் வீடுகளை மட்டும் அரசு இடித்து தள்ளியுள்ளது. இதனால் பலர் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். “அரசின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாட உள்ளோம்” என்று போபால் ஷஹர் காசி…

மேலும்...

இஃப்தார் நோன்பு துறக்கும் நேரத்தில் காவல்துறை முஸ்லிம் இளைஞர் மீது தாக்குதல்!

கார்கோன் (15 ஏப் 2022): மத்திய பிரதேசம் கார்கோனில் வெடித்த கலவரத்தைத் தொடர்ந்து முஸ்லிம்கள் குறிப்பாக காவல்துறையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். காவல்துறையின் மிருகத்தனத்தை பிரதிபலிக்கும் ஏராளமான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன. கலவரத்தால் பாதிக்கப்பட்ட நகரின் சில பகுதிகள் 144 பிரிவின் கீழ் ஊரடங்கு உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. பத்திரிக்கையாளர் அர்பாப் அலி பகிர்ந்துள்ள வீடியோவில், ஞாயிற்றுக்கிழமை நகரில் வெடித்த கலவரத்தின் போது , நோன்பு திறக்கும் வேளையில் பால் வாங்க வெளியே வந்த ஒரு…

மேலும்...

ராமநவமி கலவரம் – 70 வயது முஸ்லிம் மூதாட்டி மீது காவல்துறை கொடூர தாக்குதல் – வீடியோ!

கார்கோன் (12 ஏப் 2022): மத்திய பிரதேசம் கார்கோனில் 70 வயது முஸ்லிம் மூதாட்டி மீது காவல்துறையினர் கொடூர தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். வட மாநிலங்களில் ராமநவமி ஊர்வலத்தால் ஏற்பட்ட வன்முறை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தின் கலவரத்தால் பாதிக்கப்பட்ட நகரமான கார்கோனில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்ட பிறகும், காவல்துறை அதிகாரிகள் ஏப்ரல் 11 அதிகாலை பிலால் மசூதியின் கதவுகளை உடைத்து நுழைந்து அங்கிருந்தவர்களிடம் பயத்தின் சூழலை உருவாக்கியுள்ளனர். மசூதியின் எதிரில் இருந்த வீட்டிற்குள்…

மேலும்...

மத்திய பிரதேசத்திலும் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்த கல்லூரி!

போபால் (15 பிப் 2022): கர்நாடகாவில் தொடங்கிய ஹிஜாப் தடை விவகாரம் தற்போது மத்திய பிரதேசத்திற்கும் பரவியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில், டாடியா மாவட்டத்தில் உள்ள அக்ரானி அரசு தன்னாட்சி முதுநிலை கல்லூரி திங்கள்கிழமை ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதில் மாணவர்கள் ‘மதம் சார்ந்த’ உடைகள் அணிவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் அணிந்திருந்த இரு மாணவிகளுக்கு எதிராக காவி சால்வை அணிந்த இளைஞர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, கல்லூரி…

மேலும்...

கொரோனா என்னை தாக்காது – மாஸ்க் அணியாத அமைச்சர் தரும் விளக்கம்!

போபால் (12 ஜன 2022): மத்தியப் பிரதேச அமைச்சரும் பாஜக தலைவருமான உஷா தாக்கூர், கொரோனா என்னை தாக்காது என்று கூறிக் கொண்டு மாஸ்க் அணியாமல் பொதுவெளியில் உலா வருகிறார். இந்தியாவில் அதி வேகத்தில் கொரோனா பரவி வருகிறது . இந்நிலையில் மத்திய பிரதேச சுகாதரத்துறை அமைச்சர் உஷா தாக்கூர், தனக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்றும், கடந்த 30 ஆண்டுகளாக அக்னிஹோத்ர பூஜை செய்து வருவதாகவும் கொரோனா என்னை தாக்கது என்பதாகவும் கூறி மாஸ்க்…

மேலும்...